Category: எனது பார்வையில்
அலுவலகத்தில் நீண்ட வேலைக் களைப்பில் நள்ளிரவு தாண்டிய நேற்றைய இரவில் மெல்லக் காலாற மனதிற்கு இதமாக வெற்றி FM மை மெல்லிய தொனியில் iPod இனை காதுகளுக்கருகில் நீட்டப்பட்ட headset என்னும் தொடுப்பின் ஊடாக மெல்ல இசைக்க விட்டபடி காலி வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தேன். நள்ளிரவில் தூறிச் சென்ற மழையின் பின் இதமாக வீசிக் கொண்டிருந்த மெல்லிய காற்று முகத்தில் படும்போதெல்லாம் எனக்குள் சிலுசிலிர்க்க வைத்தன என் நரம்பு மண்டலங்கள். என்னை நான் மறந்து, கால்கள்
Read Moreஅழகான பூக்களை புகைப் படங்களாக்குவது எவ்வளவு சுவாரஸ்யமான அழகான விடயம். கட்டுப்பெத்தை சந்தியில் தம்பி வாங்கி வந்த ரோஜா வாங்கிவரும்போதே இரண்டு மொட்டு விட்டிருந்தது. எப்போது பூக்கும் எனக் காத்திருந்த போது இன்று காலை நித்திரைவிட்டு எழுந்ததும் பூத்திருந்த அந்த ரோஜாப் பூத்தான் கண்ணில்ப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அதிகாலை என் வாசலை நனைத்துச் சென்ற அந்த தூறல் மழை மேலும் அழகு சேர்த்திருந்தது பூவிற்கு. உடனடியாக cameraவினை எடுத்து ரோஜாவினை படங்களாக்கினேன்.. அதன் பின்னர்தான் அலுவலகத்திற்கு புறப்பட்டுச் சென்றேன்.
Read Moreமனிதனை ஏனைய விலங்களில் இருந்து வேறுபடுத்தி அவனுக்கேன்று தனித்துவத்தைக் கொடுப்பது அவனின் பேச்சாற்றல். இந்தப் பேச்சுத்திறமை என்பது இன்று நேற்று வந்த ஆற்றல் அல்ல. பல நீண்ட பரிணாம வளர்ச்சிப் பின்னணி இந்த பேச்சாற்றலோடு தொடர்புடைய மொழிப் பிரயோகத்திற்கு உண்டு. இவ்வாறு பல வளர்ச்சிகளைக் கடந்து இன்று தனக்கென்ற தான் பயன்படுத்தப்படும் பிரயோக நிலைகளில் தனது தனித்துவத்தைப் பேணுகின்றன ஒவ்வோர் மொழியும். ஒவ்வோர் சமூகத்திற்குமான கலாச்சார விழுமியக் கோட்பாடுகளின் கட்டமைப்பிலான ஒழுங்கமைப்புகள் மொழி என்னும் அடித்தின் மீதே
Read Moreஎன்ன காதலிக்கின்றீர்களா.. உங்கள் காதலி உங்களிடம் பேசும் போது, கொஞ்சிக் குலாவும் வார்த்தைகளைக் கவனித்துள்ளீர்களா.. காதலி கொஞ்சும் காதல் மொழிகள் காதலர்க்கு உற்சாக அதிரசம். காதலி திட்டும் போது அவற்றை இரசித்துள்ளீர்களா.. என்ன காதலி திட்டும் போது இரசிக்கச் சொல்கின்றேனா.. இரசித்துப் பாருங்கள். அவர்களின் அழகுக்கே தனியழகு விளங்கி ஜொலிப்பார்கள். நெஞ்சம் தொட்டு இதயம் குடிகொண்டவள் செல்லமாக திட்டும் போது சிலிர்ப்புடன் காதல் எல்லைக் கோடுகளைக் கடக்கும். சொந்தம் பந்தம் ஏதும் இல்லாமல் கண்ணில் விழுந்து காதலன்
Read Moreநீண்ட பெருவெளியில் பயணிப்பது போல நாம் வாழ்க்கை போய் கொண்டே இருக்கின்றது. அந்தப் பயணப் பாதை மென்மையா பூக்கள் சொரியும் மலர்ப் பாதையாக இருக்க வேண்டும் என்பதே பயணத்தில் ஈடுபட்டிருக்கும் அனைவரதும் விருப்பம். ஆனால் அந்தப் பயணப் பாதை அவ்வாறு ஒருவருக்கும் மலர்பாதையாக இருப்பதில்லை என்பதே தெளிவான உண்மை. வலிதரும் முட்களும் ஆள் விழுங்கும் புதைகுழிகளும் கசப்புக்கள் நிறைந்த பாலைநிலங்களும் என அந்தப் பாதை நெடுகிலும் பல்லாயிரம் குறைகள் அங்கே காணப்பட்டாலும் ஆங்காங்கே பன்னீர் என்னும் இன்ப
