Category: ச்சீசி
கண்கள் காணும் காட்சியாவும் உண்மையாகுமா?? காட்சிகளில் பிறழ்வு ஏற்பட்டால் அதற்கு நமது கண்ணினைப் பிழை சொல்லாமா? பொதுவாக இயற்பியலில் மாயத்தோற்றம் பற்றி கேள்விப்பட்டு இருப்போம். இல்லாத ஒரு பொருளின் காட்சியமைப்பையே இந்த மாயத்தோற்றம் தருகின்றது. கீழ் உள்ள படத்தினைப் பாருங்கள். உங்கள் கண்களினுள் சிறந்த மாயத் தோற்றத்தை இந்தப் படத்தின் மூலமாக ஏற்படுத்த முடியும். முதலில் உங்கள் கண்களை இலகுவாக்கி கொள்ளுங்கள். பின்னர் கீழ் உள்ள படத்தின் மையப்பகுதில் தெரியும் நான்கு சின்ன கறுத்த புள்ளிகளில் உங்களின்
Read Moreஅலுவலகத்தில் நீண்ட வேலைக் களைப்பில் நள்ளிரவு தாண்டிய நேற்றைய இரவில் மெல்லக் காலாற மனதிற்கு இதமாக வெற்றி FM மை மெல்லிய தொனியில் iPod இனை காதுகளுக்கருகில் நீட்டப்பட்ட headset என்னும் தொடுப்பின் ஊடாக மெல்ல இசைக்க விட்டபடி காலி வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தேன். நள்ளிரவில் தூறிச் சென்ற மழையின் பின் இதமாக வீசிக் கொண்டிருந்த மெல்லிய காற்று முகத்தில் படும்போதெல்லாம் எனக்குள் சிலுசிலிர்க்க வைத்தன என் நரம்பு மண்டலங்கள். என்னை நான் மறந்து, கால்கள்
Read Moreமழை விட்டும் நிற்காத தூவானமாய் எனை விட்டுப் போன பின்னும் சாரலாகின்றனவே உன் நினைவலைகள். நம் காதலெனும் பூ அரும்பிப் பின் போதாகி நம் இதயங்களில் மலராகியதே வீணான நம் கோபங்களால் வீ யெனும் நிலையெய்து நம் இதயத்தின் வாசலில் செம்மலாகிப்போன ஏன் முரண்பாடுகளுக்குத் தீர்வு மீண்டும் மீண்டும் முரண்படுவதால் தீரப்போவதில்லையடி முரண்பட்டது போதும் கண்னே என்னோடு முரண்பாடுகள் கழைய பேசிவிடு என்னோடு முள்களைத் தாண்டி மலரும் ரோஜா போல-நெருஞ்சி முள்கள் எனும் பிடிவாதத்தை அகற்றி முள்களைத்
Read Moreஎன்ன காதலிக்கின்றீர்களா.. உங்கள் காதலி உங்களிடம் பேசும் போது, கொஞ்சிக் குலாவும் வார்த்தைகளைக் கவனித்துள்ளீர்களா.. காதலி கொஞ்சும் காதல் மொழிகள் காதலர்க்கு உற்சாக அதிரசம். காதலி திட்டும் போது அவற்றை இரசித்துள்ளீர்களா.. என்ன காதலி திட்டும் போது இரசிக்கச் சொல்கின்றேனா.. இரசித்துப் பாருங்கள். அவர்களின் அழகுக்கே தனியழகு விளங்கி ஜொலிப்பார்கள். நெஞ்சம் தொட்டு இதயம் குடிகொண்டவள் செல்லமாக திட்டும் போது சிலிர்ப்புடன் காதல் எல்லைக் கோடுகளைக் கடக்கும். சொந்தம் பந்தம் ஏதும் இல்லாமல் கண்ணில் விழுந்து காதலன்
