Author: சுபானு
கொன்றைமலரணி பொன்னணி பூண்டுவெண்மலரொன்று கருவிழியேற்றி நிழல்குடை ஆங்கண் அகலுள்கதிரொளியான் விழியிரு நோக்கி மெய்தீரா காதலோடுபைங் கொடி முல்லைகாத்திருந்த காட்சியது காண கதிரவன்தன்வெண்ணைடையேற்றி கடுவளி தாண்டகாலில் கணைவிசை வேற்றிதுவி சக்கரந்தனில் விரைந்தன் வாழ்வில்லொரே ஒரு மலருக்காய் தான்விதியாது செய்வொம்சொல்? தோழா…
Read Moreஆறடி உயரம், வெள்ளை வெளேர் என்று மின்னும் தலைமுடி, எப்பொழுதும் அமைதியாக, ஆழ்ந்து, ஆழமாகப் பார்க்கும் கண்கள், கம்பீரமான ஆளுமையினை வெளிப்படுத்தும் குரல் – அநேகமானோர் கடினம், கசக்கும் என வெறுக்கும் இரசாயனவியலின் மேல் எனக்கு காதல்வரக் காரணமாகி இன்று என்னை ஒரு நிலைக்கு உயர்த்தி விடக் காரணமானவர் நாகரட்ணம் சேர்.
2002ம் ஆண்டு தை மாதம், ஒரு ஓலைக் கூடாரத்தின் கீழ் இரசாயனவியலின் அறிமுகமும் ஒரு சிறந்த பண்பான ஆளுமையின் அறிமுகமும் ஒருசேரக் கிடைத்த தருணம் அது. மனதிற்குள் ஒரு உற்சாகம் கலந்த படபடப்பு. இரசாயனவியலினைப் பற்றி முன்னவர்களால் கட்டப்பட்டிருந்த விம்பம், வாழ்க்கைப் பாதையின் திசைகளைத் தீர்மானிக்கப்போகும் ஒரு நீண்ட பயணத்தின் முதற்படியில் முதல் நாள், இரசாயனவியலில் இமயத்தை போன்ற ஒருவர், விடவும் ஒரு முன்னால் லெப்டினன், என என்னை ஆக்கிரமித்திருந்த உணர்வுக் கலவையினை ஓரிரு வார்த்தைகளால் இன்று வெளிப்படுத்துவது கடினம்.
Read More“அன்பே உன் பாதமென் சுப்ரபாதம் ஆனந்த சங்கமம் தந்த பாதம் என் வாழ்வில் வேறேதும் வந்தபோதும் எந்நாளும் உன் பாதம் ரெண்டு போதும்.. ” தொடர்க.. இளமை ததும்பலில் என்றும் மயங்கவைக்கும் குரல், அழுத்தமாக உச்சரிக்கும் வசனங்கள் என பாடவந்த முதல்பாடலிலேயே தன் வசீகரக் குரலினால் தமிழ் திரை இசையில் தனக்கெனத் தனியிடத்தினை ஒதுக்கிக் கொண்டவர் சுனந்தா. காதலின் மென்மையினை இசையின் மூலம் உணர்த்த சித்ரா, ஸ்வர்ணலதா வரிசையில் இளையராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் பாடகி சுனந்தா. புதுமைப் பெண்(1983)
Read Moreமுல்லையும் தென்றலும் கூடி விளையாடும் உங்கள் வீட்டு முற்றத்திற்கு புதுக்கோலம் போடவந்த மகவு நான். என் அன்னையின் மார்சுரக்கும் திசுக்களில் பாய்ந்த இலத்திரன்களையும், என் தந்தையிடம் நான் பெற்ற கணித அறிவியலையும், ஊடகமாக்கி, எங்கும் என்றும் தமிழர் வாழ்வியலை வியாவிக்கச் செய்ய பிறந்த குழந்தை நான். எனக்கு இல்லை வேலி.. என்னை அடைக்க எதுவும் இங்கு இல்லை.. என்ன.. நான் யார் என்றா சிந்திக்கின்றீர்கள்…. நான்தான்… ஆறாம் திணை! பூச்சியமும் ஒன்றும் கொண்ட காதலில் மலர்ந்த முதற்குழந்தை
Read Moreஉயிரினப் பரம்பலில் ஒரு தலைமுறையினது அறிவும் இயல்பும் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகின்ற செயன்முறையானது (Genetics Transmission) மரபணுக் கொள்கைகளில் ஆணிவேராகத் திகழ்கின்றது[1]. உயிரினங்களின் வளர்ச்சிப்படியினில் இந்தப் பரிமாற்றச் செயன்முறையே முக்கியமான பங்கு வகிக்கின்றது. ஒரு உயிரியின் தனித்துவமான தன்மையும் அந்த உயிரியின் இயல்புகளும் அவற்றின் உடலினுள்ளேயே சேமிக்கப்பட்டுள்ளது. இந்த பரம்பரை இயல்புகள் சார்த்த தகவல்கள் அனைத்து உயிரிகளிலும் அவற்றின் ஒவ்வொரு கலத்தினுள்ளும் உள்ள கருவினுள் DNA (Deoxyribonucleic Acid) என்னும் ஓர் இரட்டை சுருளி(Double Helix) இழையினுள்
