Category: குறிப்புக்கள்
நாம் எவ்வளவு துாரத்திற்கு முன்னேறிச் சென்றாலும் கடந்து வந்த பாதையை சற்று திரும்பிப்பார்த்து இரசிப்பது ஒரு சந்தோசம்தான். இன்று நாம் இணையத்தில் எவ்வளவோ முன்னேற்றகரமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றோம். இணைய வலைத்தளங்களில் தொடங்கி இன்று இரண்டாவது வாழ்க்கை என்னும் Second Life வரை பல அம்சங்களை பயன்படுத்துகின்றோம். ஆனால் இவற்றிற்கேல்லாம் முதல் நாடியாக இருக்கின்ற WWW என்கின்ற World Wide Web இல் முதன் முதலாக ( 30 சித்திரை 1993 ) வெளியிடப்பட்ட இணையப் பக்கத்தை எப்போதாவது
Read MorePodCast என பல ஆங்கில இணையத் தளங்களில் பிரபல்யம் பெற்று விளங்கும் ஒலித் தொகுப்புக்களில் பல தரப்பட்ட விடையதானங்களை அலசியிருக்கின்றார்கள். அனேகமாக அவை ஒன்றிற்கு மேற்பட்ட நபர்களின் மிக நேர்த்தியான திட்டமிடலுன் தொழில்நுட்பம் சார்ந்த ஒருங்கிணைந்த ஒரு மணி நேரத்திற்கும் குறையாத உரையாடலாக அமைவதுண்டு. ஆனால் தமிழில் இவ்வாறான முயற்சிகள் மிக அரிதாகவே மேற்கொள்ளப் படுகின்றன. ஆனால் நிமல் மற்றும் ரமணன் இணைந்து வலைப் பதிவுலகில் புதிய முயற்சி ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்கள். நேர்த்தியான திட்டமிடலுடன் ஒலியோடை என்னும்
Read Moreமழைக்கால மேகம் திரள்கின்ற நேரம் மலைச்சாரலே தாலாட்ட நீராட்ட.. மலர்த்தோட்டம் எதிர் பார்க்கும் இளவேனிற் காலம் பாவையும் ஒரு பூவினம்.. அதை நான் சொல்லவோ…. என்ற அந்தப் பாடல்தான் சிவனொலிபாத மலை பற்றி நினைக்கும் போது என் மனதில் நிழலாடுகின்றது. மார்கழி மாதப் பின்னிரவு நேரத்தில் மலைப்பாதையின் ஓரங்களில் பளிச்சிடும் வீதி விளக்குகள் எம்மை வழிகாட்டி அழைத்துச் சென்றன. வானத்திலிருந்து பூமிக்கு இறங்கும் மின்னல்க் கொடியினைப் போன்று படர்ந்து நீண்டிருந்தது, அந்த நள்ளிரவில் மலைப்பாதை விளக்கு வெளிச்சம்.
Read Moreசிவனொளிபாத மலை (Sympole of Sri Lanka). இலங்கையின் இரண்டாவது பெரிய உயரமான மலை, காண்பவர் கண்களைக் கவரும் எழில்மிகு வண்ணச்சோலைகளும் வன விலங்குகளும் நிறைந்து காணப்படும் ஓர் இயற்கை வனப்பிரதேசம். எப்பொழுதும் சில்லென்று வீசும் பனிக்காற்றும், மலைமுகட்டை வருடிச் செல்லும் முகிற் கூட்டமும் இயற்கை அன்னையின் கொடையளில் இதுவும் ஒன்று. பருவமற்கையவள் தன் நீண்ட கூந்தலை காற்றிலாட விரித்து விட்டாளோ என எண்ணத் தோற்றத்தை உருவாக்கும் பனிக்காற்றிற்கு சிலுசிலுத்தாடும் காட்டுக்கொடிகளும் அவள் கொண்டையிலே இத்தனை hairpinகளா
Read Moreநாவல்கள் வாசிப்பதிலே அவ்வளவு ஆர்வமில்லாத நான் அவரது கணேஷ் வஸந்த் நாவலைப் படித்ததில் இருந்துதான் அவர்மீது ஆர்வம் கொண்டேன். அதன் பின்பு அவரது நூல்கள் பலவற்றைத் தேடித்தேடி படித்து வந்துள்ளேன். அவரின் எழுத்துக்கள் மீது அவ்வளவு ஈர்ப்பு… அவ்வளவு தூரத்திற்கு என்ன கவர்ந்த நபர் இன்று இல்லை என்று நினைக்கும் பொழுது… மனதை சிறிது இறுக்கவே செய்கின்றது.. மனதின் ஓரத்தில் ஒரு சொட்டுக்கண்ணீர் வழிந்தோடுகிறது… என் மனதைத் தேற்றிக்கொள்ள அவரது படைப்புக்களையே நாடவேண்டியுள்ளது. அவரது படைப்புகளை நான்
