Author: சுபானு
இந்த நாகரீகமடைந்த உலகில் மனிதப் பேரவலம் மிக மோசமாக அதுவும் ஒரு அரசாங்கத்தினால் அரங்கேற்றப்படுவது இங்கேதான். அதுவும் தன்னை ஒரு சனநாயக அரசு என நிமிசத்துக்கு நிமிசத்துக்கு கூறிக்கொள்ளும் அரசு தமிழ் மக்களுக்கு நாள்தோறும் அளித்துவரும் சனநாயகப் பரிசுகள் ஏராளம் ஏராளம். அதுவும் வன்னி மக்களுக்கு என்றால் அரசாங்கத்தின் அதிவிசேடமான கவனிப்புக்கள் பல. நாள்தோறும் தவறாது விமானக் குண்டுகள், ஆட்லரி செல்கள், பல்குழல் பீரங்கிகள் எனப் பல வகையான மரண தூதுவர்களை அனுப்பத் தவறுவதில்லை அரசு. இதுவும்
Read Moreசிறுவர்கள் செய்கின்ற சின்ன சின்னக் குறும்புகள் சிரிப்பை தருவது உண்மைதானே.. சற்று இங்கே பாருங்களேன் இவரின் குறும்பை…
Read Moreசில விடையங்கள் எப்போதும் அழகாக, மனதிற்கு இதமாக அமைந்து விடுகின்றன. தீபாவளிக்கு புது உடுப்பு உடுத்தி, கோவிலுக்கு சென்றுவிட்டு பின் உறவினர் வீடுகளுக்கும் சென்று அவர்களுடன் மகிழ்ச்சியாக சிறிது வேலைப்பழு மற்றும் புறெஜக்ட் வேலைகளை மறந்து உரையாடுவது ஒருவித சந்தோசம்தான்… மனிதன் இத்தகைய கொண்டாட்டங்களைக் கண்டுபிடித்ததே இதற்காகத்தானெ.. மனதிற்குப் பிடித்தவர்களை வாழ்த்துவதும் அவர்களிடம் இருந்து வாழ்த்துக்களைப் பெறுவதும் மனதில் இன்பப் பெருக்கை ஊற்றெடுக்கச் செய்யும் அம்சங்கள். இன்று காலை கண்விழித்ததே எனது கைத்தொலைபேயின் சிணுங்கலைக் கேட்டுத்தான். தித்திக்கும்
Read Moreநாம் எவ்வளவு துாரத்திற்கு முன்னேறிச் சென்றாலும் கடந்து வந்த பாதையை சற்று திரும்பிப்பார்த்து இரசிப்பது ஒரு சந்தோசம்தான். இன்று நாம் இணையத்தில் எவ்வளவோ முன்னேற்றகரமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றோம். இணைய வலைத்தளங்களில் தொடங்கி இன்று இரண்டாவது வாழ்க்கை என்னும் Second Life வரை பல அம்சங்களை பயன்படுத்துகின்றோம். ஆனால் இவற்றிற்கேல்லாம் முதல் நாடியாக இருக்கின்ற WWW என்கின்ற World Wide Web இல் முதன் முதலாக ( 30 சித்திரை 1993 ) வெளியிடப்பட்ட இணையப் பக்கத்தை எப்போதாவது
Read Moreஇந்த உலகம் இன்று முன்னேற்றம் என்ற பாதையில் அதியுச்ச வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. எண்ணற்ற கண்டுபிடிப்புக்களும் ஆராச்சிகளும் மனித வாழ்வியலை மிகவும் மேம்பட்ட நிலைக்கு இட்டுச் செல்கின்றன. மகத்தான பல விஞ்ஞானிகளின் உறக்கமற்ற ஆராச்சிகளின் அறுவடையே இத்தகைய கண்டுபிடிப்புகள். அவையென்னவோ மனிதத்தின் முன்னேற்றத்தினை நோக்கமாகக் கொண்டிருப்பினும் மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு மட்டும் தான் உபயோகிக்கப்படுகின்றதா எனில். நிட்சயமாக இல்லைதான். அணுவைப் பிளக்கலாம் என எண்ணிய மனிதன் விஞ்ஞானத்தின் துணையுடன் நிரூபித்த சாட்சிகள் இன்னும் ஹிரோசிமா நாகசாகியில் வாழ்கின்றார்கள்.
