Tag: காதல்
“அன்பே உன் பாதமென் சுப்ரபாதம் ஆனந்த சங்கமம் தந்த பாதம் என் வாழ்வில் வேறேதும் வந்தபோதும் எந்நாளும் உன் பாதம் ரெண்டு போதும்.. ” தொடர்க.. இளமை ததும்பலில் என்றும் மயங்கவைக்கும் குரல், அழுத்தமாக உச்சரிக்கும் வசனங்கள் என பாடவந்த முதல்பாடலிலேயே தன் வசீகரக் குரலினால் தமிழ் திரை இசையில் தனக்கெனத் தனியிடத்தினை ஒதுக்கிக் கொண்டவர் சுனந்தா. காதலின் மென்மையினை இசையின் மூலம் உணர்த்த சித்ரா, ஸ்வர்ணலதா வரிசையில் இளையராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் பாடகி சுனந்தா. புதுமைப் பெண்(1983)
Read Moreகண்ணாடிக்குள் பிம்பம் அதை இவள் காட்டினாள்.. கேட்காத ஓர் பாடல் அதில் இசை மீட்டினாள்.. தெய்வத் திருமகளினைப் பார்த்துவிட்டு திரையரங்கினை விட்டு வெளியே வரும் விழிகளினோரம் ஈரம் வந்து குடை ஒன்று கேட்டதே.. விழிகளின் மீதிலே சிலதுளியும், உதட்டினில் மெலிதாய் ஒரு புன்னகையுமென திரையரங்கிலிருந்த வெளியே வருகின்ற அனைத்து முகங்களையும் அலங்கரிக்கச் செய்திருந்தது தெயவத்திருமகள். மீண்டும் ஒர் அழகான ஓவியம் தமிழ் சினிமாவில் தீட்டப்பட்டுள்ளது. முழுமையான படைப்பு ஒன்று. அத்தனை அம்சங்களும் நிறைந்திருந்து மனதினையும் நிறைத்திருந்தது இந்தப்
Read Moreஅவ மூக்கு மேல வேர்வையாகணும் இல்ல நாக்கு மேல வார்த்தையாகணும் அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகணும் இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகணும்.. மெல்ல கண்களை மூடியபடி சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயிலில் நிலக்கீழ் பாதைவழி வீடு நோக்கிய பயணம் ஒன்றில்தான் எனக்கு அறிமுகமாகியது இந்தப் பாடல். காதுகளுக்குள் தணிந்த குரலில் ஐபோனில் ஒலித்துக் கொண்டிருந்த இலங்கையின் வெற்றி வானொலிதான் எனக்கு அறிமுகப்படுத்தியது. பல்லவியிலேயே என் மனதினை ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டது பாடல். பாடல் தொடரத் தொடர என்னை
Read Moreஒரு கையில் சின்ன மரப் பொச்சுக்களாலான கூட்டினைத் தாங்கிய படியும் மறு கையில் சொட்டச் சொட்ட இரத்தம் வழிந்த படியும் அவசரமாக வீட்டினை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தாள் வாசுகி. “ஒரு கெல்ப் பண்னேண்டா சுதா..” வீட்டுக்குள் தன் ஒரு வயதுக் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த சுதாகரை அழைந்தாள். என்ன வாசு எனத் திரும்பிப் பார்த்த சுதாகர் ஏங்கிப்போனான். “என்னடி இது.. வாசு..” அவள் கைகளில் சொட்டிக் கொண்டிருந்த இரத்தத் துளிகளைப் பார்த்து பதறிப் போய் அவள் கைகளைப்
Read Moreமேகத்தில் இருந்து கால் தவறி ஒரு மழைத் துளி விழுந்து விடுகின்றது. கால்தவறித்தான் விழுந்தாலும் அடுத்த சில கணங்களில் சுதாகரித்துக்கொண்டு மெல்ல கீழ் நோக்கி தலையைத் திருப்புகின்றது அந்த துளி. அம்மாடியோவ்.. என்ன ஒரு ஆழத்தில் விடுந்துவிட்டேன்.. என் கதை இத்தோடு முடிந்ததுதான். என எண்ணும் போது கீழ் இருந்து தன்னை யாரோ பலமாக இழுப்பதனை உணர்கின்றது அந்த மழைத்துளி. எத்தனை பலங்கொண்டும் எதிர்த்தும் முடியவில்லை. துளியின் வேகம் அடுத்த கணங்களுக்குள் பலமடங்காகத் தொடங்குகின்றது. கைப்பற்றி தப்பிக்கவும்
