இணையம் என்னும் தோட்டத்தில் பூத்திருக்கும் உங்கள் வலைப்பூக்களை மேலும் அழகுபடுத்திப் பார்க்க வேண்டுமா.. ? அவ்வாறான ஒரு ஆர்வத்தில் எனது வலைப்பூவினை மேலும் அழகுற ஒழுங்கமைக்க எண்ணி சில வித்தியாசமான ஒழுங்கமைப்பு முறைகளை முயற்சித்துப் பார்த்தேன். அவற்றில் ஒன்றுதான் இந்த Popup image loading method (மன்னிக்கவும் இதற்குச் சரியான தமிழ்ப்பதம் தெரியவில்லை.) உங்கள் வலைப்பூக்களில் படங்களை இணைப்புக் கொடுக்கும் போது அவற்றின் மேலே வாசகர்கள் சொருகினால் அந்தப் படம் அதே பக்கத்தில் காணக்கூடியதாக இருக்கும். அதாவது
நாம் எவ்வளவு துாரத்திற்கு முன்னேறிச் சென்றாலும் கடந்து வந்த பாதையை சற்று திரும்பிப்பார்த்து இரசிப்பது ஒரு சந்தோசம்தான். இன்று நாம் இணையத்தில் எவ்வளவோ முன்னேற்றகரமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றோம். இணைய வலைத்தளங்களில் தொடங்கி இன்று இரண்டாவது வாழ்க்கை என்னும் Second Life வரை பல அம்சங்களை பயன்படுத்துகின்றோம். ஆனால் இவற்றிற்கேல்லாம் முதல் நாடியாக இருக்கின்ற WWW என்கின்ற World Wide Web இல் முதன் முதலாக ( 30 சித்திரை 1993 ) வெளியிடப்பட்ட இணையப் பக்கத்தை எப்போதாவது
இந்த உலகம் இன்று முன்னேற்றம் என்ற பாதையில் அதியுச்ச வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. எண்ணற்ற கண்டுபிடிப்புக்களும் ஆராச்சிகளும் மனித வாழ்வியலை மிகவும் மேம்பட்ட நிலைக்கு இட்டுச் செல்கின்றன. மகத்தான பல விஞ்ஞானிகளின் உறக்கமற்ற ஆராச்சிகளின் அறுவடையே இத்தகைய கண்டுபிடிப்புகள். அவையென்னவோ மனிதத்தின் முன்னேற்றத்தினை நோக்கமாகக் கொண்டிருப்பினும் மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு மட்டும் தான் உபயோகிக்கப்படுகின்றதா எனில். நிட்சயமாக இல்லைதான். அணுவைப் பிளக்கலாம் என எண்ணிய மனிதன் விஞ்ஞானத்தின் துணையுடன் நிரூபித்த சாட்சிகள் இன்னும் ஹிரோசிமா நாகசாகியில் வாழ்கின்றார்கள்.