logo

Category: வன்னி

அன்று வேங்கியில் இன்று ….

September 4, 2010

என்ன சொல்லுகிறீர்கள் மந்திரியாரே ? ஆம் மகாராணி! நமது மன்னர் போரிலே வெற்றி பெற்று வேங்கிநாட்டு மன்னனை கொன்று படையினரை புறமுதுகு காட்டி ஓட விட்டு விட்டார். பரிவாரங்களுடன் மன்னர் அரண்மனைக்கு வந்துகொண்டிருக்கின்றார். என் மனம் இப்போதுதான் அமைதியுறுகின்றது மந்திரியாரே. மிக்க நன்றி! என் மனமுகந்த தகவலை விளம்பியதற்கு. வாருங்கள் சேடிப் பெண்களே மன்னனை அரண்மனை வாசலிலேயே வைத்து ஆரார்த்தி எடுத்து வரவேற்போம். என்று அந்தப்புரத்து சேடிப்பெண்கள் சதிதம் அரண்மனை வாசலுக்கு விரைந்தாள் சோழ அரசின் மகாராணி

Read More

திருப்பிக் கொடு

January 24, 2010

மூன்று இலட்சம் மக்களின் கண்ணீரும், இருபதாயிரம் மக்களின் இரத்தமும், அவர்களின் மண்ணிலேயே சிந்தவைத்தது- ஒருவரின் உத்தரவினால் எனில், அவரின் அதிகாரத்தினை உடைத்து வெறும் ஜடமாக உட்காரவைப்பதே அவருக்கு நாம் திருப்பி அடிக்கும் மரண அடி. ஏழையின் கண்ணீர் கூரிய வாளை ஒக்கும் என்ற கூத்தவைப்புலவனின் வாக்கைப் பொய்க்க விடலாமா??? எய்தவன் இருக்க அம்பினை நோவானேன்.. எய்தவனை அவன் எய்த அம்பினால் திருப்பியடிப்பவனே சாணக்கியன். சத்திரியனாய் வாழ்ந்தது போதும் சாணக்கியனாகுவோம்!!!! இந்தப் பூமிப்பந்தில் தமது வாழ்வினை நிலைநிறுத்துவதற்காக உயிரினைக்

Read More

Humanitarian Rescue mission

August 9, 2009

I don’t like to say any words about these pictures. You have to read the pictures and feel the truth behind them. What do u mean by humanitarian rescue mission? We all are congratulating you, but its absolutely a rigged one! you have colonised them again.. Now happy with the control in there wit and

Read More

ஒரு புரட்சிக் கவிஞரின் நெருப்பு வரிகள்

June 15, 2009

கவிதாயினி தாமரை. பெயரைப் போலவே அழகான தாமரை மலர் போல சிரித்த முகம். எப்போதும் வாடாத மலர் போல புன்சிர்ப்புப் பூத்திருக்கும் சிவந்த முகம். அவரின் கவிதைகள் அதனை விட அழகு. கவிதாயினி என்றவுடனேயே மனதிற்கு வருவது “கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்” என்ற சுப்ரமணியபுரப் பாடல். அழகான தமிழ் வரிகளினால் கேட்பவர்களையெல்லாம் கட்டி இழுத்தவர் தாமரை. கவிதாயினி தமிழ் திரையுலகின் முதல் பெண் பாடலாசிரியர். திரையுலகப் பாடலாசிரியராக ஆக வேண்டும் என்ற ஆசையில் பொறியியலாளராகப்

Read More

மெளன சாட்சிகள்

June 9, 2009

எங்களோடு வரப்போகின்றாயா அல்லது உன் தங்கச்சியைக் கூட்டிக்கொண்டு போகட்டுமா.. சில அதிகாரக் குரல்கள் நிதர்சனை நிலைகுலைய வைத்தன. ஐயோ தம்பி என் புள்ளைய விட்டுடுங்க… என்ர தலைப்புள்ள அவன்.. உங்களுக்கு புண்ணியமாப் போகுமையா.. அவனை விட்டுடுங்க… அவன் பச்சப்பாலகன் தம்பி, இப்பத்தான் பதினாறு தொடங்கினது. அவனுக்கு ஒண்ணும் தெரியாது..விட்டுடுங்க எம் புள்ளையை… என்று அந்த அதிகாரக் குரல்களுக்குச் சொந்தக்காரர்களின் கால்களைப் பிடிக்காத குறையாகக் கெஞ்சினாள் அவன் தாய் சீதாலக்மி.. இங்க பாருங்க அம்மா, குடும்பத்திற்கு ஒருத்தர் கட்டாயம்

