இலங்கையின் தமிழ்ப் பிரதேசங்களின் ஒழுங்கமைந்த வரலாற்று பற்றிப் பார்க்கின்ற போதுதான் முக்கியமான ஒருவிடயத்தினை அவதானிக்க முடிகின்றது. தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகள் எவற்றிற்கும் ஒரு தொடர்சியான வரலாற்று தெளிவாக இல்லை என்பது அங்கு புலனாகின்றது. தென் இந்தியத் தொடர்புகள், வாணிபம், போர் நடவடிக்கை எனவும் யாழ்ப்பாண வன்னி இராச்சியங்களின் எழுச்சிகளும் வீழ்ச்சிகளும் என ஆங்காங்கே நடந்த சில சம்பவங்களை வைத்துத்தான் தமிழ்ப் பிரதேசங்களின் வரலாற்றினை தொடுக்க வேண்டியிருக்கின்றது. இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால், தமிழர் பிரதேசங்களின் பிரதேச வாழ்நிலைகளினூடாக