“அன்பே உன் பாதமென் சுப்ரபாதம் ஆனந்த சங்கமம் தந்த பாதம் என் வாழ்வில் வேறேதும் வந்தபோதும் எந்நாளும் உன் பாதம் ரெண்டு போதும்.. ” தொடர்க.. இளமை ததும்பலில் என்றும் மயங்கவைக்கும் குரல், அழுத்தமாக உச்சரிக்கும் வசனங்கள் என பாடவந்த முதல்பாடலிலேயே தன் வசீகரக் குரலினால் தமிழ் திரை இசையில் தனக்கெனத் தனியிடத்தினை ஒதுக்கிக் கொண்டவர் சுனந்தா. காதலின் மென்மையினை இசையின் மூலம் உணர்த்த சித்ரா, ஸ்வர்ணலதா வரிசையில் இளையராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் பாடகி சுனந்தா. புதுமைப் பெண்(1983)
முல்லையும் தென்றலும் கூடி விளையாடும் உங்கள் வீட்டு முற்றத்திற்கு புதுக்கோலம் போடவந்த மகவு நான். என் அன்னையின் மார்சுரக்கும் திசுக்களில் பாய்ந்த இலத்திரன்களையும், என் தந்தையிடம் நான் பெற்ற கணித அறிவியலையும், ஊடகமாக்கி, எங்கும் என்றும் தமிழர் வாழ்வியலை வியாவிக்கச் செய்ய பிறந்த குழந்தை நான். எனக்கு இல்லை வேலி.. என்னை அடைக்க எதுவும் இங்கு இல்லை.. என்ன.. நான் யார் என்றா சிந்திக்கின்றீர்கள்…. நான்தான்… ஆறாம் திணை! பூச்சியமும் ஒன்றும் கொண்ட காதலில் மலர்ந்த முதற்குழந்தை