Category: இலங்கை
பின்ன என்ன! மிகக் குறுகிய காலத்தில் பலரும் வியக்கும் வண்ணம் எண்பதிற்கும் மேற்பட்ட இலங்கைப் பதிவர்களை ஒன்றிணைத்து, அதனை விடவும் நேரலையில் நுாறிற்கும் மேற்பட்ட பதிவர்களை கவர்ந்திழுத்து ஆர்வத்துடன் தமது கருத்துக்களை எம்மோடு பகிர்ந்து கொள்ள வைத்த இந்த இலங்கைப் பதிவர் சந்திப்பு வரலாற்றின் பக்கத்தில் பதியப்படவேண்டிய ஒன்றுதானே. ஏற்பாட்டுக்குழுவின் நேர்த்தியான திட்டமிடலாலும் கால நேரம் பாராத கடின முயற்சியினாலும் மட்டுமல்ல இலங்கையில் உள்ள அனைத்துப் பதிவர்களினதும் கைகோர்த்த பேராதரவினாலுமே இந்த வரலாற்றுப் பதிவு சாத்தியமாகியது. வெள்ளவத்தை
Read Moreநாளை ஞாயிற்றுக் கிழமை(23-08-2009) இலங்கை வலைப்பதிவர்களின் முதலாவது சந்திப்பு கொழும்பில் நடைபெற உள்ளது என்பதை அனைவரும் அறிந்ததே. இதற்கு இது வரை 80 இற்கும் மேற்பட்டவர்கள் வரவிரும்புவதாக தமது விருப்பங்களையும் விபரங்களையும் ஏற்பாட்டுக்குழுவிற்கு வழங்கியுள்ளார்கள். இந்த நிகழ்ச்சி குறித்து பலரம் தமது மனதார்ந்த வாழ்த்துக்களை இலங்கையில் உள்ள எம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார்கள். வெளிநாடுகளில் உள்ள பல பதிவர்கள் இந்த பதிவர் சந்திப்புப் பற்றி தமது விருப்பத்தையும் ஏற்பாட்டுக் குழுவிற்குத் தெரிவித்திருக்கின்றார்கள். இங்கு நடைபெற இருக்கும் நிகழ்ச்சிகளை நேரடியாக
Read Moreஇதுவரை காலமும் பலமுறை முயன்றும் இயலாது போன – சில சமயங்களில் கைக் கெட்டியும் வாய்க்கெட்டாது போன பதிவர் சந்திப்பு இலங்கையில் நடைபெற உள்ளதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கின்றேன். காலம் : 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை. நேரம் : காலை 9 மணி. இடம் : கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபம், இல.7, 57வது ஒழுங்கை (ருத்ரா மாவத்தையின் பின்புறம்) கொழும்பு 06. நோக்கங்கள் : இலங்கைத் தமிழ் வலைப்பதிவாளர்களிடம் அறிமுகத்தையும் தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொள்ளுதல். புதிய பதிவர்களை
Read MoreI don’t like to say any words about these pictures. You have to read the pictures and feel the truth behind them. What do u mean by humanitarian rescue mission? We all are congratulating you, but its absolutely a rigged one! you have colonised them again.. Now happy with the control in there wit and
Read Moreகவிதாயினி தாமரை. பெயரைப் போலவே அழகான தாமரை மலர் போல சிரித்த முகம். எப்போதும் வாடாத மலர் போல புன்சிர்ப்புப் பூத்திருக்கும் சிவந்த முகம். அவரின் கவிதைகள் அதனை விட அழகு. கவிதாயினி என்றவுடனேயே மனதிற்கு வருவது “கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்” என்ற சுப்ரமணியபுரப் பாடல். அழகான தமிழ் வரிகளினால் கேட்பவர்களையெல்லாம் கட்டி இழுத்தவர் தாமரை. கவிதாயினி தமிழ் திரையுலகின் முதல் பெண் பாடலாசிரியர். திரையுலகப் பாடலாசிரியராக ஆக வேண்டும் என்ற ஆசையில் பொறியியலாளராகப்
