நீண்ட காலத்தின் பின்னர் இன்று குயிலின் இனிய கூவும் குரலினைக் கேட்டேன். கற்பனைக்கு உடனடியாகச் சென்றுவிடாதீர்கள் உண்மையில் நான் சொல்ல வந்தது குயில் என்னும் பறவையினைப் பற்றித்தான். ஒரு சின்னப் பறவைக்குள் என்ன ஒரு கம்பீரமான கணீர் என்ன குரல் அடங்கியிருக்கின்றது. தன் ஜோடிக் குயிலினை என்ன அழகாகக் கூவியழைக்கின்றது அந்தப் பறவை. என்ன ஒரு இனிமையான குரல். கேட்பவர்களை மயக்கும் மன்மதக் குரல். எந்தவிதமான கரகரப்புக்களும் இன்றி தெளிவாக ஒலிக்கும் குரல். இளவேனிற் காலம் என்றாலே
எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம் மனதில் ஓர் மூலையில் இருந்துகொண்டிருக்கின்றது… எனது பாடசாலைப் பருவத்தில் அதாவது நான் யாழ்ப்பாணம் இந்துக் கல்லுாரியில் உயர்தரம் படித்துக்கொண்டிருந்த காலத்தில் நடந்த நிகழ்வு அது. யாழ்ப்பாணத்தில் உயர்தர வகுப்புப்படிக்கும் மாணவர்கள் தமது பாடசாலை இறுதிக் காலங்களில் உயர்தர மாணவர் ஒன்றுகூடல் (A/L Social) என்னும் நிகழ்ச்சியை நடாத்துவது உண்டு (வேறு மாவட்ட மாணவர்கள் அத்தகைய நிகழ்ச்சியினை நடாத்துகின்றார்களா என்பது எனக்குத் தெரியாது). அதை ஒரு பரம்பரைப் பழக்கம் என்று கூடச்சொல்லலாம்.