கண்கள் – அவை காதலின் தொடக்கப் புள்ளி காதலென்னும் காவியத்தின் பல்லவி வரிகள் கனவுகள் சஞ்சரிக்கும் நித்திய வானம்…. இவற்றை எல்லாம் விட – அவை உனை ரசிக்க இறைவன் எனக்கருளிய வரப்பிரசாதம் அன்றோ!
என்ன ஒரு இன்ப அதிர்ச்சி.. நமக்கும் சுவாரஸ்ய பதிவர் விருது அளித்திருக்காங்க.. “சும்மா” என்று வலையில் பூத்து தினமும் தமிழ்மணம் பரப்பும் பூவினை மெருகூட்டும் வலசு – வேலணை என்ற பெயரில் உலாவரும் ….(பெயர் தெரியவில்லை) என்பவரின் கைகளால் நான் இந்த விருதைப் பெற்றிருப்பது என்னை சந்தோசக் கடலில் மிதக்க வைக்கின்றது. இவரின் வேரென நீயிருந்தாய்.. என்ற தொடரில் பூத்துக் குலுங்கும் பூக்களை நான் மிகவும் இரசித்ததுண்டு. அவற்றை விட புத்தனின் புதிய ஞானம் மற்றும் மூன்றாவது