Category: சுயதம்பட்டம்
டிவிட்டர் டிவிட்டர் டிவிட்டர்… எங்கு காணினும் டிவிட்டரடா.. அண்மையில் அசினின் டிவிட்டரை தான் கண்டுபிடித்ததாகவும் ஆனால் திடீர் என்று அது காணாமல் போய் விட்டாகவும் பின்னர் மீண்டும் அசின் டிவிட்டரில் உயிர்பெற்றதாகவும் ஒரு டிவிட்டர் புரட்சி ஒன்றை செய்திருந்தார் நம்ம சாரல் சயந்தன். என்னடா இது என்று பார்த்தால் உண்மையில் அது அசினின் டிவிட்டர் தானா என்பதே பெருத்த சந்தேகமாக இருந்தது. நேற்று நம்ம புல்லட் அண்ணா திடீர் என்று துள்ளிக் குதித்தார். ஏன் என்று பார்த்தால்
Read Moreநீண்ட காலமாக வலைப்பூக்களின் பக்கம் வருவது அரிதாகவே இருக்கின்றது. அவ்வாறு வந்தாலும் சும்மா ஏதாவது கிறுக்கிவிட்டு சென்று விடுவதுதான் வழமை. வேலைத்தளத்தில் தலைக்கு மேல் உள்ள வேலைப்பழுவே காரணம். வேலை நேரத்தில் பதிவுலகத்தில் நீண்ட நேரத்தை செலவிடமுடியாமையே அதற்கான காரணம். அண்மையில் சக பதிவாளரும் என் பல்கலைக்கழக கனிஸ்ட நண்பருமான சுபாங்கனிடம் இருந்து கிடைத்த பட்டாம்பூச்சி விருதி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. அதுவும் கன்னி அரைச் சதத்தைத் தொட்டுக்கொள்ளும் போது விருது. இரடிட்டிப்பு மகிழ்ச்சி. அந்த விருதினைப்
Read Moreஎன்ன ஒரு இன்ப அதிர்ச்சி.. நமக்கும் சுவாரஸ்ய பதிவர் விருது அளித்திருக்காங்க.. “சும்மா” என்று வலையில் பூத்து தினமும் தமிழ்மணம் பரப்பும் பூவினை மெருகூட்டும் வலசு – வேலணை என்ற பெயரில் உலாவரும் ….(பெயர் தெரியவில்லை) என்பவரின் கைகளால் நான் இந்த விருதைப் பெற்றிருப்பது என்னை சந்தோசக் கடலில் மிதக்க வைக்கின்றது. இவரின் வேரென நீயிருந்தாய்.. என்ற தொடரில் பூத்துக் குலுங்கும் பூக்களை நான் மிகவும் இரசித்ததுண்டு. அவற்றை விட புத்தனின் புதிய ஞானம் மற்றும் மூன்றாவது
Read Moreநேற்று பசங்க படம் பார்த்தேன்.. நல்ல ஒரு அழகான படம். பாடசாலை மாணவர்களிடம் காணப்படும் நட்புரீதியான போட்டியை மையப்படுத்தி செதுக்கப்பட்டிருந்தது பசங்க படம். பள்ளிப் பசங்களின் கதையினூடு இன்னும்மொரு மெல்லியதாக ஒரு காதல் நுாலையும் கோர்த்திருந்தார் இயக்குனர். சரி விடையத்திற்கு வருவோம், இங்கே அந்தப் படத்திற்கு விமர்சனம் எழுதுவதோ அல்லது விளம்பரம் செய்வதோ என் நோக்கம் அல்ல. படத்தினை நீங்கள் பார்த்து அதனை நீங்கள் இரசிக்க வேண்டும். எனது விமர்சனங்கள் உங்களின் அந்த இரசிப்பில் கலங்கத்தை ஏற்படுத்தக்
Read More1963ம் ஆண்டளவில் Bob Dylan என்பவரால் எழுதப்பட்ட “Blowin’ in the Wind” என்ற அந்த ஆங்கிலப் கவிதை ஏனோ என்னை மிகவும் ஆழமாகக் கவர்ந்திருந்தது. ஆங்கில இலக்கியத்தினை பள்ளியில் ஒரு விருப்பத்திற்குரிய பாடமாகத் தெரிவு செய்தவர்கள் இந்த ஆங்கிலக் கவிதையை சுவைத்திருப்பார்கள் இரசித்திருப்பார்கள். அண்மையில் நண்பன் ஒருவனின் facebook status ஒன்றில் இந்தக் கவிதையின் சில வரிகளை நீண்ட காலத்திற்குப் பின்னர் கண்டேன். இப்போது மீண்டும் சில ஞாபகங்களைத் தூசு தட்டுவதற்காகவும் வேறு பல பகிரங்கமாகக்
