Category: படித்தவை ரசித்தவை
மொறட்டுவப் பல்கலைக்கழத்தில் கணணிப் பொறியியல் பிரிவில் இறுதியாண்டில் எமது விருப்பத் தெரிவாக இரண்டு பாடங்களை தெரிவு செய்ய முடியும். அப்படி நானும் எனது நண்பர்களான நிமல் மற்றும் ரமணன் ஆகியோர் கணித மாணவர்களுக்கு கசக்கும் என எண்ணும் பாடமான Bio Informatics இனை தெரிவு செய்தோம். சுவாரசியமான பாடம். பலவிதமான புதிய தேடல்களை எங்களுக்குள் விதைத்தது அந்த பாடம். அந்தப் பாடத்தில் வருகின்ற பலசொற்பதங்கள் எமது மூளையில் உற்கார வைக்க முடியாமல் போனாலும் உயிரியல் கூர்ப்புக் கொள்கைகளும்
Read Moreசரியான நேரத்தில் சரியான கேள்விகளினால் தமக்கு தேவையானவற்றை வெல்லுகின்ற திறமை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. தொழில் தளங்களிலோ அல்லது அதற்கு வெளிக் களங்களிலோ ஏற்படுகின்ற தேவையற்ற விடயங்களில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளவும், எமது எதிர்பார்ப்புக்களை வெற்றி கொண்டு நினைத்தவற்றை அடையவும் இந்தத் திறமை நிட்சயமாக அவசியம். அதாவது கேள்வி என்ன தந்திரத்தின் மூலம் நாம் எமது இலக்குகளை இலகுவாக அடைந்து விடலாம். எமது நண்பர்கள், அலுவலக நண்பர்கள், ஊழியர்கள், மேலும் அலுவலக மேலதிதாரிகளுடன் நாம் பல சமயங்களில்
Read Moreயாழ்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற காலங்களை என்றும் மறக்க முடியாது. என் பள்ளிக் காலங்களை பசுமையாக்கிய என் இனிய கல்லூரி இந்துக் கல்லூரி.. யாழ் இந்துக் கல்லூரியின் பெருமைகளைப் பற்றிக் பேசுவதே மிகப் பெருமையான விடயம்.. யாழ் இந்துக் கல்லூரியில் கற்பதற்கு முன்ஜென்மத் தவங்கள் நிறைந்திருக்க வேண்டும்.. யாழ் இந்துக் கல்லூரியைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு நான் மேலதிக விளக்கங்களையோ அல்லது மேலும் அதன் புகழையோ சொல்லத் தேவையில்லை.. வாழிய யாழ்நகர் இந்துக் கல்லூரி வையகம் புகழ்ந்திட
Read Moreஅதே கணிதபாட பிரத்தியேக வகுப்பறையின் கரும்பலகையில் சில சமன்பாடுகள் திரிகோண கணிதத்தில் சமனிலிகளுக்கான அந்த சமன்பாடுகள் கரும்பலகையென்னும் பிரபஞ்ச வெளியில் முடிவற்று விரிந்து கொண்டேயிருந்தன.. சோவென அடித்துக் கொட்டும் மழையில் நனைந்த விட்டில் பூச்சிகள் பல குளிர்காய அந்த அறையில் மின் விளக்கை வட்டமடித்தபடி.. சுமந்து வந்த ஈரம் நீங்க விளக்கை முட்டி முட்டி மோதி தங்களை உலர்த்திக்கொண்டிருந்தன அந்த விட்டில்கள்… வகுப்பறையின் முதல் வாங்கின் ஓரத்தில் என்னவள் கடைசி வரிசை வாங்கின் ஓரத்தில் நான் சிக்கியிருந்தோம்
Read Moreநாளைய உலகின் வீடியோ விளையாட்டுக்களில் மாபெரும் புரட்சி ஒன்றை ஏற்படுத்தும் முயற்சியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. மூன்றாம் தலைமுறைக்கான புதிய புரட்சிகரமான தொழில்நுட்பத்தி வீடியோ விளையாட்டுகளை அறிமுகப்படுத்தவுள்ளது. அந்த தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்தும் செயற்திட்டத்திற்குத்தான் Project Natal என்று பெயர். நாம் எந்த ஒரு சென்சார்கலையும் உடலில் அணியாமல் எமது உடலின் அனைத்து பகுதிகளையும் விளையாட்டிற்கு பயன்படுத்தி நாம் இந்த வீடியோ விளையாட்டுக்களை விளையாட முடியும். நம் உடலின் பல பாகங்களின் அசைவுகளை இன்ப்ரா ரெட் கேமரா
