உயிரினப் பரம்பலில் ஒரு தலைமுறையினது அறிவும் இயல்பும் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகின்ற செயன்முறையானது (Genetics Transmission) மரபணுக் கொள்கைகளில் ஆணிவேராகத் திகழ்கின்றது[1]. உயிரினங்களின் வளர்ச்சிப்படியினில் இந்தப் பரிமாற்றச் செயன்முறையே முக்கியமான பங்கு வகிக்கின்றது. ஒரு உயிரியின் தனித்துவமான தன்மையும் அந்த உயிரியின் இயல்புகளும் அவற்றின் உடலினுள்ளேயே சேமிக்கப்பட்டுள்ளது. இந்த பரம்பரை இயல்புகள் சார்த்த தகவல்கள் அனைத்து உயிரிகளிலும் அவற்றின் ஒவ்வொரு கலத்தினுள்ளும் உள்ள கருவினுள் DNA (Deoxyribonucleic Acid) என்னும் ஓர் இரட்டை சுருளி(Double Helix) இழையினுள் சேமிக்கப்பட்டுள்ளது[2].
ஐந்து காபன் அணுக்களால் ஆன குளுக்குகோஸ் மூலக்கூறும், பொஸ்பரசும் ஒட்சிசனும் உருவாக்கும் பொஸ்பேற்று மூலக்கூறும் இணைந்து உருவாக்கும் மூலக்கூறும் நியூக்குளோடைட்(Nucleotides) எனப்படும்[3]. இந்த நியூக்குளோரைட்க்கள் தொடர்ச்சியாக அடுக்கப்பட்டு மிக நீண்ட பல்பகுதியக்(long polymer) கட்டமைப்பினை உருவாக்கும். இதன் போது குளுக்கோஸ் மூலக்கூறுகளுடன் வந்து இணையும் Adenine (abbreviated A), Cytosine (abbreviated C), Guanine (abbreviated G) மற்றும் Thymine (abbreviated T) என்னும் நான்கு வகையான நீயூட்ரோபேஸ் (Nucleobases) களினால் நியூக்குளோடைட்(Nucleotides) களில் ஐதரசன் கவர்ச்சிகள் ஏற்பட்டுகின்றது. இந்த ஐதரசன் கவர்ச்சியினால் நீண்ட பல்பகுதியக் கட்டமைப்புச் சங்கிலியான DNA என்னும் நிறமூர்த்தம்(இலங்கை வழக்கு) இரட்டைச் சுருள் வடிவத்தினைப் பெறுகின்றது. இந்த இரண்டைச் சுருள் சங்கிலிகளில்தான் உயிரியின் தன்மையும் அதனுடைய தொழிற்பாட்டுத் திறனும் பதியப்பட்டு இருக்கின்றது. இன்னும் இலகுவாகச் சொல்வதானால் A,C,G,T என்ன நீயூக்குளோடைட் எவ்வாறு ஒரு DNA சங்கிலியில் அடுக்கப்பட்டிருக்கின்றதோ.. அதற்கு ஏற்பவே உயிரிகளில் தகவல்கள் சேமிக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு ஒரு உயிரியில் தலைமுடியின் நிறம் கறுப்பு என்பதற்கு ஒரு DNA சங்கிலியில் ACCCACAAAACC என்ற ஒழுங்கில் நீயூக்குளோடைட் அடுக்கப்பட்டிக்கக்கூடும்( இது ஒரு உதாரணத்திற்கு மட்டும். உண்மையில் தலைமுடியின் நிறத்திற்கு காரணமான codon வேறு ஒழுங்கில் இருக்கும்). அத்தோடு இந்த தகவல்களை வாசித்து அதனை விளங்கி செயற்படுத்துவதற்கான ஒரு படிமுறைச் செயற்பாடும் இன்னும் ஒரு தகவலாக இந்த DNA சங்கிலியினுள்ளேயே பதியப்பட்டு உள்ளது. ஆக, தகவல்களும் அதனை விளங்கிக்கொள்வதற்கான ஏற்பாடுகளும் இந்தக் DNA கட்டமைப்புக்களில்தான் பதியப்பட்டுள்ளது.
