Category: குறும்புகள்
கவிப் பேரரசு வைரமுத்துவின் காதலித்துப் பார் என்ற கவிதையை வாசிச்சிருப்பீர்கள். அழகான காதல் கவிதை. அண்மையில் லோசன் அண்ணாவின் ஃபெயில் பண்ணிப்பார் என்ற சுவாரஸ்யமிக்க கவிதையை வாசித்தேன். அழகாக ஃபெயில் பண்ணிய மாணவன் ஒருவனின் உணர்வுகளை வடித்திருந்தார். மிகவும் இரசித்து வாசித்தேன். சரி ஃபெயில் பண்ணிய மாணவன் ஒருவனின் உணர்வுகளை தெளிவாக பிரதி பண்ணியிருந்த அந்தக் கவிதைப் படித்திருப்பீர்கள். இப்போது அதே மாணவன் 3 A எடுத்திருந்தால் எப்படியிருக்கும். இதோ லோசனின் ஃபெயில் பண்ணிப்பார் இற்குப் போட்டியாக
Read Moreஅலுவலகத்தில் நீண்ட வேலைக் களைப்பில் நள்ளிரவு தாண்டிய நேற்றைய இரவில் மெல்லக் காலாற மனதிற்கு இதமாக வெற்றி FM மை மெல்லிய தொனியில் iPod இனை காதுகளுக்கருகில் நீட்டப்பட்ட headset என்னும் தொடுப்பின் ஊடாக மெல்ல இசைக்க விட்டபடி காலி வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தேன். நள்ளிரவில் தூறிச் சென்ற மழையின் பின் இதமாக வீசிக் கொண்டிருந்த மெல்லிய காற்று முகத்தில் படும்போதெல்லாம் எனக்குள் சிலுசிலிர்க்க வைத்தன என் நரம்பு மண்டலங்கள். என்னை நான் மறந்து, கால்கள்
Read Moreநான் ஊஞ்சலாட வந்த கதை.. இல்லை இல்லை பதிவெழுத வந்த கதை.. நான் பதிவுலகில் கிறுக்குவதே பெரிய கதை. அப்படியிருக்க பதிவெழுத வந்த கதையென்று என்னத்தை இவன் அறுக்கப்பபோறானோ என்றா யோசிக்கின்றீர்கள். எல்லாம் எனது நண்பர் பால்குடி செய்த வேலை. பால்குடி பாலைக் குடித்து விட்டு என்னை கதைசொல்லக் கூப்பிட்டுள்ளார். என்ன செய்ய இதை வாசிக்கும் போது பால்குடிக்கு காதால் இல்லை கண்ணால் இரத்தம் வடியாமல் இருந்தால் சரி. என்கதை தொடங்கும் நேரம் இது… அதாகப் பட்டது
Read Moreஅதே கணிதபாட பிரத்தியேக வகுப்பறையின் கரும்பலகையில் சில சமன்பாடுகள் திரிகோண கணிதத்தில் சமனிலிகளுக்கான அந்த சமன்பாடுகள் கரும்பலகையென்னும் பிரபஞ்ச வெளியில் முடிவற்று விரிந்து கொண்டேயிருந்தன.. சோவென அடித்துக் கொட்டும் மழையில் நனைந்த விட்டில் பூச்சிகள் பல குளிர்காய அந்த அறையில் மின் விளக்கை வட்டமடித்தபடி.. சுமந்து வந்த ஈரம் நீங்க விளக்கை முட்டி முட்டி மோதி தங்களை உலர்த்திக்கொண்டிருந்தன அந்த விட்டில்கள்… வகுப்பறையின் முதல் வாங்கின் ஓரத்தில் என்னவள் கடைசி வரிசை வாங்கின் ஓரத்தில் நான் சிக்கியிருந்தோம்
Read Moreநாம் கை கோர்த்து நடக்கும் போதெல்லாம் மழை மேகங்களுக்குச் சந்தோசமோ இப்படி ஆர்ப்பரிக்கின்றனவே முழக்கங்களாய் வெட்டி வெட்டிக் கண்சிமிட்டுகின்றனவே மின்னலாய் சில்லென ஒடுங்குகின்றனவே மழைத்துளிகளாய் உன்னைத் தானே தொட்டுக் கொண்டேன் மழைத்துளிகளுக்கு ஏன் இந்த நாணம் உன்னிடமே கடன் வாங்கி இப்படிச் சிலிர்க்கின்றனவே போதுமடி இனியும் கடன் கொடுத்து நிரந்தரக் கடனாளியாக்காதே மழைத் துளிகளை! நல்லாயிருந்தா தமிழிஸ் இல் வாக்களிக்க இங்கே சொருகுங்கள்.
