Category: எனது பார்வையில்
கண்ணாடிக்குள் பிம்பம் அதை இவள் காட்டினாள்.. கேட்காத ஓர் பாடல் அதில் இசை மீட்டினாள்.. தெய்வத் திருமகளினைப் பார்த்துவிட்டு திரையரங்கினை விட்டு வெளியே வரும் விழிகளினோரம் ஈரம் வந்து குடை ஒன்று கேட்டதே.. விழிகளின் மீதிலே சிலதுளியும், உதட்டினில் மெலிதாய் ஒரு புன்னகையுமென திரையரங்கிலிருந்த வெளியே வருகின்ற அனைத்து முகங்களையும் அலங்கரிக்கச் செய்திருந்தது தெயவத்திருமகள். மீண்டும் ஒர் அழகான ஓவியம் தமிழ் சினிமாவில் தீட்டப்பட்டுள்ளது. முழுமையான படைப்பு ஒன்று. அத்தனை அம்சங்களும் நிறைந்திருந்து மனதினையும் நிறைத்திருந்தது இந்தப்
Read Moreஅவ மூக்கு மேல வேர்வையாகணும் இல்ல நாக்கு மேல வார்த்தையாகணும் அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகணும் இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகணும்.. மெல்ல கண்களை மூடியபடி சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயிலில் நிலக்கீழ் பாதைவழி வீடு நோக்கிய பயணம் ஒன்றில்தான் எனக்கு அறிமுகமாகியது இந்தப் பாடல். காதுகளுக்குள் தணிந்த குரலில் ஐபோனில் ஒலித்துக் கொண்டிருந்த இலங்கையின் வெற்றி வானொலிதான் எனக்கு அறிமுகப்படுத்தியது. பல்லவியிலேயே என் மனதினை ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டது பாடல். பாடல் தொடரத் தொடர என்னை
Read Moreஅல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை. இரண்டு வருடங்களுக்கு முன்னர்.. இதே நாள் இதே நேரம்.. எத்தனை பேர் தங்கள் உயிரைக் கையில் பிடித்துகொண்டு தவித்துக் கொண்டிருப்பார்கள். புகழ் மிக்க மக்கள் சமுதாயம் ஒன்று மிகக் கோரமான யுத்த அசுரனிடம் சிக்கி தங்களின் எஞ்சியிருந்த உயிர்களுக்கா பரிதவித்துக் கொண்டிருந்த நேரம். கண்முன்னே உடன் பிறப்புக்களும் தன் குழந்தைகளும் உடல் சிதறிப் பலியாவதைப் பார்த்து கண்ணீராக இரத்தம் வடிந்த மக்கள் அதனைத் துடைக்க அவகாசம் இன்றி
Read Moreஒரு கையில் சின்ன மரப் பொச்சுக்களாலான கூட்டினைத் தாங்கிய படியும் மறு கையில் சொட்டச் சொட்ட இரத்தம் வழிந்த படியும் அவசரமாக வீட்டினை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தாள் வாசுகி. “ஒரு கெல்ப் பண்னேண்டா சுதா..” வீட்டுக்குள் தன் ஒரு வயதுக் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த சுதாகரை அழைந்தாள். என்ன வாசு எனத் திரும்பிப் பார்த்த சுதாகர் ஏங்கிப்போனான். “என்னடி இது.. வாசு..” அவள் கைகளில் சொட்டிக் கொண்டிருந்த இரத்தத் துளிகளைப் பார்த்து பதறிப் போய் அவள் கைகளைப்
Read More“நீயே பயம் என்னும் இருளை அகற்றி நாளைய பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும் சூரியனும் அந்த சந்திரனும்!” கொழும்பு முதல் அம்பாந்தோட்டை வரை எங்கும் காணப்படும் வீதியோர வாழ்த்துப் பதாதைகளில், அனேகமாக சிங்கள மொழியிலும் ஆங்காங்கே தமிழிலும் காணப்படும் வாசகம் அது. Picture-‘Sri Lanka President sworn-in ceremony for a second term’ courtesy Dailymirror.lk மகிந்த இராசபக்சவினது “அரச முடிசூட்டு விழா”(Royal Coronation) இன்று இலங்கை தலைநகர் கொழும்பில் மிகவும் ஆர்ப்பாட்டான முறையில் நடந்தேறியது. பல
