முல்லையும் தென்றலும் கூடி விளையாடும் உங்கள் வீட்டு முற்றத்திற்கு புதுக்கோலம் போடவந்த மகவு நான். என் அன்னையின் மார்சுரக்கும் திசுக்களில் பாய்ந்த இலத்திரன்களையும், என் தந்தையிடம் நான் பெற்ற கணித அறிவியலையும், ஊடகமாக்கி, எங்கும் என்றும் தமிழர் வாழ்வியலை வியாவிக்கச் செய்ய பிறந்த குழந்தை நான். எனக்கு இல்லை வேலி.. என்னை அடைக்க எதுவும் இங்கு இல்லை.. என்ன.. நான் யார் என்றா சிந்திக்கின்றீர்கள்…. நான்தான்… ஆறாம் திணை! பூச்சியமும் ஒன்றும் கொண்ட காதலில் மலர்ந்த முதற்குழந்தை