Read Moreஎங்களோடு வரப்போகின்றாயா அல்லது உன் தங்கச்சியைக் கூட்டிக்கொண்டு போகட்டுமா.. சில அதிகாரக் குரல்கள் நிதர்சனை நிலைகுலைய வைத்தன. ஐயோ தம்பி என் புள்ளைய விட்டுடுங்க… என்ர தலைப்புள்ள அவன்.. உங்களுக்கு புண்ணியமாப் போகுமையா.. அவனை விட்டுடுங்க… அவன் பச்சப்பாலகன் தம்பி, இப்பத்தான் பதினாறு தொடங்கினது. அவனுக்கு ஒண்ணும் தெரியாது..விட்டுடுங்க எம் புள்ளையை… என்று அந்த அதிகாரக் குரல்களுக்குச் சொந்தக்காரர்களின் கால்களைப் பிடிக்காத குறையாகக் கெஞ்சினாள் அவன் தாய் சீதாலக்மி.. இங்க பாருங்க அம்மா, குடும்பத்திற்கு ஒருத்தர் கட்டாயம்
Read Moreஇன்று வேலை முடித்து வீடு வந்து சற்று ஆறுதலாகப் பத்திரிகையைப் பார்ப்போம் என்று பார்த்தால் மிகவும் அநாகரிகமான கீழ்த்தரமான சிங்கள இனவாதத்தின் உச்சக்கட்ட வெறியாட்டம் கண்ணிற்பட்டது. மிகவும் ஒரு மனித நாகரீகமற்ற காடைத்தனமான நடவடிக்கையினை இறக்குவானை முத்துமாரி அம்மன் கோவில் உற்சப ஏற்பாட்டுகளில் காட்டியிருந்தது, வெளியுலகத்திற்கு சமவாதம் பேசும் சிங்களம். இறக்குவானை முத்துமாரி அம்மன் கோவில் திருவிழா இம்முறை இனவாத சிங்களக் காடைக்குழுக்களின் மிரட்டலையடுத்து பிற்போடப்பட்டுள்ளது. இதுவே அந்தச் செய்தி. இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள இறக்குவானை முத்துமாரி
Read More20 சதுர கிலோமீற்றர் பரப்பளவுள்ள மிகக் குறுகிய நிலப்பரப்பிற்குள் இரண்டரை இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் எந்த விதமான அடிப்படை வசதிகளும் இன்றி நாள்தோறும் அல்லற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எந்த நேரத்திலும் மரணம் என்னும் அரக்கன் அவர்களை மிகக் கொடுமையாக விழுங்கி விடக்கூடும். மரணம் என்பது தவிர்க்கக் கூடியது அல்ல. ஆனால் அம்மரணம் எவ்வாறு வருகின்றது என்பதுதான் அவர்களுக்கு மிகக் கொடுமையான விடையம். கண் முன்னே பெற்ற தாய் தந்தையர், பெற்ற பிள்ளைகள் உடல் சிதறி குற்றுயிராய்க் கிடக்கும் போது
Read More“பாராளக் கன்னன் இகல் பார்த்தனை முதலிற் கொன்று, அணங்கின் காரார் குழல் களைந்து காலில் தளை பூட்டி, நேராக நின்னையும் யான் பிடித்துக் கட்டுவேனானால் வாராமல் தடுக்கலாம் மாபாரதம்.. “ இந்த வரிகள் மகாபாரதத்தில் மிகவும் பிரபல்யமானவை. மகாபாரத யுத்தம் மூழ்வதற்கு முன்னர் கார்மேக கண்ணன் ஜோதிடக் கலையில் சிறந்து விளங்கிய சகாதேவனை நோக்கி வரப்போகின்ற பாரத யுத்தம் நிகழாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் எனக் கேட்ட போது சகாதேவன் கூறிய வரிகளே அவை. கர்ணன்
Read Moreநீண்ட நாட்களின் பின் எனது வலைப் பூக்களின் மீண்டும் கவனம் செலுத்த நேர்ந்தது இன்று தமிழ் நாட்டில் நடத்த சம்பவம். இறுதியாண்டு பரீட்சைகள் மிக வேகமாக நெருங்கிக் கொண்டிருப்பதனாலும் இறுதியாண்டு செயற்திட்டத்தின் இறுதித் திகதி அதைவிட வேகமாக முன்னால் வந்து நின்று பயமுறுத்துவதனாலும் நீண்ட காலமாக வலைப் பூக்களில் எதுவும் உருப்படியாக எழுதுவதில்லை. நாள்தோறும் வருகின்ற வன்னிச் செய்திகளின் கனதி இங்கே மனங்களில் உறுத்தலைக் கூட்டிக் கொண்டிருக்கின்றது. அதைவிடவும் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் இருக்கின்றதே
Read More