சரியான நேரத்தில் சரியான கேள்விகளினால் தமக்கு தேவையானவற்றை வெல்லுகின்ற திறமை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. தொழில் தளங்களிலோ அல்லது அதற்கு வெளிக் களங்களிலோ ஏற்படுகின்ற தேவையற்ற விடயங்களில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளவும், எமது எதிர்பார்ப்புக்களை வெற்றி கொண்டு நினைத்தவற்றை அடையவும் இந்தத் திறமை நிட்சயமாக அவசியம். அதாவது கேள்வி என்ன தந்திரத்தின் மூலம் நாம் எமது இலக்குகளை இலகுவாக அடைந்து விடலாம். எமது நண்பர்கள், அலுவலக நண்பர்கள், ஊழியர்கள், மேலும் அலுவலக மேலதிதாரிகளுடன் நாம் பல சமயங்களில்