Read Moreமயிலிறகு கொண்டு இதயம் வருடும்உன் மெல்லிய பார்வைகள் அங்கே மடையிலா புனல் தடைதிறக்கும் அன்பாய் உன் கனிசான பேச்சு அங்கே மலரோடு கூடும் வண்டினம் புரியும் உன் செல்லக் குறும்புகள் அங்கே மலைமீது தவழும் கரு மேகவிதானம் உன் கலைந்துள்ள கேசம் அங்கே கரையாக நீயும் கரைதேடி நானும் கடல்தாண்டி இங்கே கனக்கின்ற காதல் கழிகின்ற காலம் கடும் சுமையாக இங்கே கடலோடு வானம் கலக்கின்ற உறவாய் தொடுவானத் தீண்டல் நினைவோடு இங்கே கனக்கின்ற மனத்தில் கவிதை
Read Moreமுழுமதி உன் முகமதில் வளர்பிறையோ உன் நுதலதில் இளம்பிறை மீதொரு முழுமதி நின் தளிர்விரல் தொட்டிட்ட சாந்து பொட்டதோ.. குளிர் மலர்ச்சோலை மஞ்சம் நின்நெஞ்சம் தனில்லாடும் என்னிதயம் முத்துச்சரம் நீ என்தாரணி உன் மதங்கம் மீட்டும் விழியிரண்டில் என் காதல்மீட்ட வந்தேனடி நீயென் மதுரம் பகராய் மனதென் நுகராய் கண்டால் நீ மாயமாய் கண்ணில் நிறதீப சில்மிசம் காணா கமலமலரின் மணமாய் நீ நாளை வருமோ..
Read Moreகாதலை தேடிக்கிட்டு போக முடியாது… அது நிலைக்கணும்… அதுவா நடக்கணும்… நம்மள போட்டு தாக்கணும்… தலைகீழ போட்டு திருப்பணும்… எப்பவுமே கூடவே இருக்கணும்… அதான் ட்ரூ லவ்… அது எனக்கு நடந்தது!… விண்ணைத்தாண்டி வருவாயா – மின்னலேயின் பின்னர் முழுக்க முழுக்க காதலை மட்டும் வைத்து கௌத்தம் மேனனால் செதுக்கப்பட்ட அழகான காதல் சிற்பம் இந்த விண்ணைத் தாண்டி வருவாயா. எந்தவிதமான அடதடி வீர வசனங்கள் இல்லாமல் யதார்தமாக காதலை மட்டும் நம்பி கதையினை மெல்ல அழகாக
Read Moreகண்கள் நான்கும் மலராகும் காதல் அதில் தேனாகும் பார்வை வண்டுகள் தேன்தேடும் அதில் இன்பம் எனும்விதை கருவாகும் மொனம் கூட மொழியாகும் பிறர் புரியா பார்வை அதில் நயமாகும் மொன மொழிகள் தினம் வளரும் காதலலங்காரம் அதன் பொழிப்பாகும் வான் மேகம் கூட தூதாகும் கடிதம்தனில் அவை காதல் முத்திரைகுத்தும் அடை மழை தீண்டல் புதிதாகும் சாரல்தனில் அவை புதுப்புலன்தேடும் வாடி போடி கூட இனிதாகும் பரஸ்பரம் என்பது இங்கு உறவாகும் காரணமில்லாக் கோபம் தினதாகும் அதில்
Read Moreஅதே கணிதபாட பிரத்தியேக வகுப்பறையின் கரும்பலகையில் சில சமன்பாடுகள் திரிகோண கணிதத்தில் சமனிலிகளுக்கான அந்த சமன்பாடுகள் கரும்பலகையென்னும் பிரபஞ்ச வெளியில் முடிவற்று விரிந்து கொண்டேயிருந்தன.. சோவென அடித்துக் கொட்டும் மழையில் நனைந்த விட்டில் பூச்சிகள் பல குளிர்காய அந்த அறையில் மின் விளக்கை வட்டமடித்தபடி.. சுமந்து வந்த ஈரம் நீங்க விளக்கை முட்டி முட்டி மோதி தங்களை உலர்த்திக்கொண்டிருந்தன அந்த விட்டில்கள்… வகுப்பறையின் முதல் வாங்கின் ஓரத்தில் என்னவள் கடைசி வரிசை வாங்கின் ஓரத்தில் நான் சிக்கியிருந்தோம்
Read More