கண்கள் காணும் காட்சியாவும் உண்மையாகுமா?? காட்சிகளில் பிறழ்வு ஏற்பட்டால் அதற்கு நமது கண்ணினைப் பிழை சொல்லாமா? பொதுவாக இயற்பியலில் மாயத்தோற்றம் பற்றி கேள்விப்பட்டு இருப்போம். இல்லாத ஒரு பொருளின் காட்சியமைப்பையே இந்த மாயத்தோற்றம் தருகின்றது. கீழ் உள்ள படத்தினைப் பாருங்கள். உங்கள் கண்களினுள் சிறந்த மாயத் தோற்றத்தை இந்தப் படத்தின் மூலமாக ஏற்படுத்த முடியும். முதலில் உங்கள் கண்களை இலகுவாக்கி கொள்ளுங்கள். பின்னர் கீழ் உள்ள படத்தின் மையப்பகுதில் தெரியும் நான்கு சின்ன கறுத்த புள்ளிகளில் உங்களின்
Read Moreகண்கள் நான்கும் மலராகும் காதல் அதில் தேனாகும் பார்வை வண்டுகள் தேன்தேடும் அதில் இன்பம் எனும்விதை கருவாகும் மொனம் கூட மொழியாகும் பிறர் புரியா பார்வை அதில் நயமாகும் மொன மொழிகள் தினம் வளரும் காதலலங்காரம் அதன் பொழிப்பாகும் வான் மேகம் கூட தூதாகும் கடிதம்தனில் அவை காதல் முத்திரைகுத்தும் அடை மழை தீண்டல் புதிதாகும் சாரல்தனில் அவை புதுப்புலன்தேடும் வாடி போடி கூட இனிதாகும் பரஸ்பரம் என்பது இங்கு உறவாகும் காரணமில்லாக் கோபம் தினதாகும் அதில்
Read Moreஇலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான, மிகவும் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்கப்பட்ட தேர்தல் இன்று (27-01-2010) கணிப்புக்களை தவிடுபொடியாக்கி நிறைவினை நோக்கி வந்துள்ளது. சற்று முன்னர் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸ்ஸநாயகத்தினால் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்ட அறிக்கையின் படி அதிமேதகு ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஜ அவர்கள் 6.01 மில்லியன் வாக்குகளைப் பெற்று முன்னிலையில் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தன்னோடு போட்டி இட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத்
Read Moreமூன்று இலட்சம் மக்களின் கண்ணீரும், இருபதாயிரம் மக்களின் இரத்தமும், அவர்களின் மண்ணிலேயே சிந்தவைத்தது- ஒருவரின் உத்தரவினால் எனில், அவரின் அதிகாரத்தினை உடைத்து வெறும் ஜடமாக உட்காரவைப்பதே அவருக்கு நாம் திருப்பி அடிக்கும் மரண அடி. ஏழையின் கண்ணீர் கூரிய வாளை ஒக்கும் என்ற கூத்தவைப்புலவனின் வாக்கைப் பொய்க்க விடலாமா??? எய்தவன் இருக்க அம்பினை நோவானேன்.. எய்தவனை அவன் எய்த அம்பினால் திருப்பியடிப்பவனே சாணக்கியன். சத்திரியனாய் வாழ்ந்தது போதும் சாணக்கியனாகுவோம்!!!! இந்தப் பூமிப்பந்தில் தமது வாழ்வினை நிலைநிறுத்துவதற்காக உயிரினைக்
Read More[ மொரட்டுவைப் பல்கலைக்கழக பொறியியற் பீடத்தில் வருடாந்தம் மலரும் சங்கமம் சஞ்சிகையின் 2008ம் வருட பிரதியில் பிரசுரிக்கப்பட்ட ஆக்கம் – இங்கே மீள்பதிவாகின்றது. ] சங்கமம் இதழிற்கு ‘எதையாவது’ எழுதித்தாடா! என்று என் நண்பன் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டான். எதையாவது எழுதுவது என்றால் எதை எழுதுவது. எதனைக் கருப்பொருளாக எடுத்துக்கொள்வது? இணைய வலைப்பதிவூகளில் எழுதுவது போன்று இங்கு அதாவது பலரதும் அபிமானம் பெற்ற இச்சஞ்சிகையில் ‘எதையாவது’ எழுதமுடியாது. இணைய வலைப்பதிவூகளைப் போலல்லாது இச் சஞ்சிகையை வாசிக்கும் வாசகர்களுக்கு எனது
