சில பாடல்கள் அப்படியே மனதின் அடி நாதத்தை வருடிச்சென்று விடுகின்றன. கேட்கக் கேட்கத் திகட்காமல் மேலும் மேலும் பாடலின் ஊடே இலயித்துப் போய்விடும் மனது. மென்மையாக பரவும் சங்கீதம் மனதின் அந்தரங்கத்தில் எப்போதும் மீள மீள ஒலிபரப்பாகிக் கொண்டே இருக்கும். அத்தகைய பாடல்கள் முன்னர் திரைப்படங்களின் ஊடாகவே மக்களின் மனங்களை அடைந்தது. ஆனால் இன்று பற்பல பாடல்கள் பல்வேறு வழிகளில் மனங்களை நிறைக்கின்றன. அது போலத்தான் இந்தப் பாடல் காதலிக்க நேரமில்லை என்ற விஐய்த் தொலைக்காட்சி தொடருக்காக
Read Moreஉன்னைக் காணாத பொழுதுகளில் என் விழி மடல் துடிக்கும் ஓசை உன் அனித்த செவிகளுக்கு ஏன் இன்னும் கேட்கவில்லையடி.. உன் விழிகளோடு பேசாதபோது என் விழிகளில் நிலவும் மௌன வறட்சி உன் ஈரக் கண்களுக்கு ஏன் இன்னும் தெரியவில்லையடி.. உன் மௌனப் பார்வைகளின் நெருடலில் என் இதயத்தில் வழிகின்ற இரத்தம்தான் உன் உதட்டுச் சிவப்பென ஏன் இன்னும் புரியவில்லையடி.. உன் தலைதுவட்ட பறக்கின்ற துமிகளாய் என் கண்களின் ஈரமும் உன் என்விழி தீண்டாப் பார்வைகளில் காய்கின்றதே ஏன்இன்னும்
Read Moreஎங்கெங்கு காணினும் மென்பொருள் கம்பனிகளடா.. உலகின் எங்கோ மூலையில் இருக்கும் client இற்கு இங்கிருந்து மென்பொருள் என்னும் கட்டம் கட்டுகின்றார்கள் இவர்கள். உண்மையில் இதுவும் ஒரு கட்டடம் கட்டும் தொழில்தான்.. ஆரம்ப அடித்தளத்தில் இருந்து மேல் விட்டத்தில் தொங்கும் திருஷ்டிப் பூசனி வரை இங்கிருந்து தான் வடிவமைத்துக் கொடுக்கப்படுகின்றது. பலசமயங்களில் client இனை அந்தக் கட்டடித்தில் குடியமர்த்தி அவர்கள் எதுவித பிரச்சினையும் இல்லாது இயங்குகின்றார்களா என்றும் பார்க்க வேண்டியது இந்த மென்பொருள் கம்பனிகளின் வேலையாகின்றது. இப்படியான மென்பொருள்
Read Moreஇமைகளின் பின்னால் உன் விழி வரைந்த கோடுகள் விழிகளின் நடுவே உன் பார்வை ஸ்பரிசங்களாகி சிந்தையில் எப்போதும் உன் நினைவுகளில் யாசகனாக்கி இதயத்தின் அந்தரங்கத்தில் உன் காதலை கவிதையாக படிக்கின்றனவே மயிலிறகாய் உன் பார்வைகள்
Read Moreஇனிதிடும் தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள் எல்லாம் கைகூடி வந்து என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்.. தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில் 🙂 .
