Category: சிறுகதை
ஒரு கையில் சின்ன மரப் பொச்சுக்களாலான கூட்டினைத் தாங்கிய படியும் மறு கையில் சொட்டச் சொட்ட இரத்தம் வழிந்த படியும் அவசரமாக வீட்டினை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தாள் வாசுகி. “ஒரு கெல்ப் பண்னேண்டா சுதா..” வீட்டுக்குள் தன் ஒரு வயதுக் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த சுதாகரை அழைந்தாள். என்ன வாசு எனத் திரும்பிப் பார்த்த சுதாகர் ஏங்கிப்போனான். “என்னடி இது.. வாசு..” அவள் கைகளில் சொட்டிக் கொண்டிருந்த இரத்தத் துளிகளைப் பார்த்து பதறிப் போய் அவள் கைகளைப்
Read Moreமேகத்தில் இருந்து கால் தவறி ஒரு மழைத் துளி விழுந்து விடுகின்றது. கால்தவறித்தான் விழுந்தாலும் அடுத்த சில கணங்களில் சுதாகரித்துக்கொண்டு மெல்ல கீழ் நோக்கி தலையைத் திருப்புகின்றது அந்த துளி. அம்மாடியோவ்.. என்ன ஒரு ஆழத்தில் விடுந்துவிட்டேன்.. என் கதை இத்தோடு முடிந்ததுதான். என எண்ணும் போது கீழ் இருந்து தன்னை யாரோ பலமாக இழுப்பதனை உணர்கின்றது அந்த மழைத்துளி. எத்தனை பலங்கொண்டும் எதிர்த்தும் முடியவில்லை. துளியின் வேகம் அடுத்த கணங்களுக்குள் பலமடங்காகத் தொடங்குகின்றது. கைப்பற்றி தப்பிக்கவும்
Read Moreஎன்ன சொல்லுகிறீர்கள் மந்திரியாரே ? ஆம் மகாராணி! நமது மன்னர் போரிலே வெற்றி பெற்று வேங்கிநாட்டு மன்னனை கொன்று படையினரை புறமுதுகு காட்டி ஓட விட்டு விட்டார். பரிவாரங்களுடன் மன்னர் அரண்மனைக்கு வந்துகொண்டிருக்கின்றார். என் மனம் இப்போதுதான் அமைதியுறுகின்றது மந்திரியாரே. மிக்க நன்றி! என் மனமுகந்த தகவலை விளம்பியதற்கு. வாருங்கள் சேடிப் பெண்களே மன்னனை அரண்மனை வாசலிலேயே வைத்து ஆரார்த்தி எடுத்து வரவேற்போம். என்று அந்தப்புரத்து சேடிப்பெண்கள் சதிதம் அரண்மனை வாசலுக்கு விரைந்தாள் சோழ அரசின் மகாராணி
Read More‘நேரம் போகுதம்மா.. கெதியா சாப்பாட்டத்தாம்மா…!’ ‘கொஞ்சம் பொறடி, இட்லியை கோப்பையில போட்டுக்கொண்டிருக்கிறேனல்ல…! ‘ ‘இண்டைக்கு முதல் நாளம்மா… நேரத்தோட போகணும்மா… சாப்பாட்ட ஊட்டிவிடம்மா…’ மஞ்சரியின் காலை நேர பரபரப்பு அவள் அம்மாவையும் பாதித்திருந்தது. கணிதத்தினைக் காதலிப்பவள் மஞ்சரி. எப்போதுமே எதையாவது சாதிக்கணும் என்கின்ற தீ அவள் மனதிற்குள் எரிந்து கொண்டே இருக்கும். எவரையும் அனிச்சையாய்த் திரும்பிப்பார்க்க வைக்கும் அழகு. புதுமுக மாணவியாக மொறட்டுவப் பொறியியற் பீடம் நுழையும் நாள் இன்று. ‘ஆறுதலாச் சாப்பிடடி.. இன்னும் நேரம் இருக்கு…’
Read Moreஎங்களோடு வரப்போகின்றாயா அல்லது உன் தங்கச்சியைக் கூட்டிக்கொண்டு போகட்டுமா.. சில அதிகாரக் குரல்கள் நிதர்சனை நிலைகுலைய வைத்தன. ஐயோ தம்பி என் புள்ளைய விட்டுடுங்க… என்ர தலைப்புள்ள அவன்.. உங்களுக்கு புண்ணியமாப் போகுமையா.. அவனை விட்டுடுங்க… அவன் பச்சப்பாலகன் தம்பி, இப்பத்தான் பதினாறு தொடங்கினது. அவனுக்கு ஒண்ணும் தெரியாது..விட்டுடுங்க எம் புள்ளையை… என்று அந்த அதிகாரக் குரல்களுக்குச் சொந்தக்காரர்களின் கால்களைப் பிடிக்காத குறையாகக் கெஞ்சினாள் அவன் தாய் சீதாலக்மி.. இங்க பாருங்க அம்மா, குடும்பத்திற்கு ஒருத்தர் கட்டாயம்
Read Moreமாசிப் பனியின் இதமான புதுக்காற்று முகத்தில் சில்லென தடவிச்செல்ல மெல்லக் கண் திறந்து ஜன்னல் திரையை விலக்கி எட்டிப் பார்த்தது நிலவு. கதிரவனின் பொற் கதிர்கள் அந்த நிலவின் பொன்முகத்தில் பட்டு பரவியதோ என்னமோ திடீர் என்று பொன் ஒளி அந்த அறையெங்கும் பரவிப் பிரகாசித்தது. எப்பொழுதும் பெளவியமாக இருக்கும் அந்த நிலவின் முகத்தில் இன்று ஏனோ ஓர் சோகம் மெல்ல இழையோடியிருந்தது. பனிக்காற்றின் இதத்தை மெல்ல உள்மூச்சின் முலம் வாங்கி தன் இருதய நாளங்களுக்கு அனுப்பிவிட்டு
Read More