Read Moreகாலைநேர பனிக் காற்றில் உன் வரவிற்காய் பல மணிநேரம் காத்திருந்த போது கிடைத்த இன்பம்… வெறும் கண் பாசைதான் பேசினோமேயாயினும் அது இருவருக்கும் புரிந்ததில் கிடைத்த இன்பம்… வெள்ளிக் கொலுசு கட்டிய – உன் கால்கள் தினம் போட்ட கோலங்களை பார்த்து இரதித்ததில் கிடைத்த இன்பம்… கண்ணுக்குள் ஊடுருவும் என் பார்வையை ஏதேதோ ஜாலங்கள் செய்து தடுப்பாயே அப்போது கிடைத்த இன்பம்… பள்ளிசெல்ல முன் உந்தன் தரிசனத்தை நான் பெறுவதற்தாய் நான் வரும்வரை வரும் பேருந்துகளை எல்லாம்
Read Moreநீண்ட காலத்தின் பின்னர் இன்று குயிலின் இனிய கூவும் குரலினைக் கேட்டேன். கற்பனைக்கு உடனடியாகச் சென்றுவிடாதீர்கள் உண்மையில் நான் சொல்ல வந்தது குயில் என்னும் பறவையினைப் பற்றித்தான். ஒரு சின்னப் பறவைக்குள் என்ன ஒரு கம்பீரமான கணீர் என்ன குரல் அடங்கியிருக்கின்றது. தன் ஜோடிக் குயிலினை என்ன அழகாகக் கூவியழைக்கின்றது அந்தப் பறவை. என்ன ஒரு இனிமையான குரல். கேட்பவர்களை மயக்கும் மன்மதக் குரல். எந்தவிதமான கரகரப்புக்களும் இன்றி தெளிவாக ஒலிக்கும் குரல். இளவேனிற் காலம் என்றாலே
Read Moreஇன்று காலை எனது மின்அஞ்சற் பெட்டியைத் திறந்து பார்த்தால் ஒரே சந்தோசமாக இருந்தது. அதுவும் இரட்டிப்புச் சந்தோசம். எனது வலைப்பதிவுகள் இரண்டு யுத் விகடனில் பிரசுரித்துள்ளதாக மின்அஞ்சல் அனுப்பியிருந்தார்கள். ஆயிரக்கணக்கான வலைப்பதிவுகள் வலைப்பூக்களில் நாள்தோறும் பூத்துக் குலுங்குகின்றன. அவற்றிற்கிடையில் எனது பதிவுகளைப் பிரசுரித்திருப்பதினை நினைக்கையில் மனது மிகவும் பூரிக்கின்றது. அண்மையில் பதிந்திருந்த அனிச்சம்பூ – குட் Blog பகுதியிலும் இதயத் திருடி அவள் – ஜீட் பகுதியிலும் பிரசுரித்திருந்தார்கள். அவற்றிற்கான பகுதிக்குச் செல்வதற்கு இங்கே சொடுக்குங்கள். இதயத்
Read Moreஎனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம் மனதில் ஓர் மூலையில் இருந்துகொண்டிருக்கின்றது… எனது பாடசாலைப் பருவத்தில் அதாவது நான் யாழ்ப்பாணம் இந்துக் கல்லுாரியில் உயர்தரம் படித்துக்கொண்டிருந்த காலத்தில் நடந்த நிகழ்வு அது. யாழ்ப்பாணத்தில் உயர்தர வகுப்புப்படிக்கும் மாணவர்கள் தமது பாடசாலை இறுதிக் காலங்களில் உயர்தர மாணவர் ஒன்றுகூடல் (A/L Social) என்னும் நிகழ்ச்சியை நடாத்துவது உண்டு (வேறு மாவட்ட மாணவர்கள் அத்தகைய நிகழ்ச்சியினை நடாத்துகின்றார்களா என்பது எனக்குத் தெரியாது). அதை ஒரு பரம்பரைப் பழக்கம் என்று கூடச்சொல்லலாம்.
Read Moreமழைக்கால மேகம் திரள்கின்ற நேரம் மலைச்சாரலே தாலாட்ட நீராட்ட.. மலர்த்தோட்டம் எதிர் பார்க்கும் இளவேனிற் காலம் பாவையும் ஒரு பூவினம்.. அதை நான் சொல்லவோ…. என்ற அந்தப் பாடல்தான் சிவனொலிபாத மலை பற்றி நினைக்கும் போது என் மனதில் நிழலாடுகின்றது. மார்கழி மாதப் பின்னிரவு நேரத்தில் மலைப்பாதையின் ஓரங்களில் பளிச்சிடும் வீதி விளக்குகள் எம்மை வழிகாட்டி அழைத்துச் சென்றன. வானத்திலிருந்து பூமிக்கு இறங்கும் மின்னல்க் கொடியினைப் போன்று படர்ந்து நீண்டிருந்தது, அந்த நள்ளிரவில் மலைப்பாதை விளக்கு வெளிச்சம்.
Read More