Category: பாதித்தவை
கொன்றைமலரணி பொன்னணி பூண்டுவெண்மலரொன்று கருவிழியேற்றி நிழல்குடை ஆங்கண் அகலுள்கதிரொளியான் விழியிரு நோக்கி மெய்தீரா காதலோடுபைங் கொடி முல்லைகாத்திருந்த காட்சியது காண கதிரவன்தன்வெண்ணைடையேற்றி கடுவளி தாண்டகாலில் கணைவிசை வேற்றிதுவி சக்கரந்தனில் விரைந்தன் வாழ்வில்லொரே ஒரு மலருக்காய் தான்விதியாது செய்வொம்சொல்? தோழா…
Read Moreஆறடி உயரம், வெள்ளை வெளேர் என்று மின்னும் தலைமுடி, எப்பொழுதும் அமைதியாக, ஆழ்ந்து, ஆழமாகப் பார்க்கும் கண்கள், கம்பீரமான ஆளுமையினை வெளிப்படுத்தும் குரல் – அநேகமானோர் கடினம், கசக்கும் என வெறுக்கும் இரசாயனவியலின் மேல் எனக்கு காதல்வரக் காரணமாகி இன்று என்னை ஒரு நிலைக்கு உயர்த்தி விடக் காரணமானவர் நாகரட்ணம் சேர்.
2002ம் ஆண்டு தை மாதம், ஒரு ஓலைக் கூடாரத்தின் கீழ் இரசாயனவியலின் அறிமுகமும் ஒரு சிறந்த பண்பான ஆளுமையின் அறிமுகமும் ஒருசேரக் கிடைத்த தருணம் அது. மனதிற்குள் ஒரு உற்சாகம் கலந்த படபடப்பு. இரசாயனவியலினைப் பற்றி முன்னவர்களால் கட்டப்பட்டிருந்த விம்பம், வாழ்க்கைப் பாதையின் திசைகளைத் தீர்மானிக்கப்போகும் ஒரு நீண்ட பயணத்தின் முதற்படியில் முதல் நாள், இரசாயனவியலில் இமயத்தை போன்ற ஒருவர், விடவும் ஒரு முன்னால் லெப்டினன், என என்னை ஆக்கிரமித்திருந்த உணர்வுக் கலவையினை ஓரிரு வார்த்தைகளால் இன்று வெளிப்படுத்துவது கடினம்.
Read Moreகிட்டத்தட்ட பத்து வருடங்கள் இருக்கும், அந்த மாயாவி வீரனை நான் பிரிந்து. கடைசியா ராணிக் கமிக்ஸில் மாயாவியினை சந்தித்தது ஈராயிரத்து-மூன்றில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவர் முதல்வர் அறையினுள்ளே. ஆண்டு எட்டு படிக்கும் மாணவன் ஒருவன் பாடசாலை நிறைவடையும் போது இசைக்கப்படும் பாடசாலைக் கீதத்திற்கு மரியாதை தருவதற்காக எழுந்து நின்று, தனது மேசையின் கீழ் உள்ள சிறிய தட்டில் ஒரு ராணிக்கமிக்ஸினை திறந்து ஒளித்து வைத்து களவாகப் படித்துக்கொண்டு நின்றான். அந்த நேரத்தில் அங்கு மாணவர்களைக் ஒழுங்கமைக்க
Read Moreகண்ணாடிக்குள் பிம்பம் அதை இவள் காட்டினாள்.. கேட்காத ஓர் பாடல் அதில் இசை மீட்டினாள்.. தெய்வத் திருமகளினைப் பார்த்துவிட்டு திரையரங்கினை விட்டு வெளியே வரும் விழிகளினோரம் ஈரம் வந்து குடை ஒன்று கேட்டதே.. விழிகளின் மீதிலே சிலதுளியும், உதட்டினில் மெலிதாய் ஒரு புன்னகையுமென திரையரங்கிலிருந்த வெளியே வருகின்ற அனைத்து முகங்களையும் அலங்கரிக்கச் செய்திருந்தது தெயவத்திருமகள். மீண்டும் ஒர் அழகான ஓவியம் தமிழ் சினிமாவில் தீட்டப்பட்டுள்ளது. முழுமையான படைப்பு ஒன்று. அத்தனை அம்சங்களும் நிறைந்திருந்து மனதினையும் நிறைத்திருந்தது இந்தப்
Read More“Welcome to life !” அறுபத்து ஒன்பது நாட்களாக நிலத்தடியில் 2000 அடி ஆழத்தில் சிக்குண்டிருந்த 33 சிலி சுரங்க தொழிலாளர்களினை எந்தவித பாதிப்பும் இன்று நேற்று மீட்டு வெளியே கொண்டு வந்தார்கள். 15ஆவது ஆளாக பூமிக்கு மேல் வந்த Victor Segvia யினைப் பார்த்து சந்தோசத்தில் சிலியின் ஜனாதிபதி Sebastian Pinera ஒரே வார்த்தையில் வாழ்த்தி வரவேற்ற வசனம் தான் “Welcome to life!”. இறுதியாக மீட்கப்பட்ட Luis Urzua(மத்தியில்) வெளிவந்த பின்னர் Chile’s President
