Tag: அனுபவம்
கிட்டத்தட்ட பத்து வருடங்கள் இருக்கும், அந்த மாயாவி வீரனை நான் பிரிந்து. கடைசியா ராணிக் கமிக்ஸில் மாயாவியினை சந்தித்தது ஈராயிரத்து-மூன்றில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவர் முதல்வர் அறையினுள்ளே. ஆண்டு எட்டு படிக்கும் மாணவன் ஒருவன் பாடசாலை நிறைவடையும் போது இசைக்கப்படும் பாடசாலைக் கீதத்திற்கு மரியாதை தருவதற்காக எழுந்து நின்று, தனது மேசையின் கீழ் உள்ள சிறிய தட்டில் ஒரு ராணிக்கமிக்ஸினை திறந்து ஒளித்து வைத்து களவாகப் படித்துக்கொண்டு நின்றான். அந்த நேரத்தில் அங்கு மாணவர்களைக் ஒழுங்கமைக்க
Read Moreவரலாற்றின் சாலையில் இருந்து ஈராயிரத்து பத்து கழிந்து செல்வதற்கான தூரம் இன்னும் சற்றுத்தான் இருக்கின்றது. கடந்து வந்த பாதையில் கண்ட சந்தோச சாரல்கள், சந்தித்த மனிதர்கள், புகட்டிய பாடங்கள், தித்தித்த நிமிடங்கள், கனத்த நொடிகள், பெற்ற வெகுமதிகள், வலித்த விபத்துக்கள், விபத்துக்கள் தந்த இழப்புக்கள்.. இன்னும் எத்தனையோ எத்தனையோ சங்கதிகள் எல்லாம் சிறிது நேரத்தில் இந்த ஈராயிரத்து பத்து என்னும் சாலையின் பணயக்குறிப்புகளாக பதியப்படப் போகின்றன. புதிதாக இன்னும் ஓர் புதிய சாலை எம்மை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றது.
Read Moreசரியான நேரத்தில் சரியான கேள்விகளினால் தமக்கு தேவையானவற்றை வெல்லுகின்ற திறமை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. தொழில் தளங்களிலோ அல்லது அதற்கு வெளிக் களங்களிலோ ஏற்படுகின்ற தேவையற்ற விடயங்களில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளவும், எமது எதிர்பார்ப்புக்களை வெற்றி கொண்டு நினைத்தவற்றை அடையவும் இந்தத் திறமை நிட்சயமாக அவசியம். அதாவது கேள்வி என்ன தந்திரத்தின் மூலம் நாம் எமது இலக்குகளை இலகுவாக அடைந்து விடலாம். எமது நண்பர்கள், அலுவலக நண்பர்கள், ஊழியர்கள், மேலும் அலுவலக மேலதிதாரிகளுடன் நாம் பல சமயங்களில்
Read Moreநீண்ட பெருவெளியில் பயணிப்பது போல நாம் வாழ்க்கை போய் கொண்டே இருக்கின்றது. அந்தப் பயணப் பாதை மென்மையா பூக்கள் சொரியும் மலர்ப் பாதையாக இருக்க வேண்டும் என்பதே பயணத்தில் ஈடுபட்டிருக்கும் அனைவரதும் விருப்பம். ஆனால் அந்தப் பயணப் பாதை அவ்வாறு ஒருவருக்கும் மலர்பாதையாக இருப்பதில்லை என்பதே தெளிவான உண்மை. வலிதரும் முட்களும் ஆள் விழுங்கும் புதைகுழிகளும் கசப்புக்கள் நிறைந்த பாலைநிலங்களும் என அந்தப் பாதை நெடுகிலும் பல்லாயிரம் குறைகள் அங்கே காணப்பட்டாலும் ஆங்காங்கே பன்னீர் என்னும் இன்ப
Read Moreஅதே கணிதபாட பிரத்தியேக வகுப்பறையின் கரும்பலகையில் சில சமன்பாடுகள் திரிகோண கணிதத்தில் சமனிலிகளுக்கான அந்த சமன்பாடுகள் கரும்பலகையென்னும் பிரபஞ்ச வெளியில் முடிவற்று விரிந்து கொண்டேயிருந்தன.. சோவென அடித்துக் கொட்டும் மழையில் நனைந்த விட்டில் பூச்சிகள் பல குளிர்காய அந்த அறையில் மின் விளக்கை வட்டமடித்தபடி.. சுமந்து வந்த ஈரம் நீங்க விளக்கை முட்டி முட்டி மோதி தங்களை உலர்த்திக்கொண்டிருந்தன அந்த விட்டில்கள்… வகுப்பறையின் முதல் வாங்கின் ஓரத்தில் என்னவள் கடைசி வரிசை வாங்கின் ஓரத்தில் நான் சிக்கியிருந்தோம்
