logo

Tag: அரசியல்

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்..

May 13, 2011

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை. இரண்டு வருடங்களுக்கு முன்னர்.. இதே நாள் இதே நேரம்.. எத்தனை பேர் தங்கள் உயிரைக் கையில் பிடித்துகொண்டு தவித்துக் கொண்டிருப்பார்கள். புகழ் மிக்க மக்கள் சமுதாயம் ஒன்று மிகக் கோரமான யுத்த அசுரனிடம் சிக்கி தங்களின் எஞ்சியிருந்த உயிர்களுக்கா பரிதவித்துக் கொண்டிருந்த நேரம். கண்முன்னே உடன் பிறப்புக்களும் தன் குழந்தைகளும் உடல் சிதறிப் பலியாவதைப் பார்த்து கண்ணீராக இரத்தம் வடிந்த மக்கள் அதனைத் துடைக்க அவகாசம் இன்றி

Read More

தமிழக தேர்தல் களம்- ஒரு பார்வை

April 12, 2011

இன்றைய விடியலுடன் தமிழகத்தின் தேர்தல் களத்தில் இறுதிக் கட்டப் பலப் பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ளன. இம்முறை தமிழகத் தேர்தல் பலவித்தியாசமான அனுபவங்களை சந்தித்திச் செல்கின்றது. தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு ஒரு மாதத்திற்குள்ளாகவே தேர்தல் நடைபெறுவதும், கோடிக்கணக்கில் பறக்கும் படையிடம் பிடிபடும் கறுப்புப் பணங்களும், பறக்கும் படையினை விமர்சித்தவர்கள் கைது செய்யப்படுவதும், பிளாஸ்டிக் வகை சுவரொட்டிகள் முற்றாக நீங்கப்பட்ட தேர்தலாகவும், மாறி மாறி இலவசங்களால் நிறம்பிய தேர்தல் வாக்குதிகளும், தேர்தலுக்கு நான்கு நாட்களுக்கு முன்னர்தான் வெளியிடப்பட்ட நகைப்புக்குளான காங்கிரஸின் தேர்தல்

Read More

ஏன் இந்த நிலை யப்பானுக்கு ? – ஓர் ஆய்வு

March 14, 2011

யப்பான் எங்குமே சோகக் கடல் நிரம்பி வழிகின்றது. அதுவும் யப்பானின் வடகிழக்குக் கரைப் பகுதியில் அந்த சோகக்கடலின் அலைகள் தாக்கிய வேகத்தினை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை எனலாம். அடுத்தடுத்து இடைவிடாது யப்பானை உலுக்கிக் கொண்டிருக்கின்றது இயற்கையின் சீற்றங்கள். யப்பான் வரலாற்றில் இதுவரை பதிவாதாத ரிச்சர் அளவில் தாக்கிய நிலநடுக்கத்தின் [ 1 ] பாதிப்புக்களும் வீரியமும் அடங்கும் முதல் சுனாமிப் பேரலைகள் யப்பானின் கிழக்குக் கரையில் கோரதாண்டவம் ஆடிவிட்டுச் சென்றது. நிலநடுக்கமும் சுனாமியலைகளும் யப்பானுக்கோ யப்பான் மக்களுக்கோ

Read More

அரச முடிசூட்டு விழாவும் (Royal Coronation) கின்னஸ் கிரிபத்தும் தேவைதானா?

November 19, 2010

“நீயே பயம் என்னும் இருளை அகற்றி நாளைய பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும் சூரியனும் அந்த சந்திரனும்!” கொழும்பு முதல் அம்பாந்தோட்டை வரை எங்கும் காணப்படும் வீதியோர வாழ்த்துப் பதாதைகளில், அனேகமாக சிங்கள மொழியிலும் ஆங்காங்கே தமிழிலும் காணப்படும் வாசகம் அது. Picture-‘Sri Lanka President sworn-in ceremony for a second term’ courtesy Dailymirror.lk மகிந்த இராசபக்சவினது “அரச முடிசூட்டு விழா”(Royal Coronation) இன்று இலங்கை தலைநகர் கொழும்பில் மிகவும் ஆர்ப்பாட்டான முறையில் நடந்தேறியது. பல

Read More

இன்னும் ஓர் உரிமைப் போர்!

October 11, 2010

“நாங்கள் முன்னர் குடியிருந்தோம். இப்போது இங்கே நாங்கள் மீளக்குடியமர எங்களுக்கு அரசகாணிகளை பகிர்ந்து தாருங்கள்..” யாழ்ப்பாணத்தில் புகையிரத நிலையக் கட்டடத்தில் வந்து தங்கியிருக்கும் 193 சிங்கள குடும்பங்கள் யாழ்ப்பாண அரச அதிபருக்கும் ஜனாதிபதிக்கும் அனுப்பியிருக்கும் மனுவின் சாரம்சம் இது. எங்கள் சொந்த நிலத்தில் சொந்த வீட்டீல் எங்களை வாழவிடாது எல்லாவழிகளையும் மூடிவிட்டு முன்னர் எங்களிடம் வாடகைக்கு குடியிருந்தவர்களுக்கு எங்களுடைய வீடுகளையும் நிலத்தையும் கொடுக்கத் தயாராகின்றது சிங்கள அரசு. 1983 முன்னர் தாங்கள் தமிழ் மக்களோடு ஒன்றாக வாழ்ந்தகவும்

Read More

18 ஆவது அரசியலமைப்பு திருத்தம்!