Read Moreசரியான நேரத்தில் சரியான கேள்விகளினால் தமக்கு தேவையானவற்றை வெல்லுகின்ற திறமை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. தொழில் தளங்களிலோ அல்லது அதற்கு வெளிக் களங்களிலோ ஏற்படுகின்ற தேவையற்ற விடயங்களில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளவும், எமது எதிர்பார்ப்புக்களை வெற்றி கொண்டு நினைத்தவற்றை அடையவும் இந்தத் திறமை நிட்சயமாக அவசியம். அதாவது கேள்வி என்ன தந்திரத்தின் மூலம் நாம் எமது இலக்குகளை இலகுவாக அடைந்து விடலாம். எமது நண்பர்கள், அலுவலக நண்பர்கள், ஊழியர்கள், மேலும் அலுவலக மேலதிதாரிகளுடன் நாம் பல சமயங்களில்
Read Moreசிவப்புக் கிரகத்தை நோக்கி மனிதக் குடியேற்றவாசிகளுடன் ஒருவழிப் பயணமாக பறக்கப் போகின்றது நாசாவின் விண்கலம். 2030 இற்குள் அந்த சிவப்புக் கிரகத்தில் முதலாவது மனிதக் குடியேற்றம் தொடங்கப்பட்டுவிடும். அங்கு செல்லப்போகும் குடியேற்றவாசிகள் எப்போதுமே பூமிக்கு திரும்பிவரவே மாட்டார்கள். ஒரு ஓவியரின் கைவண்ணம் அன்று பூமியில் கண்டங்களை நாடுகளைத் தேடித் தேடி அவற்றை மனித சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தான் மனிதன். கொலம்பஸ் (Columbus) கால்வைத்த பின்னர்தான் அமெரிக்காவும், அமுன்ட்ஸென் (Roald Amundsen) சென்றடைந்த எல்லைதான் தென் துருவ முனையாகவும்,
Read More“நாங்கள் முன்னர் குடியிருந்தோம். இப்போது இங்கே நாங்கள் மீளக்குடியமர எங்களுக்கு அரசகாணிகளை பகிர்ந்து தாருங்கள்..” யாழ்ப்பாணத்தில் புகையிரத நிலையக் கட்டடத்தில் வந்து தங்கியிருக்கும் 193 சிங்கள குடும்பங்கள் யாழ்ப்பாண அரச அதிபருக்கும் ஜனாதிபதிக்கும் அனுப்பியிருக்கும் மனுவின் சாரம்சம் இது. எங்கள் சொந்த நிலத்தில் சொந்த வீட்டீல் எங்களை வாழவிடாது எல்லாவழிகளையும் மூடிவிட்டு முன்னர் எங்களிடம் வாடகைக்கு குடியிருந்தவர்களுக்கு எங்களுடைய வீடுகளையும் நிலத்தையும் கொடுக்கத் தயாராகின்றது சிங்கள அரசு. 1983 முன்னர் தாங்கள் தமிழ் மக்களோடு ஒன்றாக வாழ்ந்தகவும்
Read Moreமெல்லிசையே என் இதயத்தின் மெல்லிசையே என் உறவுக்கு இன்னிசையே என் உயிர் தொடும் நல்லிசையே.. என் நீண்ட இரவுகளிலும் நெடுந்தூரப் பயணங்களிலும் பலசமயங்களில் என் துணையாக வந்திருந்த சுவர்ணலதா இன்று இல்லை என்னும் போது ஏதோ மனதினுள் கனக்கின்ற உணர்வு. என் செவிகளுக்குள் ஊடுருவி இதயம் வரை நுழைந்து என் உணர்வுகளை இனிமையாக கட்டிப் போட்ட மானசீகக் குரலுக்கு சொந்தக்காரி சுவர்ணலதா. போதும் போதும் என செவிகள் சொன்னாலும் இன்னும் வேண்டும் உன்குரலில் மயங்கிடும் இன்பம் என
Read Moreவரலாறு கற்றுத் தந்த பாடங்களில் இருந்து மனிதன் எதையாவது கற்றுக் கொள்கின்றானா என்றால் இல்லை என்றே பதில் கூறவேண்டும். எப்போதும் வரலாறு சுழன்று சுழன்ற மனித வாழ்வியலில் மீண்டு வந்துகொண்டே இருக்கும். அது ஒரு வட்டப் பாதை. ஆனால் அந்த வட்டப்பாதையில் இருந்த மனிதன் கற்றுக்கொள்வது என்பது ஒன்றுமே இல்லை. 18 ஆவது அரசியலமைப்பு திருத்தம்(18th Amendment) இலங்கையில் அமுல்படுத்தப்படுவதற்கான காலம் வெகுதூரத்தில் இல்லை. கொஞ்சம் நெஞ்சமாக இருக்கும் ஜனநாயகத்திற்கும் ஒட்டு மொத்தமாக சாவுமணி அடித்து பள்ளத்தாக்கில்
Read More