Read Moreவீண் கோபம் என்னோடு ஏன் அன்பே உனக்காக நான் வரையும் மடலிது என் ஈர விழிகளுக்குள் நீ நுழைந்து கலகம் செய்த நாட்கள் எத்தனை என் சுயத்தோடு கண்ணாம்மூச்சி விளையாடி இதயவாசலில் நீ பின்னலிட்ட தோறணங்கள் எத்தனை என் மொனத் தவம் கலைக்க கடைவிழி வழியே நீ நாண் ஏற்றிய பாணங்கள் எத்தனை இத்தனையும் என் இதயத்கூட்டின் அத்தனை அறைகளிலும் நித்திய சிம்மாசனம் இட்டிடத்தானே என்றோ தந்து விட்டேனே இதயராணி என்னும் உரிமையை என் மானசீகக் காதலியாகி
Read Moreநீண்ட காலமாக வலைப்பூக்களின் பக்கம் வருவது அரிதாகவே இருக்கின்றது. அவ்வாறு வந்தாலும் சும்மா ஏதாவது கிறுக்கிவிட்டு சென்று விடுவதுதான் வழமை. வேலைத்தளத்தில் தலைக்கு மேல் உள்ள வேலைப்பழுவே காரணம். வேலை நேரத்தில் பதிவுலகத்தில் நீண்ட நேரத்தை செலவிடமுடியாமையே அதற்கான காரணம். அண்மையில் சக பதிவாளரும் என் பல்கலைக்கழக கனிஸ்ட நண்பருமான சுபாங்கனிடம் இருந்து கிடைத்த பட்டாம்பூச்சி விருதி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. அதுவும் கன்னி அரைச் சதத்தைத் தொட்டுக்கொள்ளும் போது விருது. இரடிட்டிப்பு மகிழ்ச்சி. அந்த விருதினைப்
Read Moreநீ வரும் வேளைகளில் எல்லாம் என் வாசல்களில் பன்னீரைத் தூவுகின்றது மழை நீ இல்லாத வேளைகளில் எங்கே சென்றதுவோ! இப்போது தான் புரிந்தது நீயும் மழைத்துளியும் ஒன்றுதான் என்று தொட்டுக் கொள்ளும் போதெல்லாம் சிலிர்த்து உருகி என் கையிரண்டில் தவழ்ந்து போகையில்! மரணிக்கும் நேரத்திலும் சொர்க்கம் என்றால் என்ன என்பதை அனுபவிக்கின்றன என்கின்றேன் நான் உன் மார்போடு விழுந்து சில்லுகளாகச் சிதறும் மழைத்துளிகளினைப் பார்த்து ஆனால் அவை உனது மானசீகத் தோழிகளின் அணைப்பு என்கின்றாயே நீ நீ
Read Moreநாம் கை கோர்த்து நடக்கும் போதெல்லாம் மழை மேகங்களுக்குச் சந்தோசமோ இப்படி ஆர்ப்பரிக்கின்றனவே முழக்கங்களாய் வெட்டி வெட்டிக் கண்சிமிட்டுகின்றனவே மின்னலாய் சில்லென ஒடுங்குகின்றனவே மழைத்துளிகளாய் உன்னைத் தானே தொட்டுக் கொண்டேன் மழைத்துளிகளுக்கு ஏன் இந்த நாணம் உன்னிடமே கடன் வாங்கி இப்படிச் சிலிர்க்கின்றனவே போதுமடி இனியும் கடன் கொடுத்து நிரந்தரக் கடனாளியாக்காதே மழைத் துளிகளை! நல்லாயிருந்தா தமிழிஸ் இல் வாக்களிக்க இங்கே சொருகுங்கள்.
Read Moreகண்கள் எழுதும் காதற் கடிதங்கள் கண்ஜாடை மெல்லச் சிரிப்பாள் .. சட்டென்று கோவிப்பாள் .. உரிமையோடு மிரட்டுவாள் .. நயமாகப் பணிவாள் .. பாசத்தோடு அணைப்பாள் .. மிரளவைக்க நாணுவாள் – ஜாடையில் இத்தனையும் என் ராதையின் அந்த நளினம் பேசும் கண்களில் நான் தினம் தினம் படிக்கும் புதுக்கவிதைகள்.
Read More