[ மொரட்டுவைப் பல்கலைக்கழக பொறியியற் பீடத்தில் வருடாந்தம் மலரும் சங்கமம் சஞ்சிகையின் 2008ம் வருட பிரதியில் பிரசுரிக்கப்பட்ட ஆக்கம் – இங்கே மீள்பதிவாகின்றது. ] சங்கமம் இதழிற்கு ‘எதையாவது’ எழுதித்தாடா! என்று என் நண்பன் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டான். எதையாவது எழுதுவது என்றால் எதை எழுதுவது. எதனைக் கருப்பொருளாக எடுத்துக்கொள்வது? இணைய வலைப்பதிவூகளில் எழுதுவது போன்று இங்கு அதாவது பலரதும் அபிமானம் பெற்ற இச்சஞ்சிகையில் ‘எதையாவது’ எழுதமுடியாது. இணைய வலைப்பதிவூகளைப் போலல்லாது இச் சஞ்சிகையை வாசிக்கும் வாசகர்களுக்கு எனது