Read Moreதமிழ்மொழியின் சக்தி! எத்தகைய செய்தியையும் முதலில் முந்திக்கொண்டு முதலில் மக்களுக்குத் தருபவர்கள் நாங்கள். தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள். இவை இலங்கையில் தம்மை முக்கியமான முதன்மையான தொலைக்காட்சியாகக் காட்டிக் கொள்ளும் சக்தி தொலைக்காட்சியின் அலங்கார மகுடங்கள். இலங்கையில் தொலைக்காட்சி வரலாற்றில் சக்தி தொலைக்காட்சிக்கு முக்கியமான இடம் உண்டென்றால் அது யாராலும் மறுக்க முடியாது. பல புதிய விடையங்களை அறிமுகப்படுத்தி இலங்கைத் தொலைக்காட்சிகளில் முக்கியமான இடத்தைத் தனதாக்கிக் கொண்டது உண்மைதான். ஆனாலும்… சக்தித் தொலைக்காட்சியில் தமது தயாரிப்பு என்றும்
Read Moreபின்ன என்ன! மிகக் குறுகிய காலத்தில் பலரும் வியக்கும் வண்ணம் எண்பதிற்கும் மேற்பட்ட இலங்கைப் பதிவர்களை ஒன்றிணைத்து, அதனை விடவும் நேரலையில் நுாறிற்கும் மேற்பட்ட பதிவர்களை கவர்ந்திழுத்து ஆர்வத்துடன் தமது கருத்துக்களை எம்மோடு பகிர்ந்து கொள்ள வைத்த இந்த இலங்கைப் பதிவர் சந்திப்பு வரலாற்றின் பக்கத்தில் பதியப்படவேண்டிய ஒன்றுதானே. ஏற்பாட்டுக்குழுவின் நேர்த்தியான திட்டமிடலாலும் கால நேரம் பாராத கடின முயற்சியினாலும் மட்டுமல்ல இலங்கையில் உள்ள அனைத்துப் பதிவர்களினதும் கைகோர்த்த பேராதரவினாலுமே இந்த வரலாற்றுப் பதிவு சாத்தியமாகியது. வெள்ளவத்தை
Read Moreநீண்ட காலமாக வலைப்பூக்களின் பக்கம் வருவது அரிதாகவே இருக்கின்றது. அவ்வாறு வந்தாலும் சும்மா ஏதாவது கிறுக்கிவிட்டு சென்று விடுவதுதான் வழமை. வேலைத்தளத்தில் தலைக்கு மேல் உள்ள வேலைப்பழுவே காரணம். வேலை நேரத்தில் பதிவுலகத்தில் நீண்ட நேரத்தை செலவிடமுடியாமையே அதற்கான காரணம். அண்மையில் சக பதிவாளரும் என் பல்கலைக்கழக கனிஸ்ட நண்பருமான சுபாங்கனிடம் இருந்து கிடைத்த பட்டாம்பூச்சி விருதி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. அதுவும் கன்னி அரைச் சதத்தைத் தொட்டுக்கொள்ளும் போது விருது. இரடிட்டிப்பு மகிழ்ச்சி. அந்த விருதினைப்
Read Moreநாளை சூரிய கிரகணமாம். அத்தோடு சுனாமி வேறு வரக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கின்றனவாம். இவைதான் இன்றைய கூடான செய்திகள். 2004ம் ஆண்டு சுனாமியின் தாக்கத்தில் இருந்தே நாம் இன்னமும் முழுமையாக மீளாத இந்த சந்தர்பத்தில் இன்னும் ஒரு சுனாமியா!. அன்றைய சுனாமியின் தாக்கத்தினால் ஏற்பட்ட சேதாரத்தை பார்த்வர்களில் நானும் ஒருவன். 2004ம் ஆண்டு நவம்பர் 26ம் திகதி யாழ் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட பல காயம்பட்டவர்களின் அவலக்குரலினைக் கேட்டவன். 2004ம் ஆண்டு சுனாமியின் ஞாபகச்சின்னங்கள் இன்னமும் நம்மத்தியில்
Read Moreஎங்களோடு வரப்போகின்றாயா அல்லது உன் தங்கச்சியைக் கூட்டிக்கொண்டு போகட்டுமா.. சில அதிகாரக் குரல்கள் நிதர்சனை நிலைகுலைய வைத்தன. ஐயோ தம்பி என் புள்ளைய விட்டுடுங்க… என்ர தலைப்புள்ள அவன்.. உங்களுக்கு புண்ணியமாப் போகுமையா.. அவனை விட்டுடுங்க… அவன் பச்சப்பாலகன் தம்பி, இப்பத்தான் பதினாறு தொடங்கினது. அவனுக்கு ஒண்ணும் தெரியாது..விட்டுடுங்க எம் புள்ளையை… என்று அந்த அதிகாரக் குரல்களுக்குச் சொந்தக்காரர்களின் கால்களைப் பிடிக்காத குறையாகக் கெஞ்சினாள் அவன் தாய் சீதாலக்மி.. இங்க பாருங்க அம்மா, குடும்பத்திற்கு ஒருத்தர் கட்டாயம்
Read More