Read Moreகண்கள் – அவை காதலின் தொடக்கப் புள்ளி காதலென்னும் காவியத்தின் பல்லவி வரிகள் கனவுகள் சஞ்சரிக்கும் நித்திய வானம்…. இவற்றை எல்லாம் விட – அவை உனை ரசிக்க இறைவன் எனக்கருளிய வரப்பிரசாதம் அன்றோ!
Read Moreகணணி மென்பொருள் வல்லுனர்கள் சின்னக் குறும்புத்தனம் மிக்கவர்கள் என்று முன்னர் கேள்விப்பட்டு இருக்கின்றேன். தாங்கள் வடிவமைக்கும் மென்பொருளில் சின்னச் சின்னக் குறும்புகளினைச் செய்து அது தெரியாமல் மறைத்து ஒரு மறைபொருளாக உருவாக்கிவிடுவதில் கெட்டிக்காரர்கள். இவ்வாறான மறைக்கப்பட்ட சில செய்திகள் பின்நாட்களில் வெளிக் கொணரப்படும் போது அவை அம் மென்பொருளினைப் பாவிப்பவர்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுவிடுவது உண்டு. அத்ததைய மறைக்கப்பட்ட செய்திகள் Easter Egg எனக் குறிப்பிடுவதுண்டு. முகப்புத்தகம் என்னும் Facebook அண்மைக்காலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற
Read Moreஉலகெங்கும் பன்றிக் காய்ச்சல் பயப்பீதியால் நாடுகள் பல அலறிக் கொண்டிருக்கின்றன. ஐயோடா.. எங்கே எமது நாட்டுக்கும் வந்துவி்டக்கூடாது என்பதனால் பலநாடுகளின் விமானநிலையங்களில் பலவட்டக் கண்காணிப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. Swine influenza virus என்னும் அந்த உயிர்க்கொல்லி வைரஸ் பன்றகளில் [ pigs (swine) ] இருந்து மனிதனுக்குப் பரவியதாம். எனவே பன்றி என்றாலே அலறிக்கொண்டு ஓடுகின்றார்கள் மனிதர்கள். ஆனால் இந்த சிறுமியைப் பாருங்கள். எனக்கென்ன பயம்… பன்றி என்ன பன்றி… I’m so love swine.. என்று கண்கள்
Read Moreகாலைப் பனியையும் ஊடறுத்து கண்டி நோக்கி மிகவேகமாக பறந்துகொண்டிருந்தது ஜக்குலர் கார். அதிலே நான்கு நண்பர்கள்.. வழக்கமான விறுவிறுப்பில் தம்மை மறந்து பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். நான்கு பேருமே பொறியியல் பட்டப்படிப்பை முடித்திருந்தவர்கள். ஒரு இயந்திரப் பொறியியலாளன் (மெக்கானிக்கல் என்யினியர்), ஒரு இலத்திரனியல் பொறியியலாளன் (எலக்ரோனிக்ஸ் என்யினியர்), ஒரு கெமிக்கல் என்யினியர் மற்றும் ஒரு கணணிப் பொறியியலாளன் (கொம்பியூட்டர் என்யினியர்) என அவர்களை அறிமுகப்படுத்தினால் மேலும் சிறப்பாக இருக்கும். அவர்கள் சந்தோசமாக பேசிக்கொண்ருக்க அந்த ஜக்குலர் கார்
Read Moreஎனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம் மனதில் ஓர் மூலையில் இருந்துகொண்டிருக்கின்றது… எனது பாடசாலைப் பருவத்தில் அதாவது நான் யாழ்ப்பாணம் இந்துக் கல்லுாரியில் உயர்தரம் படித்துக்கொண்டிருந்த காலத்தில் நடந்த நிகழ்வு அது. யாழ்ப்பாணத்தில் உயர்தர வகுப்புப்படிக்கும் மாணவர்கள் தமது பாடசாலை இறுதிக் காலங்களில் உயர்தர மாணவர் ஒன்றுகூடல் (A/L Social) என்னும் நிகழ்ச்சியை நடாத்துவது உண்டு (வேறு மாவட்ட மாணவர்கள் அத்தகைய நிகழ்ச்சியினை நடாத்துகின்றார்களா என்பது எனக்குத் தெரியாது). அதை ஒரு பரம்பரைப் பழக்கம் என்று கூடச்சொல்லலாம்.
Read More