இந்த நாகரீகமடைந்த உலகில் மனிதப் பேரவலம் மிக மோசமாக அதுவும் ஒரு அரசாங்கத்தினால் அரங்கேற்றப்படுவது இங்கேதான். அதுவும் தன்னை ஒரு சனநாயக அரசு என நிமிசத்துக்கு நிமிசத்துக்கு கூறிக்கொள்ளும் அரசு தமிழ் மக்களுக்கு நாள்தோறும் அளித்துவரும் சனநாயகப் பரிசுகள் ஏராளம் ஏராளம். அதுவும் வன்னி மக்களுக்கு என்றால் அரசாங்கத்தின் அதிவிசேடமான கவனிப்புக்கள் பல. நாள்தோறும் தவறாது விமானக் குண்டுகள், ஆட்லரி செல்கள், பல்குழல் பீரங்கிகள் எனப் பல வகையான மரண தூதுவர்களை அனுப்பத் தவறுவதில்லை அரசு. இதுவும்