Category: வாழ்த்துக்கள்
வரலாற்றின் சாலையில் இருந்து ஈராயிரத்து பத்து கழிந்து செல்வதற்கான தூரம் இன்னும் சற்றுத்தான் இருக்கின்றது. கடந்து வந்த பாதையில் கண்ட சந்தோச சாரல்கள், சந்தித்த மனிதர்கள், புகட்டிய பாடங்கள், தித்தித்த நிமிடங்கள், கனத்த நொடிகள், பெற்ற வெகுமதிகள், வலித்த விபத்துக்கள், விபத்துக்கள் தந்த இழப்புக்கள்.. இன்னும் எத்தனையோ எத்தனையோ சங்கதிகள் எல்லாம் சிறிது நேரத்தில் இந்த ஈராயிரத்து பத்து என்னும் சாலையின் பணயக்குறிப்புகளாக பதியப்படப் போகின்றன. புதிதாக இன்னும் ஓர் புதிய சாலை எம்மை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றது.
Read Moreபுரட்சி கவிஞர் பாரதிதாசனின் இந்தக் கவிதை அந்த வானத்து சூரியனின் புகழ்தனை அழகாகச் சொல்கின்றனது. என்ன ஒரு கவிதை.. இன்று ஏனோ மிகவும் ஆழமாக உணர்வுகளைப் பிழிந்து இரசிக்கச் சொல்கின்றது. இளங்கதிர்எழுந்தான்; ஆங்கே இருளின்மேல் சினத்தை வைத்தான்; களித்தன கடலின் புட்கள்; எழுந்தன கைகள் கொட்டி! ஒளிந்தது காரி ருள்போய்! உள்ளத்தில் உவகை பூக்க இளங்கதிர், பொன்னிண றத்தை எங்கணும் இறைக்க லானான். என்றென்னைக்கும் அவன் சூரியன்தான்.. நினைத்தாலே சுட்டெரிக்கும் இருள்களுக்கு..
Read Moreஇனிதிடும் தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள் எல்லாம் கைகூடி வந்து என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்.. தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில் 🙂 .
Read Moreநீண்ட காலமாக வலைப்பூக்களின் பக்கம் வருவது அரிதாகவே இருக்கின்றது. அவ்வாறு வந்தாலும் சும்மா ஏதாவது கிறுக்கிவிட்டு சென்று விடுவதுதான் வழமை. வேலைத்தளத்தில் தலைக்கு மேல் உள்ள வேலைப்பழுவே காரணம். வேலை நேரத்தில் பதிவுலகத்தில் நீண்ட நேரத்தை செலவிடமுடியாமையே அதற்கான காரணம். அண்மையில் சக பதிவாளரும் என் பல்கலைக்கழக கனிஸ்ட நண்பருமான சுபாங்கனிடம் இருந்து கிடைத்த பட்டாம்பூச்சி விருதி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. அதுவும் கன்னி அரைச் சதத்தைத் தொட்டுக்கொள்ளும் போது விருது. இரடிட்டிப்பு மகிழ்ச்சி. அந்த விருதினைப்
Read Moreஎன்ன ஒரு இன்ப அதிர்ச்சி.. நமக்கும் சுவாரஸ்ய பதிவர் விருது அளித்திருக்காங்க.. “சும்மா” என்று வலையில் பூத்து தினமும் தமிழ்மணம் பரப்பும் பூவினை மெருகூட்டும் வலசு – வேலணை என்ற பெயரில் உலாவரும் ….(பெயர் தெரியவில்லை) என்பவரின் கைகளால் நான் இந்த விருதைப் பெற்றிருப்பது என்னை சந்தோசக் கடலில் மிதக்க வைக்கின்றது. இவரின் வேரென நீயிருந்தாய்.. என்ற தொடரில் பூத்துக் குலுங்கும் பூக்களை நான் மிகவும் இரசித்ததுண்டு. அவற்றை விட புத்தனின் புதிய ஞானம் மற்றும் மூன்றாவது
Read Moreதனது பாரம்பரிய வாழ் நிலங்களிலே சந்தோமாக பல வண்ணக் கனவுகளுடன் வாழ்ந்து, இன்று தமது வாழ் நிலங்களில் இருந்து துரத்தியடிக்கப்பட்டு வாழ்க்கையில் அனைத்து சந்தோசங்களையும் இழந்து எதிலிக்கப்பட்டு தமது ஜீவ நாடியினைக் காப்பாற்றுவதற்காக வாழ்வின் கடைசி வினாடி வரை போராடிக் கொண்டிருக்கும் எம் உறவுகளின் அனைத்து துயரங்களும் நீங்கி மீண்டும் அவர்களின் சுயமும் மகிழ்ச்சியும் அவர்களிடமே வந்து சேர பிறக்கின்ற விரோதி வருடம் வழிகோல இறைவனைப் பிரார்த்திப்போம்..! அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்…
Read Moreமலரும் புத்தாண்டு என்றும் எல்லோருக்கும் சுகம் தரும் இனிய நல்லாண்டாக அமைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். கடந்த போன காலங்கள் தந்த வலிகளும் வடுக்களும் விலகி எல்லோர் வாழ்விலும் சந்தோசம் நிலவ வேண்டும். சுகம் தரும் புதுத்தென்றல் எங்கும் பரவட்டும். விழிகளில் வடியும் கண்ணீர்த் துளிகளை அவை போக்கிடட்டும். உறவுகளையும் சொந்த வீடு வாசல்களையும் இழந்து வாழ்க்கையின் அர்த்தம் தேடும் அனைத்து உறவுகளுக்கும் வாழ்க்கையில் வசந்தம் மலர 2009ம் ஆண்டு வழிகோலட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்களுடன் சுபானு.
Read Moreசில விடையங்கள் எப்போதும் அழகாக, மனதிற்கு இதமாக அமைந்து விடுகின்றன. தீபாவளிக்கு புது உடுப்பு உடுத்தி, கோவிலுக்கு சென்றுவிட்டு பின் உறவினர் வீடுகளுக்கும் சென்று அவர்களுடன் மகிழ்ச்சியாக சிறிது வேலைப்பழு மற்றும் புறெஜக்ட் வேலைகளை மறந்து உரையாடுவது ஒருவித சந்தோசம்தான்… மனிதன் இத்தகைய கொண்டாட்டங்களைக் கண்டுபிடித்ததே இதற்காகத்தானெ.. மனதிற்குப் பிடித்தவர்களை வாழ்த்துவதும் அவர்களிடம் இருந்து வாழ்த்துக்களைப் பெறுவதும் மனதில் இன்பப் பெருக்கை ஊற்றெடுக்கச் செய்யும் அம்சங்கள். இன்று காலை கண்விழித்ததே எனது கைத்தொலைபேயின் சிணுங்கலைக் கேட்டுத்தான். தித்திக்கும்
Read More