Read Moreசேர்பியாவின் ஆட்சி அதிகாரத்திற்கு இதுவரைகாலமும் உட்பட்டிருந்த கொசோவா கடந்த ஞாயிற்றுக் கிழமை தனி நாட்டுப் பிரகடனத்தை மேற்கொண்டு சேர்பியாவிலிருந்து பிரிந்து சென்றுள்ளது. இந்த தனி நாட்டுக்கான பிரகடனமானது இலங்கையில் பல எதிர்ப்பலைகளை தோற்றிவித்துள்ளது. இலங்கையின் இத்தகைய எதிர்ப்புக்கு காரணத்தைப் பார்ப்பதற்கு முன் இந்த கொசோவாவின் வரலாற்றைக் கொஞ்சம் அலசிப் பார்ப்பது நல்லது. யுக்கொஸ்லாவியா ( Yugoslavia ) யுக்கொஸ்லாவியா ( Yugoslavia ) என்ற குடியரசு நாடானது 1945 ஆம் ஆண்டு ஆறு தனித் தனிக் குடியரசுகளாகப்
Read Moreமென்பொருள் துறையில் உள்ளவர்கள், தினசரிப் பணிக்காகச் செலவிடும் நேரத்தை வேண்டுமென்றெ அதிகப்படுத்திச் சொல்வது வழக்கம். அதாவது, ஒரு புபொகிராமை எழுதி முடிக்கக் குத்துமதிப்பாக 10 மணித்தியாலம் ஆனது என்றால், சட்டென்ரு 15 மணி என்று கூட்டிச் சொல்லிவிடுவார்கள் நம்ம ஆட்கள். அப்போதுதான் புரயக்ற் மேலாளரிடம் இருந்து நல்ல பெயரும், ‘கஷ்டப்பட்டு உழைக்கிற ஆள்’ என்ற அபிப்பிராயமும் கிடைக்கும். சிலவேளைகளில் இந்த விசையம் மேலாளருக்கு தெரியாமல் இருக்குமா? இருந்தாலம் அவர் அதைக் கண்டுகொள்ள மாட்டார். ஏனனெனில், நிறையப் பேர்
Read Moreதமிழ்மணத்தில் நுழையவிரும்பி நான் முயற்சித்த போது, ஆகக் குறைந்தது 3 பதிப்க்களாவது இடப்பட்டிருக்க வேண்டும் என்ற அறிவித்தலைப் பார்த்தேன். எனது இப் பதிப்பின் ஊடாக தமிழ்மணத்தில் நுழையலாம் எனத் தோணுகின்றது… எனக்கு அவ்வளவாக எழுதத் தெரியாது.. இருந்தாலும் எழுத ஆசைப்பட்டு தொடங்குகின்றேன். ;)) உங்களது ஆதரவையும் அரவணைப்பையும் எதிர்பார்த்து நிற்கின்றேன்…. ;))
Read Moreஅதிகாலை தொடக்கம் அந்தி மாலை வரை அலுப்பின்றிக் களைப்பின்றி அண்ணாந்து வானம் பார்த்து , ஆதவனைத் தொடர்ந்து அடி பற்றிச் சுழலும் சூரிய காந்திப் பூவே – நீ எப்போது நிற்பாய் உன் தலை சுற்றாமல்? சுட்டெரரிக்கும் சூரியன் சுழலாமலும் பூமியது சுற்றாமலும் என்று ஆதவன் எனக்காய் நிற்கின்றானோ அன்றுதான் நிற்கும் என் அடி தொடரும் இப்பயணம் ஏய் சூரிய காந்தியே தாமரை உனக்கு தமக்கையா? தங்கையா? சூரியன் அவளின் கணவனா? காதலனா? ஏனெனில் எனக்கு புரியவில்லை
Read Moreஇன்றைய உலகில் முதலில் தட்டுபவனுக்கே கதவு திறக்கும். முன்னாடி ஓடி வருபவனால்த்தான் முதலில் வெற்றியைத் தொட முடியும். நாலுகால் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் உலகம் எவர் குறித்தும் அனுதாபப்பட்டு நின்று சிந்திப்பது கிடையாது. வாழ்க்கையில் சலிக்காமல் ஓடிக்கொண்டிருப்பவனே வெற்றியாளனாகின்றான். எவ்வளவு தோல்விகளிலும் ஏன் தொடர் தோல்விகளிலும் கூட மீண்டும் ஒரு முறை என முயற்சி செய்பவனைக்கண்டு தோல்வி கூட பயந்து ஓடிவிடும். நம்முடைய எண்ங்களின் அழுத்தம்தான் – அதன் வலிமைதான் வெற்றிக்கு நம்மை இழைத்துச் செல்கின்றது. ஆனால் நமக்கு
Read More