Author: சுபானு
நீண்ட காலத்தின் பின்னர் இன்று குயிலின் இனிய கூவும் குரலினைக் கேட்டேன். கற்பனைக்கு உடனடியாகச் சென்றுவிடாதீர்கள் உண்மையில் நான் சொல்ல வந்தது குயில் என்னும் பறவையினைப் பற்றித்தான். ஒரு சின்னப் பறவைக்குள் என்ன ஒரு கம்பீரமான கணீர் என்ன குரல் அடங்கியிருக்கின்றது. தன் ஜோடிக் குயிலினை என்ன அழகாகக் கூவியழைக்கின்றது அந்தப் பறவை. என்ன ஒரு இனிமையான குரல். கேட்பவர்களை மயக்கும் மன்மதக் குரல். எந்தவிதமான கரகரப்புக்களும் இன்றி தெளிவாக ஒலிக்கும் குரல். இளவேனிற் காலம் என்றாலே
Read Moreஇன்று காலை எனது மின்அஞ்சற் பெட்டியைத் திறந்து பார்த்தால் ஒரே சந்தோசமாக இருந்தது. அதுவும் இரட்டிப்புச் சந்தோசம். எனது வலைப்பதிவுகள் இரண்டு யுத் விகடனில் பிரசுரித்துள்ளதாக மின்அஞ்சல் அனுப்பியிருந்தார்கள். ஆயிரக்கணக்கான வலைப்பதிவுகள் வலைப்பூக்களில் நாள்தோறும் பூத்துக் குலுங்குகின்றன. அவற்றிற்கிடையில் எனது பதிவுகளைப் பிரசுரித்திருப்பதினை நினைக்கையில் மனது மிகவும் பூரிக்கின்றது. அண்மையில் பதிந்திருந்த அனிச்சம்பூ – குட் Blog பகுதியிலும் இதயத் திருடி அவள் – ஜீட் பகுதியிலும் பிரசுரித்திருந்தார்கள். அவற்றிற்கான பகுதிக்குச் செல்வதற்கு இங்கே சொடுக்குங்கள். இதயத்
Read Moreஅனிச்சம்பூ என்றவுடனே எல்லோர்க்கும் ஞாபகத்திற்கு வருவது அதனது மென்மையான இயல்புதான். எம் கைகளால் தீண்டினாலே வாடிவிடக்கூடிய மென்மையான பூ. ஏன் முகர்ந்து பார்த்தாலே வாடிவிடுமாம் இந்த அனிச்சம்பூ. மென்செம்மஞ்சள் நிறத்தில் ஐந்து இதழ்களில் விரிந்திருக்கும் இந்தப் பூ பார்ப்பதற்கு தனியழகு. அந்த அழகான மலரின் சில படங்களை இங்கே தருகின்றேன். நீங்களும் பார்த்துத் இரசித்துக் கொள்ளுங்களேன். சரி விடையத்திற்கு வருவோம். தமிழ் இலக்கியங்களில் பல இடங்களில் இந்த அனிச்சம்பூ கையாளப்பட்டு இருந்தாலும் திருவள்ளுவர் பல குறள்களில் அழகாக
Read Moreஇணையம் என்னும் தோட்டத்தில் பூத்திருக்கும் உங்கள் வலைப்பூக்களை மேலும் அழகுபடுத்திப் பார்க்க வேண்டுமா.. ? அவ்வாறான ஒரு ஆர்வத்தில் எனது வலைப்பூவினை மேலும் அழகுற ஒழுங்கமைக்க எண்ணி சில வித்தியாசமான ஒழுங்கமைப்பு முறைகளை முயற்சித்துப் பார்த்தேன். அவற்றில் ஒன்றுதான் இந்த Popup image loading method (மன்னிக்கவும் இதற்குச் சரியான தமிழ்ப்பதம் தெரியவில்லை.) உங்கள் வலைப்பூக்களில் படங்களை இணைப்புக் கொடுக்கும் போது அவற்றின் மேலே வாசகர்கள் சொருகினால் அந்தப் படம் அதே பக்கத்தில் காணக்கூடியதாக இருக்கும். அதாவது
Read Moreகாலைப் பனியையும் ஊடறுத்து கண்டி நோக்கி மிகவேகமாக பறந்துகொண்டிருந்தது ஜக்குலர் கார். அதிலே நான்கு நண்பர்கள்.. வழக்கமான விறுவிறுப்பில் தம்மை மறந்து பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். நான்கு பேருமே பொறியியல் பட்டப்படிப்பை முடித்திருந்தவர்கள். ஒரு இயந்திரப் பொறியியலாளன் (மெக்கானிக்கல் என்யினியர்), ஒரு இலத்திரனியல் பொறியியலாளன் (எலக்ரோனிக்ஸ் என்யினியர்), ஒரு கெமிக்கல் என்யினியர் மற்றும் ஒரு கணணிப் பொறியியலாளன் (கொம்பியூட்டர் என்யினியர்) என அவர்களை அறிமுகப்படுத்தினால் மேலும் சிறப்பாக இருக்கும். அவர்கள் சந்தோசமாக பேசிக்கொண்ருக்க அந்த ஜக்குலர் கார்
