நாளை சூரிய கிரகணமாம். அத்தோடு சுனாமி வேறு வரக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கின்றனவாம். இவைதான் இன்றைய கூடான செய்திகள். 2004ம் ஆண்டு சுனாமியின் தாக்கத்தில் இருந்தே நாம் இன்னமும் முழுமையாக மீளாத இந்த சந்தர்பத்தில் இன்னும் ஒரு சுனாமியா!. அன்றைய சுனாமியின் தாக்கத்தினால் ஏற்பட்ட சேதாரத்தை பார்த்வர்களில் நானும் ஒருவன். 2004ம் ஆண்டு நவம்பர் 26ம் திகதி யாழ் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட பல காயம்பட்டவர்களின் அவலக்குரலினைக் கேட்டவன். 2004ம் ஆண்டு சுனாமியின் ஞாபகச்சின்னங்கள் இன்னமும் நம்மத்தியில்
20 சதுர கிலோமீற்றர் பரப்பளவுள்ள மிகக் குறுகிய நிலப்பரப்பிற்குள் இரண்டரை இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் எந்த விதமான அடிப்படை வசதிகளும் இன்றி நாள்தோறும் அல்லற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எந்த நேரத்திலும் மரணம் என்னும் அரக்கன் அவர்களை மிகக் கொடுமையாக விழுங்கி விடக்கூடும். மரணம் என்பது தவிர்க்கக் கூடியது அல்ல. ஆனால் அம்மரணம் எவ்வாறு வருகின்றது என்பதுதான் அவர்களுக்கு மிகக் கொடுமையான விடையம். கண் முன்னே பெற்ற தாய் தந்தையர், பெற்ற பிள்ளைகள் உடல் சிதறி குற்றுயிராய்க் கிடக்கும் போது