Read Moreமுன்கதை : ஆட்டிபிஷல் இன்ரெல்யன்ஸ் என்னும் செயற்கைப் புத்திசாலித்தனத்தை முழுமையாகப் பயன்படுத்தி எந்தவிதமான மனிதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் தானாகச் சிந்தித்து செயற்படக்கூடிய பீனிக்ஸ்விண்வெளிக் கப்பலின் துணைக் கப்டன் மஞ்சரி விண்வெளியில் இதுவரை மனித சஞ்சாரமே கண்டிராத தடங்களை நோக்கி தனது இளம் விஞ்ஞானிகள் குழுவுடன் ஒளியின் வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கின்றாள்… பாகம் 1இனி… வாங்க மஞ்சரி.. ஆதித்யனின் குரல் அவளை வரவேற்றன. அவனைப் பார்த்து மெல்லச் சிரித்து விட்டு தனக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து கொண்டாள் மஞ்சரி. எல்லோரும்
Read Moreயாழ்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற காலங்களை என்றும் மறக்க முடியாது. என் பள்ளிக் காலங்களை பசுமையாக்கிய என் இனிய கல்லூரி இந்துக் கல்லூரி.. யாழ் இந்துக் கல்லூரியின் பெருமைகளைப் பற்றிக் பேசுவதே மிகப் பெருமையான விடயம்.. யாழ் இந்துக் கல்லூரியில் கற்பதற்கு முன்ஜென்மத் தவங்கள் நிறைந்திருக்க வேண்டும்.. யாழ் இந்துக் கல்லூரியைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு நான் மேலதிக விளக்கங்களையோ அல்லது மேலும் அதன் புகழையோ சொல்லத் தேவையில்லை.. வாழிய யாழ்நகர் இந்துக் கல்லூரி வையகம் புகழ்ந்திட
Read Moreகவிப் பேரரசு வைரமுத்துவின் காதலித்துப் பார் என்ற கவிதையை வாசிச்சிருப்பீர்கள். அழகான காதல் கவிதை. அண்மையில் லோசன் அண்ணாவின் ஃபெயில் பண்ணிப்பார் என்ற சுவாரஸ்யமிக்க கவிதையை வாசித்தேன். அழகாக ஃபெயில் பண்ணிய மாணவன் ஒருவனின் உணர்வுகளை வடித்திருந்தார். மிகவும் இரசித்து வாசித்தேன். சரி ஃபெயில் பண்ணிய மாணவன் ஒருவனின் உணர்வுகளை தெளிவாக பிரதி பண்ணியிருந்த அந்தக் கவிதைப் படித்திருப்பீர்கள். இப்போது அதே மாணவன் 3 A எடுத்திருந்தால் எப்படியிருக்கும். இதோ லோசனின் ஃபெயில் பண்ணிப்பார் இற்குப் போட்டியாக
Read Moreநேற்று சக பதிவர் ஒருவருடன் கதைத்துக் கொண்டு இருக்கும் போது கேட்டார் உங்களுக்கு என்ன என்ன பிடிக்கும் என்ன என்ன பிடிக்காது எனச் சொல்லுங்களேன் என்று. சரி எனக்கு என்ன என்ன பிடிக்கும் எனப் பட்டியல்ப்படுத்த வெளிக்கிட்டால் அது பெரும் இராட்ஷச ரயில் போல நீளத் தொடங்கியது. கொஞ்ச நேரத்திற்குப் பொறுமையாகக் கேட்டவர் பின்னர் கடுப்பு வந்ததோ என்னமோ தெரியாது நீங்கள் பதிவொன்றில் போடுங்களேன் நான் இரசித்தது போல மற்றவரகளும் இரசிக்கட்டுமே எனக் கேட்டுக்கொண்டார். உண்மையிலே தாம்
Read Moreஎல்லைகள் அற்ற இந்தப் பிரபஞ்சத்தின் மூலைமுடுக்கெங்கும் கணப்பொழுதில் சென்றடையக் கூடிய உங்கள் கற்பனைக் குதிரையில் ஏறி என்னோடு சிறிது பயணியுங்கள். நீங்கள் என்றும் கண்டிராத ஒரு அற்புத உலகிற்கு உங்களை அழைத்துச் செல்கின்றேன். “நாங்கள் இன்னும் 480 வினாடிகளில் சூரிய ஈர்ப்புக்கு அப்பால் சென்றுவிடுவோம். இந்த செய்தி மடலுடன் எமக்கும் உங்களுக்குமான இருவழித் தொடர்பு முற்றாக விலகுகின்றது. இன்னும் சரியாக 60 வினாடிகளில் நாங்கள் ஒளியின் வேகத்தினை அடைந்து விடுவோம். எமது இந்தப் பயணத்தின் குறிக்கொள் வெற்றி
Read More