மனிதனை ஏனைய விலங்களில் இருந்து வேறுபடுத்தி அவனுக்கேன்று தனித்துவத்தைக் கொடுப்பது அவனின் பேச்சாற்றல். இந்தப் பேச்சுத்திறமை என்பது இன்று நேற்று வந்த ஆற்றல் அல்ல. பல நீண்ட பரிணாம வளர்ச்சிப் பின்னணி இந்த பேச்சாற்றலோடு தொடர்புடைய மொழிப் பிரயோகத்திற்கு உண்டு. இவ்வாறு பல வளர்ச்சிகளைக் கடந்து இன்று தனக்கென்ற தான் பயன்படுத்தப்படும் பிரயோக நிலைகளில் தனது தனித்துவத்தைப் பேணுகின்றன ஒவ்வோர் மொழியும். ஒவ்வோர் சமூகத்திற்குமான கலாச்சார விழுமியக் கோட்பாடுகளின் கட்டமைப்பிலான ஒழுங்கமைப்புகள் மொழி என்னும் அடித்தின் மீதே