Category: கவிதை
அதே கணிதபாட பிரத்தியேக வகுப்பறையின் கரும்பலகையில் சில சமன்பாடுகள் திரிகோண கணிதத்தில் சமனிலிகளுக்கான அந்த சமன்பாடுகள் கரும்பலகையென்னும் பிரபஞ்ச வெளியில் முடிவற்று விரிந்து கொண்டேயிருந்தன.. சோவென அடித்துக் கொட்டும் மழையில் நனைந்த விட்டில் பூச்சிகள் பல குளிர்காய அந்த அறையில் மின் விளக்கை வட்டமடித்தபடி.. சுமந்து வந்த ஈரம் நீங்க விளக்கை முட்டி முட்டி மோதி தங்களை உலர்த்திக்கொண்டிருந்தன அந்த விட்டில்கள்… வகுப்பறையின் முதல் வாங்கின் ஓரத்தில் என்னவள் கடைசி வரிசை வாங்கின் ஓரத்தில் நான் சிக்கியிருந்தோம்
Read Moreவீண் கோபம் என்னோடு ஏன் அன்பே உனக்காக நான் வரையும் மடலிது என் ஈர விழிகளுக்குள் நீ நுழைந்து கலகம் செய்த நாட்கள் எத்தனை என் சுயத்தோடு கண்ணாம்மூச்சி விளையாடி இதயவாசலில் நீ பின்னலிட்ட தோறணங்கள் எத்தனை என் மொனத் தவம் கலைக்க கடைவிழி வழியே நீ நாண் ஏற்றிய பாணங்கள் எத்தனை இத்தனையும் என் இதயத்கூட்டின் அத்தனை அறைகளிலும் நித்திய சிம்மாசனம் இட்டிடத்தானே என்றோ தந்து விட்டேனே இதயராணி என்னும் உரிமையை என் மானசீகக் காதலியாகி
Read Moreநீ வரும் வேளைகளில் எல்லாம் என் வாசல்களில் பன்னீரைத் தூவுகின்றது மழை நீ இல்லாத வேளைகளில் எங்கே சென்றதுவோ! இப்போது தான் புரிந்தது நீயும் மழைத்துளியும் ஒன்றுதான் என்று தொட்டுக் கொள்ளும் போதெல்லாம் சிலிர்த்து உருகி என் கையிரண்டில் தவழ்ந்து போகையில்! மரணிக்கும் நேரத்திலும் சொர்க்கம் என்றால் என்ன என்பதை அனுபவிக்கின்றன என்கின்றேன் நான் உன் மார்போடு விழுந்து சில்லுகளாகச் சிதறும் மழைத்துளிகளினைப் பார்த்து ஆனால் அவை உனது மானசீகத் தோழிகளின் அணைப்பு என்கின்றாயே நீ நீ
Read Moreநாம் கை கோர்த்து நடக்கும் போதெல்லாம் மழை மேகங்களுக்குச் சந்தோசமோ இப்படி ஆர்ப்பரிக்கின்றனவே முழக்கங்களாய் வெட்டி வெட்டிக் கண்சிமிட்டுகின்றனவே மின்னலாய் சில்லென ஒடுங்குகின்றனவே மழைத்துளிகளாய் உன்னைத் தானே தொட்டுக் கொண்டேன் மழைத்துளிகளுக்கு ஏன் இந்த நாணம் உன்னிடமே கடன் வாங்கி இப்படிச் சிலிர்க்கின்றனவே போதுமடி இனியும் கடன் கொடுத்து நிரந்தரக் கடனாளியாக்காதே மழைத் துளிகளை! நல்லாயிருந்தா தமிழிஸ் இல் வாக்களிக்க இங்கே சொருகுங்கள்.
Read Moreகண்கள் எழுதும் காதற் கடிதங்கள் கண்ஜாடை மெல்லச் சிரிப்பாள் .. சட்டென்று கோவிப்பாள் .. உரிமையோடு மிரட்டுவாள் .. நயமாகப் பணிவாள் .. பாசத்தோடு அணைப்பாள் .. மிரளவைக்க நாணுவாள் – ஜாடையில் இத்தனையும் என் ராதையின் அந்த நளினம் பேசும் கண்களில் நான் தினம் தினம் படிக்கும் புதுக்கவிதைகள்.
Read Moreகண்கள் – அவை காதலின் தொடக்கப் புள்ளி காதலென்னும் காவியத்தின் பல்லவி வரிகள் கனவுகள் சஞ்சரிக்கும் நித்திய வானம்…. இவற்றை எல்லாம் விட – அவை உனை ரசிக்க இறைவன் எனக்கருளிய வரப்பிரசாதம் அன்றோ!
Read Moreநீ கழற்றி வைத்த சரத்தில் ஒட்டியிருந்த மல்லிப்பூ சொல்லும் உன் கூந்தலின் வாசத்தை… நீ என் கண் காண காத்திருக்கையில் மலரும் செம்பரு சொல்லும் உன் பெண்மையின் மென்னையை… நீ சிரிக்கையில் சிந்தும் சங்கதி சொல்லும் உன் குரலின் இனிமையை… நீ வாசல் வரும் போது பொன் அள்ளித்தூவும் மஞ்சள் மலரணி சொல்லும் உன் மேனியின் வண்ணத்தை… நீ கண்களில் இட்ட மை சொல்லும் உன் கண்கள் பேசும் காதல் மொழிகளை… நீ பணிவில் என்னிடம் காட்டும்
Read More