Read Moreமெல்லிசையே என் இதயத்தின் மெல்லிசையே என் உறவுக்கு இன்னிசையே என் உயிர் தொடும் நல்லிசையே.. என் நீண்ட இரவுகளிலும் நெடுந்தூரப் பயணங்களிலும் பலசமயங்களில் என் துணையாக வந்திருந்த சுவர்ணலதா இன்று இல்லை என்னும் போது ஏதோ மனதினுள் கனக்கின்ற உணர்வு. என் செவிகளுக்குள் ஊடுருவி இதயம் வரை நுழைந்து என் உணர்வுகளை இனிமையாக கட்டிப் போட்ட மானசீகக் குரலுக்கு சொந்தக்காரி சுவர்ணலதா. போதும் போதும் என செவிகள் சொன்னாலும் இன்னும் வேண்டும் உன்குரலில் மயங்கிடும் இன்பம் என
Read Moreஎன்ன சொல்லுகிறீர்கள் மந்திரியாரே ? ஆம் மகாராணி! நமது மன்னர் போரிலே வெற்றி பெற்று வேங்கிநாட்டு மன்னனை கொன்று படையினரை புறமுதுகு காட்டி ஓட விட்டு விட்டார். பரிவாரங்களுடன் மன்னர் அரண்மனைக்கு வந்துகொண்டிருக்கின்றார். என் மனம் இப்போதுதான் அமைதியுறுகின்றது மந்திரியாரே. மிக்க நன்றி! என் மனமுகந்த தகவலை விளம்பியதற்கு. வாருங்கள் சேடிப் பெண்களே மன்னனை அரண்மனை வாசலிலேயே வைத்து ஆரார்த்தி எடுத்து வரவேற்போம். என்று அந்தப்புரத்து சேடிப்பெண்கள் சதிதம் அரண்மனை வாசலுக்கு விரைந்தாள் சோழ அரசின் மகாராணி
Read Moreமுழுமதி உன் முகமதில் வளர்பிறையோ உன் நுதலதில் இளம்பிறை மீதொரு முழுமதி நின் தளிர்விரல் தொட்டிட்ட சாந்து பொட்டதோ.. குளிர் மலர்ச்சோலை மஞ்சம் நின்நெஞ்சம் தனில்லாடும் என்னிதயம் முத்துச்சரம் நீ என்தாரணி உன் மதங்கம் மீட்டும் விழியிரண்டில் என் காதல்மீட்ட வந்தேனடி நீயென் மதுரம் பகராய் மனதென் நுகராய் கண்டால் நீ மாயமாய் கண்ணில் நிறதீப சில்மிசம் காணா கமலமலரின் மணமாய் நீ நாளை வருமோ..
Read Moreகாதலை தேடிக்கிட்டு போக முடியாது… அது நிலைக்கணும்… அதுவா நடக்கணும்… நம்மள போட்டு தாக்கணும்… தலைகீழ போட்டு திருப்பணும்… எப்பவுமே கூடவே இருக்கணும்… அதான் ட்ரூ லவ்… அது எனக்கு நடந்தது!… விண்ணைத்தாண்டி வருவாயா – மின்னலேயின் பின்னர் முழுக்க முழுக்க காதலை மட்டும் வைத்து கௌத்தம் மேனனால் செதுக்கப்பட்ட அழகான காதல் சிற்பம் இந்த விண்ணைத் தாண்டி வருவாயா. எந்தவிதமான அடதடி வீர வசனங்கள் இல்லாமல் யதார்தமாக காதலை மட்டும் நம்பி கதையினை மெல்ல அழகாக
Read Moreநீண்ட நெடிய பாலைமரங்கள் சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்தில் தாம் நனைந்து அவை நின்ற குளக்கரையின் வீதியின் குளிர்ச்சிக்கும் அருகிருந்த பாலர் பாடசாலையின் சிறார்களின் பிஞ்சுத் தேகத்திற்குமாக நெடுங்குடை விரித்து எப்போதும் புன்னகைப் பூக்களை அள்ளி வீசிக்கொண்டிருந்தன புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தின் முன்பாக. அழகான என்றும் வற்றாக குளத்தின் ஒரு கரையில் விநாயகரும் மறுகரையில் ஜேசுபாலனுமாக புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தின் சிறார்களுக்கு அருள் ஆசியினை என்றும் குறையாது வழங்கிக்கொண்டிருந்தார்கள். வெள்ளிக் கிழமை என்றால் விநாயகரும் திங்கள்
Read More