Category: எனது பார்வையில்
20 சதுர கிலோமீற்றர் பரப்பளவுள்ள மிகக் குறுகிய நிலப்பரப்பிற்குள் இரண்டரை இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் எந்த விதமான அடிப்படை வசதிகளும் இன்றி நாள்தோறும் அல்லற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எந்த நேரத்திலும் மரணம் என்னும் அரக்கன் அவர்களை மிகக் கொடுமையாக விழுங்கி விடக்கூடும். மரணம் என்பது தவிர்க்கக் கூடியது அல்ல. ஆனால் அம்மரணம் எவ்வாறு வருகின்றது என்பதுதான் அவர்களுக்கு மிகக் கொடுமையான விடையம். கண் முன்னே பெற்ற தாய் தந்தையர், பெற்ற பிள்ளைகள் உடல் சிதறி குற்றுயிராய்க் கிடக்கும் போது
Read Moreநீண்ட காலத்தின் பின்னர் இன்று குயிலின் இனிய கூவும் குரலினைக் கேட்டேன். கற்பனைக்கு உடனடியாகச் சென்றுவிடாதீர்கள் உண்மையில் நான் சொல்ல வந்தது குயில் என்னும் பறவையினைப் பற்றித்தான். ஒரு சின்னப் பறவைக்குள் என்ன ஒரு கம்பீரமான கணீர் என்ன குரல் அடங்கியிருக்கின்றது. தன் ஜோடிக் குயிலினை என்ன அழகாகக் கூவியழைக்கின்றது அந்தப் பறவை. என்ன ஒரு இனிமையான குரல். கேட்பவர்களை மயக்கும் மன்மதக் குரல். எந்தவிதமான கரகரப்புக்களும் இன்றி தெளிவாக ஒலிக்கும் குரல். இளவேனிற் காலம் என்றாலே
Read Moreஅனிச்சம்பூ என்றவுடனே எல்லோர்க்கும் ஞாபகத்திற்கு வருவது அதனது மென்மையான இயல்புதான். எம் கைகளால் தீண்டினாலே வாடிவிடக்கூடிய மென்மையான பூ. ஏன் முகர்ந்து பார்த்தாலே வாடிவிடுமாம் இந்த அனிச்சம்பூ. மென்செம்மஞ்சள் நிறத்தில் ஐந்து இதழ்களில் விரிந்திருக்கும் இந்தப் பூ பார்ப்பதற்கு தனியழகு. அந்த அழகான மலரின் சில படங்களை இங்கே தருகின்றேன். நீங்களும் பார்த்துத் இரசித்துக் கொள்ளுங்களேன். சரி விடையத்திற்கு வருவோம். தமிழ் இலக்கியங்களில் பல இடங்களில் இந்த அனிச்சம்பூ கையாளப்பட்டு இருந்தாலும் திருவள்ளுவர் பல குறள்களில் அழகாக
Read More“பாராளக் கன்னன் இகல் பார்த்தனை முதலிற் கொன்று, அணங்கின் காரார் குழல் களைந்து காலில் தளை பூட்டி, நேராக நின்னையும் யான் பிடித்துக் கட்டுவேனானால் வாராமல் தடுக்கலாம் மாபாரதம்.. “ இந்த வரிகள் மகாபாரதத்தில் மிகவும் பிரபல்யமானவை. மகாபாரத யுத்தம் மூழ்வதற்கு முன்னர் கார்மேக கண்ணன் ஜோதிடக் கலையில் சிறந்து விளங்கிய சகாதேவனை நோக்கி வரப்போகின்ற பாரத யுத்தம் நிகழாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் எனக் கேட்ட போது சகாதேவன் கூறிய வரிகளே அவை. கர்ணன்
Read Moreநீண்ட நாட்களின் பின் எனது வலைப் பூக்களின் மீண்டும் கவனம் செலுத்த நேர்ந்தது இன்று தமிழ் நாட்டில் நடத்த சம்பவம். இறுதியாண்டு பரீட்சைகள் மிக வேகமாக நெருங்கிக் கொண்டிருப்பதனாலும் இறுதியாண்டு செயற்திட்டத்தின் இறுதித் திகதி அதைவிட வேகமாக முன்னால் வந்து நின்று பயமுறுத்துவதனாலும் நீண்ட காலமாக வலைப் பூக்களில் எதுவும் உருப்படியாக எழுதுவதில்லை. நாள்தோறும் வருகின்ற வன்னிச் செய்திகளின் கனதி இங்கே மனங்களில் உறுத்தலைக் கூட்டிக் கொண்டிருக்கின்றது. அதைவிடவும் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் இருக்கின்றதே
