Category: பார்வை
உயிரினப் பரம்பலில் ஒரு தலைமுறையினது அறிவும் இயல்பும் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகின்ற செயன்முறையானது (Genetics Transmission) மரபணுக் கொள்கைகளில் ஆணிவேராகத் திகழ்கின்றது[1]. உயிரினங்களின் வளர்ச்சிப்படியினில் இந்தப் பரிமாற்றச் செயன்முறையே முக்கியமான பங்கு வகிக்கின்றது. ஒரு உயிரியின் தனித்துவமான தன்மையும் அந்த உயிரியின் இயல்புகளும் அவற்றின் உடலினுள்ளேயே சேமிக்கப்பட்டுள்ளது. இந்த பரம்பரை இயல்புகள் சார்த்த தகவல்கள் அனைத்து உயிரிகளிலும் அவற்றின் ஒவ்வொரு கலத்தினுள்ளும் உள்ள கருவினுள் DNA (Deoxyribonucleic Acid) என்னும் ஓர் இரட்டை சுருளி(Double Helix) இழையினுள்
Read Moreஇரண்டு நாட்களுக்கு முன்னர் முகப்புத்தகத்தில் பரபரப்பாக ஒரு செய்தி; யாழ்பாணத்து இளம் பெண் ஒருவர் பல இலட்சங்கள் முகப்புத்தகத்தின் ஊடாக, புலம்பெயர்ந்த தமிழ் வாலிபர்களை ஏமாற்றி சம்பாதித்தாக இரண்டு இணையத்தளங்களில் வெளிவந்த தகவல் முகப்புத்தகத்தில் பரவியிருந்தது. முகப்புத்தகத்தின் ஊடாக “பல இளம் வாலிபர்களை” “ஏமாற்றினாராம்” என அந்த இளம் பெண்ணின் மீது கடுமையான விமர்சனங்களினையும் அந்த பெண்ணின் பல வித்தியாசமான கோணங்களில் எடுக்கப்பட்ட “அந்தரங்கமான (snapshots) படங்களையும்” தாங்கி வந்திருந்தன அந்த இரண்டு இணையத்தளங்களும். மறுநாள் இன்னும்
Read Moreஅவ மூக்கு மேல வேர்வையாகணும் இல்ல நாக்கு மேல வார்த்தையாகணும் அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகணும் இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகணும்.. மெல்ல கண்களை மூடியபடி சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயிலில் நிலக்கீழ் பாதைவழி வீடு நோக்கிய பயணம் ஒன்றில்தான் எனக்கு அறிமுகமாகியது இந்தப் பாடல். காதுகளுக்குள் தணிந்த குரலில் ஐபோனில் ஒலித்துக் கொண்டிருந்த இலங்கையின் வெற்றி வானொலிதான் எனக்கு அறிமுகப்படுத்தியது. பல்லவியிலேயே என் மனதினை ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டது பாடல். பாடல் தொடரத் தொடர என்னை
Read Moreஇன்றைய விடியலுடன் தமிழகத்தின் தேர்தல் களத்தில் இறுதிக் கட்டப் பலப் பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ளன. இம்முறை தமிழகத் தேர்தல் பலவித்தியாசமான அனுபவங்களை சந்தித்திச் செல்கின்றது. தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு ஒரு மாதத்திற்குள்ளாகவே தேர்தல் நடைபெறுவதும், கோடிக்கணக்கில் பறக்கும் படையிடம் பிடிபடும் கறுப்புப் பணங்களும், பறக்கும் படையினை விமர்சித்தவர்கள் கைது செய்யப்படுவதும், பிளாஸ்டிக் வகை சுவரொட்டிகள் முற்றாக நீங்கப்பட்ட தேர்தலாகவும், மாறி மாறி இலவசங்களால் நிறம்பிய தேர்தல் வாக்குதிகளும், தேர்தலுக்கு நான்கு நாட்களுக்கு முன்னர்தான் வெளியிடப்பட்ட நகைப்புக்குளான காங்கிரஸின் தேர்தல்
Read Moreயப்பான் எங்குமே சோகக் கடல் நிரம்பி வழிகின்றது. அதுவும் யப்பானின் வடகிழக்குக் கரைப் பகுதியில் அந்த சோகக்கடலின் அலைகள் தாக்கிய வேகத்தினை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை எனலாம். அடுத்தடுத்து இடைவிடாது யப்பானை உலுக்கிக் கொண்டிருக்கின்றது இயற்கையின் சீற்றங்கள். யப்பான் வரலாற்றில் இதுவரை பதிவாதாத ரிச்சர் அளவில் தாக்கிய நிலநடுக்கத்தின் [ 1 ] பாதிப்புக்களும் வீரியமும் அடங்கும் முதல் சுனாமிப் பேரலைகள் யப்பானின் கிழக்குக் கரையில் கோரதாண்டவம் ஆடிவிட்டுச் சென்றது. நிலநடுக்கமும் சுனாமியலைகளும் யப்பானுக்கோ யப்பான் மக்களுக்கோ