Read More1963ம் ஆண்டளவில் Bob Dylan என்பவரால் எழுதப்பட்ட “Blowin’ in the Wind” என்ற அந்த ஆங்கிலப் கவிதை ஏனோ என்னை மிகவும் ஆழமாகக் கவர்ந்திருந்தது. ஆங்கில இலக்கியத்தினை பள்ளியில் ஒரு விருப்பத்திற்குரிய பாடமாகத் தெரிவு செய்தவர்கள் இந்த ஆங்கிலக் கவிதையை சுவைத்திருப்பார்கள் இரசித்திருப்பார்கள். அண்மையில் நண்பன் ஒருவனின் facebook status ஒன்றில் இந்தக் கவிதையின் சில வரிகளை நீண்ட காலத்திற்குப் பின்னர் கண்டேன். இப்போது மீண்டும் சில ஞாபகங்களைத் தூசு தட்டுவதற்காகவும் வேறு பல பகிரங்கமாகக்
Read Moreஎன்ன ஒரு மகிழ்ச்சியான செய்தி..! இனிமேல் தமிழில் நாங்கள் விடுகின்ற எழுத்துப் பிழைகளைத் திருத்திமைக்க நல்லதொரு firefox add-on தயாரிக்கப்பட்டுள்ளது.. (எழுதும் போது மவ்வளவு ழனாவா, கொம்பளவு ளானவா எனக் குழம்பும் எனைப் போன்றோருக்கு நல்ல ஒரு பிரசாதம்). தமிழ் விக்கிப்பீடியாவின் உதவியுடன் 50,000இற்கும் மேற்பட்ட சொற்களை இந்த add-on உள்ளடக்கியுள்ளது. பிரபல பதிவர் பாலச்சந்திரன் முருகானந்தம் (Balachander Muruganandam) அவர்களால் ஆரம்பிக்கப்பட்டதே இந்த தமிழ் எழுத்துப் பிழை திருத்தி. அவர்களுது இந்த அரும் பணிக்கு மனமார்ந்த
Read Moreபறவைகளுக்குள்ளேயே மிகச் சிறிய பறவை எது தெரியுமா…ரீங்காரப் பறவை-Hummingbirds. பார்ப்தற்குத் தான் சின்னப் பறவை, ஆனால் அது மின்னல் போல யுத்த ஜெற் விமானங்களை விட வேகமாகப் பறக்கக் கூடியது என்பது தெரியுமா ..? பின்புறமாவும் பறக்கக் கூடிய பறவையாம்..! அமெரிக்கவின் கலிபோனியாக் பல்கலைக்கழக ஆராச்சியாளர்களால் இந்த விடையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிவேகக் கமராக்களின் உதவியினால் ரீங்காரப் பறவையின் பறப்பு படமாக்கப்பட்டுள்ளது. பெண் ரீங்காரப் பறவையினைக் கவர்வதற்காக ஆண் பறவை என்ன லாவகரமாகப் பறக்கின்றது பாருங்கள்.. ( எல்லாமே
Read Moreஅனிச்சம்பூ என்றவுடனே எல்லோர்க்கும் ஞாபகத்திற்கு வருவது அதனது மென்மையான இயல்புதான். எம் கைகளால் தீண்டினாலே வாடிவிடக்கூடிய மென்மையான பூ. ஏன் முகர்ந்து பார்த்தாலே வாடிவிடுமாம் இந்த அனிச்சம்பூ. மென்செம்மஞ்சள் நிறத்தில் ஐந்து இதழ்களில் விரிந்திருக்கும் இந்தப் பூ பார்ப்பதற்கு தனியழகு. அந்த அழகான மலரின் சில படங்களை இங்கே தருகின்றேன். நீங்களும் பார்த்துத் இரசித்துக் கொள்ளுங்களேன். சரி விடையத்திற்கு வருவோம். தமிழ் இலக்கியங்களில் பல இடங்களில் இந்த அனிச்சம்பூ கையாளப்பட்டு இருந்தாலும் திருவள்ளுவர் பல குறள்களில் அழகாக
Read Moreவீரம் விளைந்து விளையாடும் எம்மண்ணில் இருந்து ஓர் குரல் இது.. அன்னைத் திருநாடே.. அழகொளிரும் எம் ஊரே.. மண்ணைக் குழைத்து எடுத்து பாட்டிசைத்த தாய் வீடே.. தாயாள் முலை தந்தாள் தமிழாள் மொழி தந்தாள் பூவாய் மலர உந்தன் பொன்மடியில் இடம் தந்தாய் கண்திறந்த நாள் முதலாய் கையெடுத்து தூக்கி எம்மை உன் மடியில் தானே உறங்குவதற்குப் பாய் விரித்தாய்.. வன்னியிலிருந்து ஓர் குரல் …
Read More