Read Moreஉலகெங்கும் பன்றிக் காய்ச்சல் பயப்பீதியால் நாடுகள் பல அலறிக் கொண்டிருக்கின்றன. ஐயோடா.. எங்கே எமது நாட்டுக்கும் வந்துவி்டக்கூடாது என்பதனால் பலநாடுகளின் விமானநிலையங்களில் பலவட்டக் கண்காணிப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. Swine influenza virus என்னும் அந்த உயிர்க்கொல்லி வைரஸ் பன்றகளில் [ pigs (swine) ] இருந்து மனிதனுக்குப் பரவியதாம். எனவே பன்றி என்றாலே அலறிக்கொண்டு ஓடுகின்றார்கள் மனிதர்கள். ஆனால் இந்த சிறுமியைப் பாருங்கள். எனக்கென்ன பயம்… பன்றி என்ன பன்றி… I’m so love swine.. என்று கண்கள்
Read Moreஇன்று காலை எனது மின்அஞ்சற் பெட்டியைத் திறந்து பார்த்தால் ஒரே சந்தோசமாக இருந்தது. அதுவும் இரட்டிப்புச் சந்தோசம். எனது வலைப்பதிவுகள் இரண்டு யுத் விகடனில் பிரசுரித்துள்ளதாக மின்அஞ்சல் அனுப்பியிருந்தார்கள். ஆயிரக்கணக்கான வலைப்பதிவுகள் வலைப்பூக்களில் நாள்தோறும் பூத்துக் குலுங்குகின்றன. அவற்றிற்கிடையில் எனது பதிவுகளைப் பிரசுரித்திருப்பதினை நினைக்கையில் மனது மிகவும் பூரிக்கின்றது. அண்மையில் பதிந்திருந்த அனிச்சம்பூ – குட் Blog பகுதியிலும் இதயத் திருடி அவள் – ஜீட் பகுதியிலும் பிரசுரித்திருந்தார்கள். அவற்றிற்கான பகுதிக்குச் செல்வதற்கு இங்கே சொடுக்குங்கள். இதயத்
Read Moreசிறுவர்கள் செய்கின்ற சின்ன சின்னக் குறும்புகள் சிரிப்பை தருவது உண்மைதானே.. சற்று இங்கே பாருங்களேன் இவரின் குறும்பை…
Read Moreதமிழ்மணத்தில் நுழையவிரும்பி நான் முயற்சித்த போது, ஆகக் குறைந்தது 3 பதிப்க்களாவது இடப்பட்டிருக்க வேண்டும் என்ற அறிவித்தலைப் பார்த்தேன். எனது இப் பதிப்பின் ஊடாக தமிழ்மணத்தில் நுழையலாம் எனத் தோணுகின்றது… எனக்கு அவ்வளவாக எழுதத் தெரியாது.. இருந்தாலும் எழுத ஆசைப்பட்டு தொடங்குகின்றேன். ;)) உங்களது ஆதரவையும் அரவணைப்பையும் எதிர்பார்த்து நிற்கின்றேன்…. ;))
Read Moreஇன்றைய உலகில் முதலில் தட்டுபவனுக்கே கதவு திறக்கும். முன்னாடி ஓடி வருபவனால்த்தான் முதலில் வெற்றியைத் தொட முடியும். நாலுகால் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் உலகம் எவர் குறித்தும் அனுதாபப்பட்டு நின்று சிந்திப்பது கிடையாது. வாழ்க்கையில் சலிக்காமல் ஓடிக்கொண்டிருப்பவனே வெற்றியாளனாகின்றான். எவ்வளவு தோல்விகளிலும் ஏன் தொடர் தோல்விகளிலும் கூட மீண்டும் ஒரு முறை என முயற்சி செய்பவனைக்கண்டு தோல்வி கூட பயந்து ஓடிவிடும். நம்முடைய எண்ங்களின் அழுத்தம்தான் – அதன் வலிமைதான் வெற்றிக்கு நம்மை இழைத்துச் செல்கின்றது. ஆனால் நமக்கு
Read More