கண்ணாடிக்குள் பிம்பம் அதை இவள் காட்டினாள்.. கேட்காத ஓர் பாடல் அதில் இசை மீட்டினாள்.. தெய்வத் திருமகளினைப் பார்த்துவிட்டு திரையரங்கினை விட்டு வெளியே வரும் விழிகளினோரம் ஈரம் வந்து குடை ஒன்று கேட்டதே.. விழிகளின் மீதிலே சிலதுளியும், உதட்டினில் மெலிதாய் ஒரு புன்னகையுமென திரையரங்கிலிருந்த வெளியே வருகின்ற அனைத்து முகங்களையும் அலங்கரிக்கச் செய்திருந்தது தெயவத்திருமகள். மீண்டும் ஒர் அழகான ஓவியம் தமிழ் சினிமாவில் தீட்டப்பட்டுள்ளது. முழுமையான படைப்பு ஒன்று. அத்தனை அம்சங்களும் நிறைந்திருந்து மனதினையும் நிறைத்திருந்தது இந்தப்
மெல்லிசையே என் இதயத்தின் மெல்லிசையே என் உறவுக்கு இன்னிசையே என் உயிர் தொடும் நல்லிசையே.. என் நீண்ட இரவுகளிலும் நெடுந்தூரப் பயணங்களிலும் பலசமயங்களில் என் துணையாக வந்திருந்த சுவர்ணலதா இன்று இல்லை என்னும் போது ஏதோ மனதினுள் கனக்கின்ற உணர்வு. என் செவிகளுக்குள் ஊடுருவி இதயம் வரை நுழைந்து என் உணர்வுகளை இனிமையாக கட்டிப் போட்ட மானசீகக் குரலுக்கு சொந்தக்காரி சுவர்ணலதா. போதும் போதும் என செவிகள் சொன்னாலும் இன்னும் வேண்டும் உன்குரலில் மயங்கிடும் இன்பம் என