அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை. இரண்டு வருடங்களுக்கு முன்னர்.. இதே நாள் இதே நேரம்.. எத்தனை பேர் தங்கள் உயிரைக் கையில் பிடித்துகொண்டு தவித்துக் கொண்டிருப்பார்கள். புகழ் மிக்க மக்கள் சமுதாயம் ஒன்று மிகக் கோரமான யுத்த அசுரனிடம் சிக்கி தங்களின் எஞ்சியிருந்த உயிர்களுக்கா பரிதவித்துக் கொண்டிருந்த நேரம். கண்முன்னே உடன் பிறப்புக்களும் தன் குழந்தைகளும் உடல் சிதறிப் பலியாவதைப் பார்த்து கண்ணீராக இரத்தம் வடிந்த மக்கள் அதனைத் துடைக்க அவகாசம் இன்றி
இன்றைய விடியலுடன் தமிழகத்தின் தேர்தல் களத்தில் இறுதிக் கட்டப் பலப் பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ளன. இம்முறை தமிழகத் தேர்தல் பலவித்தியாசமான அனுபவங்களை சந்தித்திச் செல்கின்றது. தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு ஒரு மாதத்திற்குள்ளாகவே தேர்தல் நடைபெறுவதும், கோடிக்கணக்கில் பறக்கும் படையிடம் பிடிபடும் கறுப்புப் பணங்களும், பறக்கும் படையினை விமர்சித்தவர்கள் கைது செய்யப்படுவதும், பிளாஸ்டிக் வகை சுவரொட்டிகள் முற்றாக நீங்கப்பட்ட தேர்தலாகவும், மாறி மாறி இலவசங்களால் நிறம்பிய தேர்தல் வாக்குதிகளும், தேர்தலுக்கு நான்கு நாட்களுக்கு முன்னர்தான் வெளியிடப்பட்ட நகைப்புக்குளான காங்கிரஸின் தேர்தல்