DNA களில் நீயூக்குளோடைட் அடுக்கப்பட்டும் ஒழுங்கினில் மாற்றத்தினை ஏற்படுத்துவதன் மூலம் ஒரு உயிரினத்தின் இயல்பினையும் அதன் செயற்பாடுகளையும் மாற்றமுடியும். உயிரின இனப்பெருக்கத்தின் போது பெற்றோரினது மரபணுக்கள் அவர்களது சந்ததிக்கு கடத்தப்படுகின்றது. அதனூடாக பெற்றோரினது இயல்புகளும் அவர்களது அறிவும் திறனும் அவர்களது பிள்ளைகளுக்கும் அவர்களது சந்ததிக்கும் கடத்தப்படுகின்றது. ஒரு உயிரியின் மரபணுக்களில் உள்ள இந்தத் தகவல்களை எமக்கு விரும்பிய விதத்தில் மாற்றம் செய்யவோ அல்லது சில தகவல்களை அழித்து நமக்கு விரும்பிய தகவல்களைப் புகுத்தவோ இன்றுவரை மனிதன் அறிந்திருக்கின்ற விஞ்ஞான அறிவிற்கு தெரியவில்லை.
ஆனால்..
ரஸ்ய விஞ்ஞானிகள், மரபணுக்களில் உள்ள தகவல்களை சில குறிப்பிட்ட ஒலிகளின் மூலமாக அல்லது குறிப்பிட்ட அலைநீளத்தில் உள்ள அலைச்சக்கியினாலும் மாற்றமுடியும் என்ற வியத்தகு ஆய்வுத் தகவலை வெளியிட்டுள்ளார்கள். இதுவரை மரபணுக்களில் உள்ள 10 சதவீத்திலும் குறைவான தகவல்களே உயிரினத்திற்கு தேவையான தகவல்களாகவும் ஏனைய 90 சதவீதமான தகவல்கள் எந்தவிதத்திலும் பயனற்ற தகவல்கள் என்ன கண்ணோட்டத்தில் இருந்த விஞ்ஞானிகளை இந்த ஆராய்ச்சி முடிவு அதிசயிக்க வைத்திருக்கின்றது. மரபணுக்களில் உள்ள தகவல்கள் பொதுவான சொற்தொடர் இலக்கண விதிகளையும்(Grammar rules) தெளிவான தொடரியலையும் (syntax) உள்ளடக்கி மனிதனுடைய மொழியினைப் போன்று உள்ளது. அத்துடன் அந்தக் தகவல்கள் முறையான இலக்கணவிதிகளை உள்ளடக்குவதனால் அனைத்து மனித மொழிகளும் மனித மரபணுக்களின் உச்சரிப்புக்களாகவே இருக்கின்றது என்கின்றார்கள். இன்னும் சொல்வதானால்…
மரபணுக்களை பேசுகின்ற சொற்களால் மாற்றியமைக்க முடியும்.[7]
அத்தோடு மனித மரபணுக்களை நாம் பேசுகின்ற சொற்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கவோ அல்லது உருவாக்கவோ முடியும். ஆனால் அவ்வாறு மாற்றயமைக்க பொருத்தமான மீடிறனில் ஒலிகளை இசைக்க வேண்டும் அல்லது அதற்கொத்த அதிர்வுகளை எழுப்பவேண்டும். இவ்வாறு பொருத்தமான மீடிறனில் உள்ள அதிர்வுகளை/ஓசைகளை எழுப்புவதன் மூலமாக அவர்கள் மரபணுக்களில் மாற்றத்தினை ஏற்படுத்தியும் காட்டியுள்ளார்கள்.