September 7, 2010

வரலாறு கற்றுத் தந்த பாடங்களில் இருந்து மனிதன் எதையாவது கற்றுக் கொள்கின்றானா என்றால் இல்லை என்றே பதில் கூறவேண்டும். எப்போதும் வரலாறு சுழன்று சுழன்ற மனித வாழ்வியலில் மீண்டு வந்துகொண்டே இருக்கும். அது ஒரு வட்டப் பாதை. ஆனால் அந்த வட்டப்பாதையில் இருந்த மனிதன் கற்றுக்கொள்வது என்பது ஒன்றுமே இல்லை. 18 ஆவது அரசியலமைப்பு திருத்தம்(18th Amendment) இலங்கையில் அமுல்படுத்தப்படுவதற்கான காலம் வெகுதூரத்தில் இல்லை. கொஞ்சம் நெஞ்சமாக இருக்கும் ஜனநாயகத்திற்கும் ஒட்டு மொத்தமாக சாவுமணி அடித்து பள்ளத்தாக்கில்

Read More

அன்று வேங்கியில் இன்று ….

September 4, 2010

என்ன சொல்லுகிறீர்கள் மந்திரியாரே ? ஆம் மகாராணி! நமது மன்னர் போரிலே வெற்றி பெற்று வேங்கிநாட்டு மன்னனை கொன்று படையினரை புறமுதுகு காட்டி ஓட விட்டு விட்டார். பரிவாரங்களுடன் மன்னர் அரண்மனைக்கு வந்துகொண்டிருக்கின்றார். என் மனம் இப்போதுதான் அமைதியுறுகின்றது மந்திரியாரே. மிக்க நன்றி! என் மனமுகந்த தகவலை விளம்பியதற்கு. வாருங்கள் சேடிப் பெண்களே மன்னனை அரண்மனை வாசலிலேயே வைத்து ஆரார்த்தி எடுத்து வரவேற்போம். என்று அந்தப்புரத்து சேடிப்பெண்கள் சதிதம் அரண்மனை வாசலுக்கு விரைந்தாள் சோழ அரசின் மகாராணி

Read More

தேர்தல் முடிவுகள் விட்டுச்சென்றுள்ள உண்மைகள்

January 27, 2010

இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான, மிகவும் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்கப்பட்ட தேர்தல் இன்று (27-01-2010) கணிப்புக்களை தவிடுபொடியாக்கி நிறைவினை நோக்கி வந்துள்ளது. சற்று முன்னர் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸ்ஸநாயகத்தினால் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்ட அறிக்கையின் படி அதிமேதகு ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஜ அவர்கள் 6.01 மில்லியன் வாக்குகளைப் பெற்று முன்னிலையில் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தன்னோடு போட்டி இட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத்

Read More

இலங்கையின் தேர்தல் களத்தில் ஒரு கரகாட்டம்

January 7, 2010

இஞ்சி குடுத்து மிளகு வாங்கிய வரலாறு அந்தக் காலம். ஆனால் மந்திரவாதியை விரட்ட பேய் ஒன்றினை வரவைக்க வேண்டிக்கிடக்கின்றது இன்றைய காலத்தில். 2010 ஜனவரி 26 – இலங்கை சோசலிசக் குடியரசின் 6ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. முப்பது வருடங்களாக தமிழரின் உரிமையை மீட்டெடுக்க தமிழீழ விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட இலங்கை அரசுடனான போரின் முடிவுரை தற்போதைய ஜனாதிபதியினால் கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் எழுதி வைக்கப்பட்டது. பல்லாயிரம் அப்பாவி உயிரகளைக்

Read More

Humanitarian Rescue mission

August 9, 2009

I don’t like to say any words about these pictures. You have to read the pictures and feel the truth behind them. What do u mean by humanitarian rescue mission? We all are congratulating you, but its absolutely a rigged one! you have colonised them again.. Now happy with the control in there wit and

Read More

Recent Posts

  • அழகிய விழியாள் தரிசனம் தேடி
  • நாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம்
  • “வாய் பேசிடும் புல்லாங்குழல்” – பாடகி சுனந்தா
  • நான்தான்… ஆறாம் திணை!
  • மரபணுக்களை எம்மால் மாற்றியமைக்க முடிந்தால்…?. இது ஏழம் அறிவு
  • மாயாவியுடன் சில காலம்
  • ஊஞ்சல் iOS அலைபேசி இணைய உலாவிகளில்
  • ஒரு குட்டி ஏஞ்சல் – தெய்வத் திருமகள்
  • மனிதாபிமானம் பலியாகும் போது…

Copyright ஊஞ்சல் 2023 | Powered by WordPress