Read Moreகிட்டத்தட்ட பத்து வருடங்கள் இருக்கும், அந்த மாயாவி வீரனை நான் பிரிந்து. கடைசியா ராணிக் கமிக்ஸில் மாயாவியினை சந்தித்தது ஈராயிரத்து-மூன்றில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவர் முதல்வர் அறையினுள்ளே. ஆண்டு எட்டு படிக்கும் மாணவன் ஒருவன் பாடசாலை நிறைவடையும் போது இசைக்கப்படும் பாடசாலைக் கீதத்திற்கு மரியாதை தருவதற்காக எழுந்து நின்று, தனது மேசையின் கீழ் உள்ள சிறிய தட்டில் ஒரு ராணிக்கமிக்ஸினை திறந்து ஒளித்து வைத்து களவாகப் படித்துக்கொண்டு நின்றான். அந்த நேரத்தில் அங்கு மாணவர்களைக் ஒழுங்கமைக்க
Read Moreஊஞ்சல் தமிழ் வலைப்பூவின் இதழ்கள் இனிமேல் உங்கள் iPhone, iPad’களில் மிகவும் அழகாகவும் சுருக்கமாகவும் தரையிறக்கி வாசிக்கத்தக்கதாக மாற்றம் பெற்றுள்ளது. உங்கள் iPhone’இன் அல்லது iPad’இல் உள்ள இணைய உலாவியில் http://blog.unchal.com என பதிந்து ஊஞ்சலை இசைத்து விடவும். முற்றிலும் iOS இற்கு ஏற்ற அலைபேசி பக்கங்களாக இலகுவாக வாகிக்கத் தக்கதாக தேவையற்ற நிரல்கள் இல்லாமல் இனிமேல் ஊஞ்சல் அசைந்தாடும். முகப்புப் பக்கம் பதிவுகளை மேலும் நீட்டி வாசிக்க பதிவுகளுக்கு பதிப்பட்ட பின்னூட்டங்களை வாசிக்க தனிநபர் தகவல்
Read Moreகண்ணாடிக்குள் பிம்பம் அதை இவள் காட்டினாள்.. கேட்காத ஓர் பாடல் அதில் இசை மீட்டினாள்.. தெய்வத் திருமகளினைப் பார்த்துவிட்டு திரையரங்கினை விட்டு வெளியே வரும் விழிகளினோரம் ஈரம் வந்து குடை ஒன்று கேட்டதே.. விழிகளின் மீதிலே சிலதுளியும், உதட்டினில் மெலிதாய் ஒரு புன்னகையுமென திரையரங்கிலிருந்த வெளியே வருகின்ற அனைத்து முகங்களையும் அலங்கரிக்கச் செய்திருந்தது தெயவத்திருமகள். மீண்டும் ஒர் அழகான ஓவியம் தமிழ் சினிமாவில் தீட்டப்பட்டுள்ளது. முழுமையான படைப்பு ஒன்று. அத்தனை அம்சங்களும் நிறைந்திருந்து மனதினையும் நிறைத்திருந்தது இந்தப்
Read Moreஇரண்டு நாட்களுக்கு முன்னர் முகப்புத்தகத்தில் பரபரப்பாக ஒரு செய்தி; யாழ்பாணத்து இளம் பெண் ஒருவர் பல இலட்சங்கள் முகப்புத்தகத்தின் ஊடாக, புலம்பெயர்ந்த தமிழ் வாலிபர்களை ஏமாற்றி சம்பாதித்தாக இரண்டு இணையத்தளங்களில் வெளிவந்த தகவல் முகப்புத்தகத்தில் பரவியிருந்தது. முகப்புத்தகத்தின் ஊடாக “பல இளம் வாலிபர்களை” “ஏமாற்றினாராம்” என அந்த இளம் பெண்ணின் மீது கடுமையான விமர்சனங்களினையும் அந்த பெண்ணின் பல வித்தியாசமான கோணங்களில் எடுக்கப்பட்ட “அந்தரங்கமான (snapshots) படங்களையும்” தாங்கி வந்திருந்தன அந்த இரண்டு இணையத்தளங்களும். மறுநாள் இன்னும்
Read Moreஅவ மூக்கு மேல வேர்வையாகணும் இல்ல நாக்கு மேல வார்த்தையாகணும் அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகணும் இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகணும்.. மெல்ல கண்களை மூடியபடி சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயிலில் நிலக்கீழ் பாதைவழி வீடு நோக்கிய பயணம் ஒன்றில்தான் எனக்கு அறிமுகமாகியது இந்தப் பாடல். காதுகளுக்குள் தணிந்த குரலில் ஐபோனில் ஒலித்துக் கொண்டிருந்த இலங்கையின் வெற்றி வானொலிதான் எனக்கு அறிமுகப்படுத்தியது. பல்லவியிலேயே என் மனதினை ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டது பாடல். பாடல் தொடரத் தொடர என்னை
Read More