Tag: குறுப்பு
கிட்டத்தட்ட பத்து வருடங்கள் இருக்கும், அந்த மாயாவி வீரனை நான் பிரிந்து. கடைசியா ராணிக் கமிக்ஸில் மாயாவியினை சந்தித்தது ஈராயிரத்து-மூன்றில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவர் முதல்வர் அறையினுள்ளே. ஆண்டு எட்டு படிக்கும் மாணவன் ஒருவன் பாடசாலை நிறைவடையும் போது இசைக்கப்படும் பாடசாலைக் கீதத்திற்கு மரியாதை தருவதற்காக எழுந்து நின்று, தனது மேசையின் கீழ் உள்ள சிறிய தட்டில் ஒரு ராணிக்கமிக்ஸினை திறந்து ஒளித்து வைத்து களவாகப் படித்துக்கொண்டு நின்றான். அந்த நேரத்தில் அங்கு மாணவர்களைக் ஒழுங்கமைக்க
Read Moreஅவ மூக்கு மேல வேர்வையாகணும் இல்ல நாக்கு மேல வார்த்தையாகணும் அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகணும் இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகணும்.. மெல்ல கண்களை மூடியபடி சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயிலில் நிலக்கீழ் பாதைவழி வீடு நோக்கிய பயணம் ஒன்றில்தான் எனக்கு அறிமுகமாகியது இந்தப் பாடல். காதுகளுக்குள் தணிந்த குரலில் ஐபோனில் ஒலித்துக் கொண்டிருந்த இலங்கையின் வெற்றி வானொலிதான் எனக்கு அறிமுகப்படுத்தியது. பல்லவியிலேயே என் மனதினை ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டது பாடல். பாடல் தொடரத் தொடர என்னை
Read Moreகண்கள் காணும் காட்சியாவும் உண்மையாகுமா?? காட்சிகளில் பிறழ்வு ஏற்பட்டால் அதற்கு நமது கண்ணினைப் பிழை சொல்லாமா? பொதுவாக இயற்பியலில் மாயத்தோற்றம் பற்றி கேள்விப்பட்டு இருப்போம். இல்லாத ஒரு பொருளின் காட்சியமைப்பையே இந்த மாயத்தோற்றம் தருகின்றது. கீழ் உள்ள படத்தினைப் பாருங்கள். உங்கள் கண்களினுள் சிறந்த மாயத் தோற்றத்தை இந்தப் படத்தின் மூலமாக ஏற்படுத்த முடியும். முதலில் உங்கள் கண்களை இலகுவாக்கி கொள்ளுங்கள். பின்னர் கீழ் உள்ள படத்தின் மையப்பகுதில் தெரியும் நான்கு சின்ன கறுத்த புள்ளிகளில் உங்களின்
Read Moreடிவிட்டர் டிவிட்டர் டிவிட்டர்… எங்கு காணினும் டிவிட்டரடா.. அண்மையில் அசினின் டிவிட்டரை தான் கண்டுபிடித்ததாகவும் ஆனால் திடீர் என்று அது காணாமல் போய் விட்டாகவும் பின்னர் மீண்டும் அசின் டிவிட்டரில் உயிர்பெற்றதாகவும் ஒரு டிவிட்டர் புரட்சி ஒன்றை செய்திருந்தார் நம்ம சாரல் சயந்தன். என்னடா இது என்று பார்த்தால் உண்மையில் அது அசினின் டிவிட்டர் தானா என்பதே பெருத்த சந்தேகமாக இருந்தது. நேற்று நம்ம புல்லட் அண்ணா திடீர் என்று துள்ளிக் குதித்தார். ஏன் என்று பார்த்தால்
Read Moreநீ வரும் வேளைகளில் எல்லாம் என் வாசல்களில் பன்னீரைத் தூவுகின்றது மழை நீ இல்லாத வேளைகளில் எங்கே சென்றதுவோ! இப்போது தான் புரிந்தது நீயும் மழைத்துளியும் ஒன்றுதான் என்று தொட்டுக் கொள்ளும் போதெல்லாம் சிலிர்த்து உருகி என் கையிரண்டில் தவழ்ந்து போகையில்! மரணிக்கும் நேரத்திலும் சொர்க்கம் என்றால் என்ன என்பதை அனுபவிக்கின்றன என்கின்றேன் நான் உன் மார்போடு விழுந்து சில்லுகளாகச் சிதறும் மழைத்துளிகளினைப் பார்த்து ஆனால் அவை உனது மானசீகத் தோழிகளின் அணைப்பு என்கின்றாயே நீ நீ
Read Moreகண்கள் எழுதும் காதற் கடிதங்கள் கண்ஜாடை மெல்லச் சிரிப்பாள் .. சட்டென்று கோவிப்பாள் .. உரிமையோடு மிரட்டுவாள் .. நயமாகப் பணிவாள் .. பாசத்தோடு அணைப்பாள் .. மிரளவைக்க நாணுவாள் – ஜாடையில் இத்தனையும் என் ராதையின் அந்த நளினம் பேசும் கண்களில் நான் தினம் தினம் படிக்கும் புதுக்கவிதைகள்.
Read Moreகண்கள் – அவை காதலின் தொடக்கப் புள்ளி காதலென்னும் காவியத்தின் பல்லவி வரிகள் கனவுகள் சஞ்சரிக்கும் நித்திய வானம்…. இவற்றை எல்லாம் விட – அவை உனை ரசிக்க இறைவன் எனக்கருளிய வரப்பிரசாதம் அன்றோ!
Read More