Read MorePodCast என பல ஆங்கில இணையத் தளங்களில் பிரபல்யம் பெற்று விளங்கும் ஒலித் தொகுப்புக்களில் பல தரப்பட்ட விடையதானங்களை அலசியிருக்கின்றார்கள். அனேகமாக அவை ஒன்றிற்கு மேற்பட்ட நபர்களின் மிக நேர்த்தியான திட்டமிடலுன் தொழில்நுட்பம் சார்ந்த ஒருங்கிணைந்த ஒரு மணி நேரத்திற்கும் குறையாத உரையாடலாக அமைவதுண்டு. ஆனால் தமிழில் இவ்வாறான முயற்சிகள் மிக அரிதாகவே மேற்கொள்ளப் படுகின்றன. ஆனால் நிமல் மற்றும் ரமணன் இணைந்து வலைப் பதிவுலகில் புதிய முயற்சி ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்கள். நேர்த்தியான திட்டமிடலுடன் ஒலியோடை என்னும்
Read Moreமழைக்கால மேகம் திரள்கின்ற நேரம் மலைச்சாரலே தாலாட்ட நீராட்ட.. மலர்த்தோட்டம் எதிர் பார்க்கும் இளவேனிற் காலம் பாவையும் ஒரு பூவினம்.. அதை நான் சொல்லவோ…. என்ற அந்தப் பாடல்தான் சிவனொலிபாத மலை பற்றி நினைக்கும் போது என் மனதில் நிழலாடுகின்றது. மார்கழி மாதப் பின்னிரவு நேரத்தில் மலைப்பாதையின் ஓரங்களில் பளிச்சிடும் வீதி விளக்குகள் எம்மை வழிகாட்டி அழைத்துச் சென்றன. வானத்திலிருந்து பூமிக்கு இறங்கும் மின்னல்க் கொடியினைப் போன்று படர்ந்து நீண்டிருந்தது, அந்த நள்ளிரவில் மலைப்பாதை விளக்கு வெளிச்சம்.
Read Moreசிவனொளிபாத மலை (Sympole of Sri Lanka). இலங்கையின் இரண்டாவது பெரிய உயரமான மலை, காண்பவர் கண்களைக் கவரும் எழில்மிகு வண்ணச்சோலைகளும் வன விலங்குகளும் நிறைந்து காணப்படும் ஓர் இயற்கை வனப்பிரதேசம். எப்பொழுதும் சில்லென்று வீசும் பனிக்காற்றும், மலைமுகட்டை வருடிச் செல்லும் முகிற் கூட்டமும் இயற்கை அன்னையின் கொடையளில் இதுவும் ஒன்று. பருவமற்கையவள் தன் நீண்ட கூந்தலை காற்றிலாட விரித்து விட்டாளோ என எண்ணத் தோற்றத்தை உருவாக்கும் பனிக்காற்றிற்கு சிலுசிலுத்தாடும் காட்டுக்கொடிகளும் அவள் கொண்டையிலே இத்தனை hairpinகளா
Read Moreநாவல்கள் வாசிப்பதிலே அவ்வளவு ஆர்வமில்லாத நான் அவரது கணேஷ் வஸந்த் நாவலைப் படித்ததில் இருந்துதான் அவர்மீது ஆர்வம் கொண்டேன். அதன் பின்பு அவரது நூல்கள் பலவற்றைத் தேடித்தேடி படித்து வந்துள்ளேன். அவரின் எழுத்துக்கள் மீது அவ்வளவு ஈர்ப்பு… அவ்வளவு தூரத்திற்கு என்ன கவர்ந்த நபர் இன்று இல்லை என்று நினைக்கும் பொழுது… மனதை சிறிது இறுக்கவே செய்கின்றது.. மனதின் ஓரத்தில் ஒரு சொட்டுக்கண்ணீர் வழிந்தோடுகிறது… என் மனதைத் தேற்றிக்கொள்ள அவரது படைப்புக்களையே நாடவேண்டியுள்ளது. அவரது படைப்புகளை நான்
Read More