Category: எனது பார்வையில்
காதலை தேடிக்கிட்டு போக முடியாது… அது நிலைக்கணும்… அதுவா நடக்கணும்… நம்மள போட்டு தாக்கணும்… தலைகீழ போட்டு திருப்பணும்… எப்பவுமே கூடவே இருக்கணும்… அதான் ட்ரூ லவ்… அது எனக்கு நடந்தது!… விண்ணைத்தாண்டி வருவாயா – மின்னலேயின் பின்னர் முழுக்க முழுக்க காதலை மட்டும் வைத்து கௌத்தம் மேனனால் செதுக்கப்பட்ட அழகான காதல் சிற்பம் இந்த விண்ணைத் தாண்டி வருவாயா. எந்தவிதமான அடதடி வீர வசனங்கள் இல்லாமல் யதார்தமாக காதலை மட்டும் நம்பி கதையினை மெல்ல அழகாக
Read Moreஇலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான, மிகவும் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்கப்பட்ட தேர்தல் இன்று (27-01-2010) கணிப்புக்களை தவிடுபொடியாக்கி நிறைவினை நோக்கி வந்துள்ளது. சற்று முன்னர் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸ்ஸநாயகத்தினால் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்ட அறிக்கையின் படி அதிமேதகு ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஜ அவர்கள் 6.01 மில்லியன் வாக்குகளைப் பெற்று முன்னிலையில் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தன்னோடு போட்டி இட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத்
Read Moreஇஞ்சி குடுத்து மிளகு வாங்கிய வரலாறு அந்தக் காலம். ஆனால் மந்திரவாதியை விரட்ட பேய் ஒன்றினை வரவைக்க வேண்டிக்கிடக்கின்றது இன்றைய காலத்தில். 2010 ஜனவரி 26 – இலங்கை சோசலிசக் குடியரசின் 6ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. முப்பது வருடங்களாக தமிழரின் உரிமையை மீட்டெடுக்க தமிழீழ விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட இலங்கை அரசுடனான போரின் முடிவுரை தற்போதைய ஜனாதிபதியினால் கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் எழுதி வைக்கப்பட்டது. பல்லாயிரம் அப்பாவி உயிரகளைக்
Read Moreநீண்ட நெடிய பாலைமரங்கள் சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்தில் தாம் நனைந்து அவை நின்ற குளக்கரையின் வீதியின் குளிர்ச்சிக்கும் அருகிருந்த பாலர் பாடசாலையின் சிறார்களின் பிஞ்சுத் தேகத்திற்குமாக நெடுங்குடை விரித்து எப்போதும் புன்னகைப் பூக்களை அள்ளி வீசிக்கொண்டிருந்தன புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தின் முன்பாக. அழகான என்றும் வற்றாக குளத்தின் ஒரு கரையில் விநாயகரும் மறுகரையில் ஜேசுபாலனுமாக புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தின் சிறார்களுக்கு அருள் ஆசியினை என்றும் குறையாது வழங்கிக்கொண்டிருந்தார்கள். வெள்ளிக் கிழமை என்றால் விநாயகரும் திங்கள்
Read Moreஎமகெல்லாம் ஒளி கொடுக்க நீர் நெய்விளக்கானீர் அந்திவானம் சிவக்கும் நேரம் கீழ்வானக் கரையில் அந்த சூரியனே உங்களுக்காக சிலகணம் செந்தழலாய்யொலிக்கும் மண்ணகத்தில் மரங்களும் உங்களின்மீது பூமழை தூவும் விண்ணகத்து விண்மீன்கள் காரிருளையும் கிழித்து ஒளிமழைதூவும் நிலையில்லா மேகமும் தன்நினைவாக பன்னீரிரைத் தெளிக்கும் இத்தனையும் அவைகள் செய்ய…!!!! நாங்கள் …?????? எமகாக உணர்வைச் சுமந்து மீளாத்துயிலில் இன் உயிரை ஒளியாக்கி எம் இருளகற்ற முயன்றீர்களே.. காலங்கள் தோறும் உங்கள் நினைவு சுமக்கும் சிலுவைகளாவோம்…!!! காலங்கள் தோறும் உங்கள் புகழினை
Read Moreபுரட்சி கவிஞர் பாரதிதாசனின் இந்தக் கவிதை அந்த வானத்து சூரியனின் புகழ்தனை அழகாகச் சொல்கின்றனது. என்ன ஒரு கவிதை.. இன்று ஏனோ மிகவும் ஆழமாக உணர்வுகளைப் பிழிந்து இரசிக்கச் சொல்கின்றது. இளங்கதிர்எழுந்தான்; ஆங்கே இருளின்மேல் சினத்தை வைத்தான்; களித்தன கடலின் புட்கள்; எழுந்தன கைகள் கொட்டி! ஒளிந்தது காரி ருள்போய்! உள்ளத்தில் உவகை பூக்க இளங்கதிர், பொன்னிண றத்தை எங்கணும் இறைக்க லானான். என்றென்னைக்கும் அவன் சூரியன்தான்.. நினைத்தாலே சுட்டெரிக்கும் இருள்களுக்கு..