Read More“நீயே பயம் என்னும் இருளை அகற்றி நாளைய பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும் சூரியனும் அந்த சந்திரனும்!” கொழும்பு முதல் அம்பாந்தோட்டை வரை எங்கும் காணப்படும் வீதியோர வாழ்த்துப் பதாதைகளில், அனேகமாக சிங்கள மொழியிலும் ஆங்காங்கே தமிழிலும் காணப்படும் வாசகம் அது. Picture-‘Sri Lanka President sworn-in ceremony for a second term’ courtesy Dailymirror.lk மகிந்த இராசபக்சவினது “அரச முடிசூட்டு விழா”(Royal Coronation) இன்று இலங்கை தலைநகர் கொழும்பில் மிகவும் ஆர்ப்பாட்டான முறையில் நடந்தேறியது. பல
Read Moreவரலாறு கற்றுத் தந்த பாடங்களில் இருந்து மனிதன் எதையாவது கற்றுக் கொள்கின்றானா என்றால் இல்லை என்றே பதில் கூறவேண்டும். எப்போதும் வரலாறு சுழன்று சுழன்ற மனித வாழ்வியலில் மீண்டு வந்துகொண்டே இருக்கும். அது ஒரு வட்டப் பாதை. ஆனால் அந்த வட்டப்பாதையில் இருந்த மனிதன் கற்றுக்கொள்வது என்பது ஒன்றுமே இல்லை. 18 ஆவது அரசியலமைப்பு திருத்தம்(18th Amendment) இலங்கையில் அமுல்படுத்தப்படுவதற்கான காலம் வெகுதூரத்தில் இல்லை. கொஞ்சம் நெஞ்சமாக இருக்கும் ஜனநாயகத்திற்கும் ஒட்டு மொத்தமாக சாவுமணி அடித்து பள்ளத்தாக்கில்
Read Moreஇலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான, மிகவும் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்கப்பட்ட தேர்தல் இன்று (27-01-2010) கணிப்புக்களை தவிடுபொடியாக்கி நிறைவினை நோக்கி வந்துள்ளது. சற்று முன்னர் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸ்ஸநாயகத்தினால் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்ட அறிக்கையின் படி அதிமேதகு ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஜ அவர்கள் 6.01 மில்லியன் வாக்குகளைப் பெற்று முன்னிலையில் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தன்னோடு போட்டி இட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத்
Read Moreஇஞ்சி குடுத்து மிளகு வாங்கிய வரலாறு அந்தக் காலம். ஆனால் மந்திரவாதியை விரட்ட பேய் ஒன்றினை வரவைக்க வேண்டிக்கிடக்கின்றது இன்றைய காலத்தில். 2010 ஜனவரி 26 – இலங்கை சோசலிசக் குடியரசின் 6ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. முப்பது வருடங்களாக தமிழரின் உரிமையை மீட்டெடுக்க தமிழீழ விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட இலங்கை அரசுடனான போரின் முடிவுரை தற்போதைய ஜனாதிபதியினால் கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் எழுதி வைக்கப்பட்டது. பல்லாயிரம் அப்பாவி உயிரகளைக்
Read Moreதமிழ்மொழியின் சக்தி! எத்தகைய செய்தியையும் முதலில் முந்திக்கொண்டு முதலில் மக்களுக்குத் தருபவர்கள் நாங்கள். தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள். இவை இலங்கையில் தம்மை முக்கியமான முதன்மையான தொலைக்காட்சியாகக் காட்டிக் கொள்ளும் சக்தி தொலைக்காட்சியின் அலங்கார மகுடங்கள். இலங்கையில் தொலைக்காட்சி வரலாற்றில் சக்தி தொலைக்காட்சிக்கு முக்கியமான இடம் உண்டென்றால் அது யாராலும் மறுக்க முடியாது. பல புதிய விடையங்களை அறிமுகப்படுத்தி இலங்கைத் தொலைக்காட்சிகளில் முக்கியமான இடத்தைத் தனதாக்கிக் கொண்டது உண்மைதான். ஆனாலும்… சக்தித் தொலைக்காட்சியில் தமது தயாரிப்பு என்றும்
Read More