Category: பாதித்தவை
சில பாடல்கள் அப்படியே மனதின் அடி நாதத்தை வருடிச்சென்று விடுகின்றன. கேட்கக் கேட்கத் திகட்காமல் மேலும் மேலும் பாடலின் ஊடே இலயித்துப் போய்விடும் மனது. மென்மையாக பரவும் சங்கீதம் மனதின் அந்தரங்கத்தில் எப்போதும் மீள மீள ஒலிபரப்பாகிக் கொண்டே இருக்கும். அத்தகைய பாடல்கள் முன்னர் திரைப்படங்களின் ஊடாகவே மக்களின் மனங்களை அடைந்தது. ஆனால் இன்று பற்பல பாடல்கள் பல்வேறு வழிகளில் மனங்களை நிறைக்கின்றன. அது போலத்தான் இந்தப் பாடல் காதலிக்க நேரமில்லை என்ற விஐய்த் தொலைக்காட்சி தொடருக்காக
Read Moreஉன்னைக் காணாத பொழுதுகளில் என் விழி மடல் துடிக்கும் ஓசை உன் அனித்த செவிகளுக்கு ஏன் இன்னும் கேட்கவில்லையடி.. உன் விழிகளோடு பேசாதபோது என் விழிகளில் நிலவும் மௌன வறட்சி உன் ஈரக் கண்களுக்கு ஏன் இன்னும் தெரியவில்லையடி.. உன் மௌனப் பார்வைகளின் நெருடலில் என் இதயத்தில் வழிகின்ற இரத்தம்தான் உன் உதட்டுச் சிவப்பென ஏன் இன்னும் புரியவில்லையடி.. உன் தலைதுவட்ட பறக்கின்ற துமிகளாய் என் கண்களின் ஈரமும் உன் என்விழி தீண்டாப் பார்வைகளில் காய்கின்றதே ஏன்இன்னும்
Read Moreவீண் கோபம் என்னோடு ஏன் அன்பே உனக்காக நான் வரையும் மடலிது என் ஈர விழிகளுக்குள் நீ நுழைந்து கலகம் செய்த நாட்கள் எத்தனை என் சுயத்தோடு கண்ணாம்மூச்சி விளையாடி இதயவாசலில் நீ பின்னலிட்ட தோறணங்கள் எத்தனை என் மொனத் தவம் கலைக்க கடைவிழி வழியே நீ நாண் ஏற்றிய பாணங்கள் எத்தனை இத்தனையும் என் இதயத்கூட்டின் அத்தனை அறைகளிலும் நித்திய சிம்மாசனம் இட்டிடத்தானே என்றோ தந்து விட்டேனே இதயராணி என்னும் உரிமையை என் மானசீகக் காதலியாகி
Read MoreI don’t like to say any words about these pictures. You have to read the pictures and feel the truth behind them. What do u mean by humanitarian rescue mission? We all are congratulating you, but its absolutely a rigged one! you have colonised them again.. Now happy with the control in there wit and
Read Moreநீண்ட காலமாக வலைப்பூக்களின் பக்கம் வருவது அரிதாகவே இருக்கின்றது. அவ்வாறு வந்தாலும் சும்மா ஏதாவது கிறுக்கிவிட்டு சென்று விடுவதுதான் வழமை. வேலைத்தளத்தில் தலைக்கு மேல் உள்ள வேலைப்பழுவே காரணம். வேலை நேரத்தில் பதிவுலகத்தில் நீண்ட நேரத்தை செலவிடமுடியாமையே அதற்கான காரணம். அண்மையில் சக பதிவாளரும் என் பல்கலைக்கழக கனிஸ்ட நண்பருமான சுபாங்கனிடம் இருந்து கிடைத்த பட்டாம்பூச்சி விருதி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. அதுவும் கன்னி அரைச் சதத்தைத் தொட்டுக்கொள்ளும் போது விருது. இரடிட்டிப்பு மகிழ்ச்சி. அந்த விருதினைப்