Read Moreசில பாடல்கள் அப்படியே மனதின் அடி நாதத்தை வருடிச்சென்று விடுகின்றன. கேட்கக் கேட்கத் திகட்காமல் மேலும் மேலும் பாடலின் ஊடே இலயித்துப் போய்விடும் மனது. மென்மையாக பரவும் சங்கீதம் மனதின் அந்தரங்கத்தில் எப்போதும் மீள மீள ஒலிபரப்பாகிக் கொண்டே இருக்கும். அத்தகைய பாடல்கள் முன்னர் திரைப்படங்களின் ஊடாகவே மக்களின் மனங்களை அடைந்தது. ஆனால் இன்று பற்பல பாடல்கள் பல்வேறு வழிகளில் மனங்களை நிறைக்கின்றன. அது போலத்தான் இந்தப் பாடல் காதலிக்க நேரமில்லை என்ற விஐய்த் தொலைக்காட்சி தொடருக்காக
Read Moreஎங்கெங்கு காணினும் மென்பொருள் கம்பனிகளடா.. உலகின் எங்கோ மூலையில் இருக்கும் client இற்கு இங்கிருந்து மென்பொருள் என்னும் கட்டம் கட்டுகின்றார்கள் இவர்கள். உண்மையில் இதுவும் ஒரு கட்டடம் கட்டும் தொழில்தான்.. ஆரம்ப அடித்தளத்தில் இருந்து மேல் விட்டத்தில் தொங்கும் திருஷ்டிப் பூசனி வரை இங்கிருந்து தான் வடிவமைத்துக் கொடுக்கப்படுகின்றது. பலசமயங்களில் client இனை அந்தக் கட்டடித்தில் குடியமர்த்தி அவர்கள் எதுவித பிரச்சினையும் இல்லாது இயங்குகின்றார்களா என்றும் பார்க்க வேண்டியது இந்த மென்பொருள் கம்பனிகளின் வேலையாகின்றது. இப்படியான மென்பொருள்
Read Moreகவிப் பேரரசு வைரமுத்துவின் காதலித்துப் பார் என்ற கவிதையை வாசிச்சிருப்பீர்கள். அழகான காதல் கவிதை. அண்மையில் லோசன் அண்ணாவின் ஃபெயில் பண்ணிப்பார் என்ற சுவாரஸ்யமிக்க கவிதையை வாசித்தேன். அழகாக ஃபெயில் பண்ணிய மாணவன் ஒருவனின் உணர்வுகளை வடித்திருந்தார். மிகவும் இரசித்து வாசித்தேன். சரி ஃபெயில் பண்ணிய மாணவன் ஒருவனின் உணர்வுகளை தெளிவாக பிரதி பண்ணியிருந்த அந்தக் கவிதைப் படித்திருப்பீர்கள். இப்போது அதே மாணவன் 3 A எடுத்திருந்தால் எப்படியிருக்கும். இதோ லோசனின் ஃபெயில் பண்ணிப்பார் இற்குப் போட்டியாக
Read Moreநேற்று சக பதிவர் ஒருவருடன் கதைத்துக் கொண்டு இருக்கும் போது கேட்டார் உங்களுக்கு என்ன என்ன பிடிக்கும் என்ன என்ன பிடிக்காது எனச் சொல்லுங்களேன் என்று. சரி எனக்கு என்ன என்ன பிடிக்கும் எனப் பட்டியல்ப்படுத்த வெளிக்கிட்டால் அது பெரும் இராட்ஷச ரயில் போல நீளத் தொடங்கியது. கொஞ்ச நேரத்திற்குப் பொறுமையாகக் கேட்டவர் பின்னர் கடுப்பு வந்ததோ என்னமோ தெரியாது நீங்கள் பதிவொன்றில் போடுங்களேன் நான் இரசித்தது போல மற்றவரகளும் இரசிக்கட்டுமே எனக் கேட்டுக்கொண்டார். உண்மையிலே தாம்
Read More