Read More

தேர்தலில் என்ன செய்யப் போகின்றார்கள் தமிழக மக்கள்

April 10, 2009

20 சதுர கிலோமீற்றர் பரப்பளவுள்ள மிகக் குறுகிய நிலப்பரப்பிற்குள் இரண்டரை இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் எந்த விதமான அடிப்படை வசதிகளும் இன்றி நாள்தோறும் அல்லற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எந்த நேரத்திலும் மரணம் என்னும் அரக்கன் அவர்களை மிகக் கொடுமையாக விழுங்கி விடக்கூடும். மரணம் என்பது தவிர்க்கக் கூடியது அல்ல. ஆனால் அம்மரணம் எவ்வாறு வருகின்றது என்பதுதான் அவர்களுக்கு மிகக் கொடுமையான விடையம். கண் முன்னே பெற்ற தாய் தந்தையர், பெற்ற பிள்ளைகள் உடல் சிதறி குற்றுயிராய்க் கிடக்கும் போது

Read More

மாபாரதத்தை நிறுத்த வழி

February 24, 2009

        “பாராளக் கன்னன் இகல் பார்த்தனை முதலிற் கொன்று,         அணங்கின் காரார் குழல் களைந்து காலில் தளை பூட்டி,         நேராக நின்னையும் யான் பிடித்துக் கட்டுவேனானால்         வாராமல் தடுக்கலாம் மாபாரதம்.. “ இந்த வரிகள் மகாபாரதத்தில் மிகவும் பிரபல்யமானவை. மகாபாரத யுத்தம் மூழ்வதற்கு முன்னர் கார்மேக கண்ணன் ஜோதிடக் கலையில் சிறந்து விளங்கிய சகாதேவனை நோக்கி வரப்போகின்ற பாரத யுத்தம் நிகழாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் எனக் கேட்ட போது சகாதேவன் கூறிய வரிகளே அவை. கர்ணன்

Read More

கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்

January 29, 2009

நீண்ட நாட்களின் பின் எனது வலைப் பூக்களின் மீண்டும் கவனம் செலுத்த நேர்ந்தது இன்று தமிழ் நாட்டில் நடத்த சம்பவம். இறுதியாண்டு பரீட்சைகள் மிக வேகமாக நெருங்கிக் கொண்டிருப்பதனாலும் இறுதியாண்டு செயற்திட்டத்தின் இறுதித் திகதி அதைவிட வேகமாக முன்னால் வந்து நின்று பயமுறுத்துவதனாலும் நீண்ட காலமாக வலைப் பூக்களில் எதுவும் உருப்படியாக எழுதுவதில்லை. நாள்தோறும் வருகின்ற வன்னிச் செய்திகளின் கனதி இங்கே மனங்களில் உறுத்தலைக் கூட்டிக் கொண்டிருக்கின்றது. அதைவிடவும் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் இருக்கின்றதே

Read More

விடைதேடும் வாழ்க்கை

November 27, 2008

இந்த நாகரீகமடைந்த உலகில் மனிதப் பேரவலம் மிக மோசமாக அதுவும் ஒரு அரசாங்கத்தினால் அரங்கேற்றப்படுவது இங்கேதான். அதுவும் தன்னை ஒரு சனநாயக அரசு என நிமிசத்துக்கு நிமிசத்துக்கு கூறிக்கொள்ளும் அரசு தமிழ் மக்களுக்கு நாள்தோறும் அளித்துவரும் சனநாயகப் பரிசுகள் ஏராளம் ஏராளம். அதுவும் வன்னி மக்களுக்கு என்றால் அரசாங்கத்தின் அதிவிசேடமான கவனிப்புக்கள் பல. நாள்தோறும் தவறாது விமானக் குண்டுகள், ஆட்லரி செல்கள், பல்குழல் பீரங்கிகள் எனப் பல வகையான மரண தூதுவர்களை அனுப்பத் தவறுவதில்லை அரசு. இதுவும்

Read More

Recent Posts

  • அழகிய விழியாள் தரிசனம் தேடி
  • நாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம்
  • “வாய் பேசிடும் புல்லாங்குழல்” – பாடகி சுனந்தா
  • நான்தான்… ஆறாம் திணை!
  • மரபணுக்களை எம்மால் மாற்றியமைக்க முடிந்தால்…?. இது ஏழம் அறிவு
  • மாயாவியுடன் சில காலம்
  • ஊஞ்சல் iOS அலைபேசி இணைய உலாவிகளில்
  • ஒரு குட்டி ஏஞ்சல் – தெய்வத் திருமகள்
  • மனிதாபிமானம் பலியாகும் போது…

Copyright ஊஞ்சல் 2023 | Powered by WordPress