என்ன சொல்லுகிறீர்கள் மந்திரியாரே ? ஆம் மகாராணி! நமது மன்னர் போரிலே வெற்றி பெற்று வேங்கிநாட்டு மன்னனை கொன்று படையினரை புறமுதுகு காட்டி ஓட விட்டு விட்டார். பரிவாரங்களுடன் மன்னர் அரண்மனைக்கு வந்துகொண்டிருக்கின்றார். என் மனம் இப்போதுதான் அமைதியுறுகின்றது மந்திரியாரே. மிக்க நன்றி! என் மனமுகந்த தகவலை விளம்பியதற்கு. வாருங்கள் சேடிப் பெண்களே மன்னனை அரண்மனை வாசலிலேயே வைத்து ஆரார்த்தி எடுத்து வரவேற்போம். என்று அந்தப்புரத்து சேடிப்பெண்கள் சதிதம் அரண்மனை வாசலுக்கு விரைந்தாள் சோழ அரசின் மகாராணி