Read More“பாராளக் கன்னன் இகல் பார்த்தனை முதலிற் கொன்று, அணங்கின் காரார் குழல் களைந்து காலில் தளை பூட்டி, நேராக நின்னையும் யான் பிடித்துக் கட்டுவேனானால் வாராமல் தடுக்கலாம் மாபாரதம்.. “ இந்த வரிகள் மகாபாரதத்தில் மிகவும் பிரபல்யமானவை. மகாபாரத யுத்தம் மூழ்வதற்கு முன்னர் கார்மேக கண்ணன் ஜோதிடக் கலையில் சிறந்து விளங்கிய சகாதேவனை நோக்கி வரப்போகின்ற பாரத யுத்தம் நிகழாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் எனக் கேட்ட போது சகாதேவன் கூறிய வரிகளே அவை. கர்ணன்
Read Moreநீண்ட நாட்களின் பின் எனது வலைப் பூக்களின் மீண்டும் கவனம் செலுத்த நேர்ந்தது இன்று தமிழ் நாட்டில் நடத்த சம்பவம். இறுதியாண்டு பரீட்சைகள் மிக வேகமாக நெருங்கிக் கொண்டிருப்பதனாலும் இறுதியாண்டு செயற்திட்டத்தின் இறுதித் திகதி அதைவிட வேகமாக முன்னால் வந்து நின்று பயமுறுத்துவதனாலும் நீண்ட காலமாக வலைப் பூக்களில் எதுவும் உருப்படியாக எழுதுவதில்லை. நாள்தோறும் வருகின்ற வன்னிச் செய்திகளின் கனதி இங்கே மனங்களில் உறுத்தலைக் கூட்டிக் கொண்டிருக்கின்றது. அதைவிடவும் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் இருக்கின்றதே
Read Moreவீரம் விளைந்து விளையாடும் எம்மண்ணில் இருந்து ஓர் குரல் இது.. அன்னைத் திருநாடே.. அழகொளிரும் எம் ஊரே.. மண்ணைக் குழைத்து எடுத்து பாட்டிசைத்த தாய் வீடே.. தாயாள் முலை தந்தாள் தமிழாள் மொழி தந்தாள் பூவாய் மலர உந்தன் பொன்மடியில் இடம் தந்தாய் கண்திறந்த நாள் முதலாய் கையெடுத்து தூக்கி எம்மை உன் மடியில் தானே உறங்குவதற்குப் பாய் விரித்தாய்.. வன்னியிலிருந்து ஓர் குரல் …
Read Moreமலரும் புத்தாண்டு என்றும் எல்லோருக்கும் சுகம் தரும் இனிய நல்லாண்டாக அமைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். கடந்த போன காலங்கள் தந்த வலிகளும் வடுக்களும் விலகி எல்லோர் வாழ்விலும் சந்தோசம் நிலவ வேண்டும். சுகம் தரும் புதுத்தென்றல் எங்கும் பரவட்டும். விழிகளில் வடியும் கண்ணீர்த் துளிகளை அவை போக்கிடட்டும். உறவுகளையும் சொந்த வீடு வாசல்களையும் இழந்து வாழ்க்கையின் அர்த்தம் தேடும் அனைத்து உறவுகளுக்கும் வாழ்க்கையில் வசந்தம் மலர 2009ம் ஆண்டு வழிகோலட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்களுடன் சுபானு.
Read Moreஎனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம் மனதில் ஓர் மூலையில் இருந்துகொண்டிருக்கின்றது… எனது பாடசாலைப் பருவத்தில் அதாவது நான் யாழ்ப்பாணம் இந்துக் கல்லுாரியில் உயர்தரம் படித்துக்கொண்டிருந்த காலத்தில் நடந்த நிகழ்வு அது. யாழ்ப்பாணத்தில் உயர்தர வகுப்புப்படிக்கும் மாணவர்கள் தமது பாடசாலை இறுதிக் காலங்களில் உயர்தர மாணவர் ஒன்றுகூடல் (A/L Social) என்னும் நிகழ்ச்சியை நடாத்துவது உண்டு (வேறு மாவட்ட மாணவர்கள் அத்தகைய நிகழ்ச்சியினை நடாத்துகின்றார்களா என்பது எனக்குத் தெரியாது). அதை ஒரு பரம்பரைப் பழக்கம் என்று கூடச்சொல்லலாம்.
Read More