Read Moreநீ வரும் வேளைகளில் எல்லாம் என் வாசல்களில் பன்னீரைத் தூவுகின்றது மழை நீ இல்லாத வேளைகளில் எங்கே சென்றதுவோ! இப்போது தான் புரிந்தது நீயும் மழைத்துளியும் ஒன்றுதான் என்று தொட்டுக் கொள்ளும் போதெல்லாம் சிலிர்த்து உருகி என் கையிரண்டில் தவழ்ந்து போகையில்! மரணிக்கும் நேரத்திலும் சொர்க்கம் என்றால் என்ன என்பதை அனுபவிக்கின்றன என்கின்றேன் நான் உன் மார்போடு விழுந்து சில்லுகளாகச் சிதறும் மழைத்துளிகளினைப் பார்த்து ஆனால் அவை உனது மானசீகத் தோழிகளின் அணைப்பு என்கின்றாயே நீ நீ
Read Moreநாம் கை கோர்த்து நடக்கும் போதெல்லாம் மழை மேகங்களுக்குச் சந்தோசமோ இப்படி ஆர்ப்பரிக்கின்றனவே முழக்கங்களாய் வெட்டி வெட்டிக் கண்சிமிட்டுகின்றனவே மின்னலாய் சில்லென ஒடுங்குகின்றனவே மழைத்துளிகளாய் உன்னைத் தானே தொட்டுக் கொண்டேன் மழைத்துளிகளுக்கு ஏன் இந்த நாணம் உன்னிடமே கடன் வாங்கி இப்படிச் சிலிர்க்கின்றனவே போதுமடி இனியும் கடன் கொடுத்து நிரந்தரக் கடனாளியாக்காதே மழைத் துளிகளை! நல்லாயிருந்தா தமிழிஸ் இல் வாக்களிக்க இங்கே சொருகுங்கள்.
Read Moreகண்கள் எழுதும் காதற் கடிதங்கள் கண்ஜாடை மெல்லச் சிரிப்பாள் .. சட்டென்று கோவிப்பாள் .. உரிமையோடு மிரட்டுவாள் .. நயமாகப் பணிவாள் .. பாசத்தோடு அணைப்பாள் .. மிரளவைக்க நாணுவாள் – ஜாடையில் இத்தனையும் என் ராதையின் அந்த நளினம் பேசும் கண்களில் நான் தினம் தினம் படிக்கும் புதுக்கவிதைகள்.
Read Moreகண்கள் – அவை காதலின் தொடக்கப் புள்ளி காதலென்னும் காவியத்தின் பல்லவி வரிகள் கனவுகள் சஞ்சரிக்கும் நித்திய வானம்…. இவற்றை எல்லாம் விட – அவை உனை ரசிக்க இறைவன் எனக்கருளிய வரப்பிரசாதம் அன்றோ!
Read Moreநேற்று பசங்க படம் பார்த்தேன்.. நல்ல ஒரு அழகான படம். பாடசாலை மாணவர்களிடம் காணப்படும் நட்புரீதியான போட்டியை மையப்படுத்தி செதுக்கப்பட்டிருந்தது பசங்க படம். பள்ளிப் பசங்களின் கதையினூடு இன்னும்மொரு மெல்லியதாக ஒரு காதல் நுாலையும் கோர்த்திருந்தார் இயக்குனர். சரி விடையத்திற்கு வருவோம், இங்கே அந்தப் படத்திற்கு விமர்சனம் எழுதுவதோ அல்லது விளம்பரம் செய்வதோ என் நோக்கம் அல்ல. படத்தினை நீங்கள் பார்த்து அதனை நீங்கள் இரசிக்க வேண்டும். எனது விமர்சனங்கள் உங்களின் அந்த இரசிப்பில் கலங்கத்தை ஏற்படுத்தக்
Read More