Category: அரசியல்
20 சதுர கிலோமீற்றர் பரப்பளவுள்ள மிகக் குறுகிய நிலப்பரப்பிற்குள் இரண்டரை இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் எந்த விதமான அடிப்படை வசதிகளும் இன்றி நாள்தோறும் அல்லற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எந்த நேரத்திலும் மரணம் என்னும் அரக்கன் அவர்களை மிகக் கொடுமையாக விழுங்கி விடக்கூடும். மரணம் என்பது தவிர்க்கக் கூடியது அல்ல. ஆனால் அம்மரணம் எவ்வாறு வருகின்றது என்பதுதான் அவர்களுக்கு மிகக் கொடுமையான விடையம். கண் முன்னே பெற்ற தாய் தந்தையர், பெற்ற பிள்ளைகள் உடல் சிதறி குற்றுயிராய்க் கிடக்கும் போது
Read More“பாராளக் கன்னன் இகல் பார்த்தனை முதலிற் கொன்று, அணங்கின் காரார் குழல் களைந்து காலில் தளை பூட்டி, நேராக நின்னையும் யான் பிடித்துக் கட்டுவேனானால் வாராமல் தடுக்கலாம் மாபாரதம்.. “ இந்த வரிகள் மகாபாரதத்தில் மிகவும் பிரபல்யமானவை. மகாபாரத யுத்தம் மூழ்வதற்கு முன்னர் கார்மேக கண்ணன் ஜோதிடக் கலையில் சிறந்து விளங்கிய சகாதேவனை நோக்கி வரப்போகின்ற பாரத யுத்தம் நிகழாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் எனக் கேட்ட போது சகாதேவன் கூறிய வரிகளே அவை. கர்ணன்
Read Moreநீண்ட நாட்களின் பின் எனது வலைப் பூக்களின் மீண்டும் கவனம் செலுத்த நேர்ந்தது இன்று தமிழ் நாட்டில் நடத்த சம்பவம். இறுதியாண்டு பரீட்சைகள் மிக வேகமாக நெருங்கிக் கொண்டிருப்பதனாலும் இறுதியாண்டு செயற்திட்டத்தின் இறுதித் திகதி அதைவிட வேகமாக முன்னால் வந்து நின்று பயமுறுத்துவதனாலும் நீண்ட காலமாக வலைப் பூக்களில் எதுவும் உருப்படியாக எழுதுவதில்லை. நாள்தோறும் வருகின்ற வன்னிச் செய்திகளின் கனதி இங்கே மனங்களில் உறுத்தலைக் கூட்டிக் கொண்டிருக்கின்றது. அதைவிடவும் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் இருக்கின்றதே
Read Moreவீரம் விளைந்து விளையாடும் எம்மண்ணில் இருந்து ஓர் குரல் இது.. அன்னைத் திருநாடே.. அழகொளிரும் எம் ஊரே.. மண்ணைக் குழைத்து எடுத்து பாட்டிசைத்த தாய் வீடே.. தாயாள் முலை தந்தாள் தமிழாள் மொழி தந்தாள் பூவாய் மலர உந்தன் பொன்மடியில் இடம் தந்தாய் கண்திறந்த நாள் முதலாய் கையெடுத்து தூக்கி எம்மை உன் மடியில் தானே உறங்குவதற்குப் பாய் விரித்தாய்.. வன்னியிலிருந்து ஓர் குரல் …
Read Moreஇந்த நாகரீகமடைந்த உலகில் மனிதப் பேரவலம் மிக மோசமாக அதுவும் ஒரு அரசாங்கத்தினால் அரங்கேற்றப்படுவது இங்கேதான். அதுவும் தன்னை ஒரு சனநாயக அரசு என நிமிசத்துக்கு நிமிசத்துக்கு கூறிக்கொள்ளும் அரசு தமிழ் மக்களுக்கு நாள்தோறும் அளித்துவரும் சனநாயகப் பரிசுகள் ஏராளம் ஏராளம். அதுவும் வன்னி மக்களுக்கு என்றால் அரசாங்கத்தின் அதிவிசேடமான கவனிப்புக்கள் பல. நாள்தோறும் தவறாது விமானக் குண்டுகள், ஆட்லரி செல்கள், பல்குழல் பீரங்கிகள் எனப் பல வகையான மரண தூதுவர்களை அனுப்பத் தவறுவதில்லை அரசு. இதுவும்
Read Moreசேர்பியாவின் ஆட்சி அதிகாரத்திற்கு இதுவரைகாலமும் உட்பட்டிருந்த கொசோவா கடந்த ஞாயிற்றுக் கிழமை தனி நாட்டுப் பிரகடனத்தை மேற்கொண்டு சேர்பியாவிலிருந்து பிரிந்து சென்றுள்ளது. இந்த தனி நாட்டுக்கான பிரகடனமானது இலங்கையில் பல எதிர்ப்பலைகளை தோற்றிவித்துள்ளது. இலங்கையின் இத்தகைய எதிர்ப்புக்கு காரணத்தைப் பார்ப்பதற்கு முன் இந்த கொசோவாவின் வரலாற்றைக் கொஞ்சம் அலசிப் பார்ப்பது நல்லது. யுக்கொஸ்லாவியா ( Yugoslavia ) யுக்கொஸ்லாவியா ( Yugoslavia ) என்ற குடியரசு நாடானது 1945 ஆம் ஆண்டு ஆறு தனித் தனிக் குடியரசுகளாகப்
Read More