Read Moreவீரம் விளைந்து விளையாடும் எம்மண்ணில் இருந்து ஓர் குரல் இது.. அன்னைத் திருநாடே.. அழகொளிரும் எம் ஊரே.. மண்ணைக் குழைத்து எடுத்து பாட்டிசைத்த தாய் வீடே.. தாயாள் முலை தந்தாள் தமிழாள் மொழி தந்தாள் பூவாய் மலர உந்தன் பொன்மடியில் இடம் தந்தாய் கண்திறந்த நாள் முதலாய் கையெடுத்து தூக்கி எம்மை உன் மடியில் தானே உறங்குவதற்குப் பாய் விரித்தாய்.. வன்னியிலிருந்து ஓர் குரல் …
Read Moreஎனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம் மனதில் ஓர் மூலையில் இருந்துகொண்டிருக்கின்றது… எனது பாடசாலைப் பருவத்தில் அதாவது நான் யாழ்ப்பாணம் இந்துக் கல்லுாரியில் உயர்தரம் படித்துக்கொண்டிருந்த காலத்தில் நடந்த நிகழ்வு அது. யாழ்ப்பாணத்தில் உயர்தர வகுப்புப்படிக்கும் மாணவர்கள் தமது பாடசாலை இறுதிக் காலங்களில் உயர்தர மாணவர் ஒன்றுகூடல் (A/L Social) என்னும் நிகழ்ச்சியை நடாத்துவது உண்டு (வேறு மாவட்ட மாணவர்கள் அத்தகைய நிகழ்ச்சியினை நடாத்துகின்றார்களா என்பது எனக்குத் தெரியாது). அதை ஒரு பரம்பரைப் பழக்கம் என்று கூடச்சொல்லலாம்.
Read Moreஇந்த நாகரீகமடைந்த உலகில் மனிதப் பேரவலம் மிக மோசமாக அதுவும் ஒரு அரசாங்கத்தினால் அரங்கேற்றப்படுவது இங்கேதான். அதுவும் தன்னை ஒரு சனநாயக அரசு என நிமிசத்துக்கு நிமிசத்துக்கு கூறிக்கொள்ளும் அரசு தமிழ் மக்களுக்கு நாள்தோறும் அளித்துவரும் சனநாயகப் பரிசுகள் ஏராளம் ஏராளம். அதுவும் வன்னி மக்களுக்கு என்றால் அரசாங்கத்தின் அதிவிசேடமான கவனிப்புக்கள் பல. நாள்தோறும் தவறாது விமானக் குண்டுகள், ஆட்லரி செல்கள், பல்குழல் பீரங்கிகள் எனப் பல வகையான மரண தூதுவர்களை அனுப்பத் தவறுவதில்லை அரசு. இதுவும்
Read Moreசில விடையங்கள் எப்போதும் அழகாக, மனதிற்கு இதமாக அமைந்து விடுகின்றன. தீபாவளிக்கு புது உடுப்பு உடுத்தி, கோவிலுக்கு சென்றுவிட்டு பின் உறவினர் வீடுகளுக்கும் சென்று அவர்களுடன் மகிழ்ச்சியாக சிறிது வேலைப்பழு மற்றும் புறெஜக்ட் வேலைகளை மறந்து உரையாடுவது ஒருவித சந்தோசம்தான்… மனிதன் இத்தகைய கொண்டாட்டங்களைக் கண்டுபிடித்ததே இதற்காகத்தானெ.. மனதிற்குப் பிடித்தவர்களை வாழ்த்துவதும் அவர்களிடம் இருந்து வாழ்த்துக்களைப் பெறுவதும் மனதில் இன்பப் பெருக்கை ஊற்றெடுக்கச் செய்யும் அம்சங்கள். இன்று காலை கண்விழித்ததே எனது கைத்தொலைபேயின் சிணுங்கலைக் கேட்டுத்தான். தித்திக்கும்
Read MorePodCast என பல ஆங்கில இணையத் தளங்களில் பிரபல்யம் பெற்று விளங்கும் ஒலித் தொகுப்புக்களில் பல தரப்பட்ட விடையதானங்களை அலசியிருக்கின்றார்கள். அனேகமாக அவை ஒன்றிற்கு மேற்பட்ட நபர்களின் மிக நேர்த்தியான திட்டமிடலுன் தொழில்நுட்பம் சார்ந்த ஒருங்கிணைந்த ஒரு மணி நேரத்திற்கும் குறையாத உரையாடலாக அமைவதுண்டு. ஆனால் தமிழில் இவ்வாறான முயற்சிகள் மிக அரிதாகவே மேற்கொள்ளப் படுகின்றன. ஆனால் நிமல் மற்றும் ரமணன் இணைந்து வலைப் பதிவுலகில் புதிய முயற்சி ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்கள். நேர்த்தியான திட்டமிடலுடன் ஒலியோடை என்னும்
Read More