Read Moreஇஞ்சி குடுத்து மிளகு வாங்கிய வரலாறு அந்தக் காலம். ஆனால் மந்திரவாதியை விரட்ட பேய் ஒன்றினை வரவைக்க வேண்டிக்கிடக்கின்றது இன்றைய காலத்தில். 2010 ஜனவரி 26 – இலங்கை சோசலிசக் குடியரசின் 6ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. முப்பது வருடங்களாக தமிழரின் உரிமையை மீட்டெடுக்க தமிழீழ விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட இலங்கை அரசுடனான போரின் முடிவுரை தற்போதைய ஜனாதிபதியினால் கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் எழுதி வைக்கப்பட்டது. பல்லாயிரம் அப்பாவி உயிரகளைக்
Read Moreநீண்ட நெடிய பாலைமரங்கள் சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்தில் தாம் நனைந்து அவை நின்ற குளக்கரையின் வீதியின் குளிர்ச்சிக்கும் அருகிருந்த பாலர் பாடசாலையின் சிறார்களின் பிஞ்சுத் தேகத்திற்குமாக நெடுங்குடை விரித்து எப்போதும் புன்னகைப் பூக்களை அள்ளி வீசிக்கொண்டிருந்தன புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தின் முன்பாக. அழகான என்றும் வற்றாக குளத்தின் ஒரு கரையில் விநாயகரும் மறுகரையில் ஜேசுபாலனுமாக புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தின் சிறார்களுக்கு அருள் ஆசியினை என்றும் குறையாது வழங்கிக்கொண்டிருந்தார்கள். வெள்ளிக் கிழமை என்றால் விநாயகரும் திங்கள்
Read Moreஎமகெல்லாம் ஒளி கொடுக்க நீர் நெய்விளக்கானீர் அந்திவானம் சிவக்கும் நேரம் கீழ்வானக் கரையில் அந்த சூரியனே உங்களுக்காக சிலகணம் செந்தழலாய்யொலிக்கும் மண்ணகத்தில் மரங்களும் உங்களின்மீது பூமழை தூவும் விண்ணகத்து விண்மீன்கள் காரிருளையும் கிழித்து ஒளிமழைதூவும் நிலையில்லா மேகமும் தன்நினைவாக பன்னீரிரைத் தெளிக்கும் இத்தனையும் அவைகள் செய்ய…!!!! நாங்கள் …?????? எமகாக உணர்வைச் சுமந்து மீளாத்துயிலில் இன் உயிரை ஒளியாக்கி எம் இருளகற்ற முயன்றீர்களே.. காலங்கள் தோறும் உங்கள் நினைவு சுமக்கும் சிலுவைகளாவோம்…!!! காலங்கள் தோறும் உங்கள் புகழினை
Read Moreபுரட்சி கவிஞர் பாரதிதாசனின் இந்தக் கவிதை அந்த வானத்து சூரியனின் புகழ்தனை அழகாகச் சொல்கின்றனது. என்ன ஒரு கவிதை.. இன்று ஏனோ மிகவும் ஆழமாக உணர்வுகளைப் பிழிந்து இரசிக்கச் சொல்கின்றது. இளங்கதிர்எழுந்தான்; ஆங்கே இருளின்மேல் சினத்தை வைத்தான்; களித்தன கடலின் புட்கள்; எழுந்தன கைகள் கொட்டி! ஒளிந்தது காரி ருள்போய்! உள்ளத்தில் உவகை பூக்க இளங்கதிர், பொன்னிண றத்தை எங்கணும் இறைக்க லானான். என்றென்னைக்கும் அவன் சூரியன்தான்.. நினைத்தாலே சுட்டெரிக்கும் இருள்களுக்கு..
Read Moreமுன்கதை : பீனிக்ஸ் விண்வெளியோடத்தில் இதுவரை மனித சஞ்சாரமே கண்டிராத தடங்களை நோக்கி ஒளியின் வேகத்தில் சீறிப்பாய்ந்து கொண்டிருந்தார்கள் இளம் விஞ்ஞானிகள். பீனிக்ஸின் கலந்துரையாடல் அறையில் தமது பயணத்தின் நோக்கம் பற்றியும் வியாழன் கிரகத்தின் நடத்தை மாற்றம் பற்றியும் விளக்கங்களை பானு தனது சக விஞ்ஞானிகளுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தான். வியாழனின் மேற்பரப்பில் சடுதியாகத் தோன்றிய ஒளிக்கீற்றின் காரணம் என்ன என அனைவரும் ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள்…. பாகம் 1 || பாகம் 2இனி… பிரபஞ்சத்தின் காரிருளையும் ஊடறுத்து மின்னலெனெப்
Read More