இந்த ஆராய்ச்சி முடிவுகள் விஞ்ஞான உலகத்தினை அதிசயிக்க வைத்திருந்தாலும் பல பழமையான விடங்களை மெய்யாக்க விளைகின்றது. அதாவது எமது மரபணுக்கள் இயற்கையாகவே மொழிகளுக்கு துலக்கத்தினை(response) ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் இதுவரை நமக்கு அறியப்படாமல் இருந்தாலும் ஆயிரம் ஆண்டுகள் முன்னர் வாழ்ந்த எம் முன்னோர்களும் ஆன்மீக குருக்களும் இதனை நன்றாக அறிந்து வைத்திருப்பார்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது. அதாவது ஒரு குறிப்பிட்ட மீடிறனில் வார்த்தைகளை (அவைதான் மந்திரங்கள் எனப்பட்டிருக்கலாம்) உச்சரிப்பதன் மூலமும் “சிந்தனைச் சக்கி” மூலமாகத்தான் பல அதிசயங்களை ஏற்படுத்தியிருந்தார்களோ எனத் தோன்றுகின்றது. மரபணுக்களுடன் தொடர்பினை ஏற்படுத்துவதற்கு பொருத்தமான மீடிறனில் உணர்வலைகளை ஏற்படுத்தவேண்டும். அதாவது எமது உணர்வலைகளை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இதனால்தான் மரபணுக்களுடன் தொடர்பினை ஏற்படுத்தும் திறன் எல்லோராலும் முடிவதில்லை. தன் ஆத்மசக்தியினை தியானத்தின் மூலமாக அதிகரிகரிப்பவரிகளால்தான் மரபணுக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தக் கூடியவர்களாய் இருக்கின்றார்கள்.
அத்தோடு ரஸ்ய விஞ்ஞானிகள் இன்னும் ஓர் விடயத்தினையும் கண்டுபிடித்திருக்கின்றார்கள். அதாவது ஒருவர் தனது அறிவின் எல்லைகளுக்கு அப்பால் இருந்து தகவல்களை எவ்வாறு பெறக்கூடியதாக இருக்கின்றது (Hypercommunication)[8],[9],[10] என்பதனையும் காரணப்படுத்தியிருக்கின்றார்கள். இன்றைய காலத்தில் மனிதனால் இந்த அறிவின் எல்லைதாண்டிய தொடர்பாடல்கள் மிக மிக அரிதாகவே இருந்தாலும் பல உயிரினங்கள் இந்த எல்லை தாண்டிய தொடர்பாடல்கள் அவற்றின் நாளாந்த நடவடிக்கையாக இருக்கின்றது. உதாரணத்திற்கு ஒரு எறும்புக் கூட்டத்தினை எடுத்துக்கொண்டால் ராணி எறும்பு எவ்வாறு தன் கூட்டத்தினை கட்டுப்படுத்துகின்றது என்பது ஒரு ஆச்சரியமான விடயம். எறும்புகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பற்கு ராணி எறும்பு இந்த எல்லைதாண்டிய தொடர்புகளையே (Hypercommunication) மேற்கொள்கின்றது. இந்த ராணி எறும்பு தன்கூட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டாலும் தன் கூட்டத்தோடு தொடர்புளை மேற்கொண்டு தன்கட்டுப்பாட்டுக்குள் வைத்திக்கும். ஒருவேளை இந்த ராணி எறும்பு கொல்லப்பட்டால் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த எறும்புகள் ஒழுங்கமைந்த செயற்பாடுகள் இல்லாமலும் செயல்நிலை அற்றுப்போயும் இருக்கும். இந்த எல்லைதாண்டிய தொடர்பாடலுக்கு காரணம் மரபணுக்களில் உள்ள magnetized wormholes[11],[12] தான் காரணம் என்கின்றார்கள் ரஸ்ய விஞ்ஞானிகள். அதாவது இந்த magnetized wormholes கள் பிரபஞ்சத்தில் காணப்படும் Einstein-Rosen bridges[13] களின் இயல்பொத்த சிறிய வடிவமாகும். பிரபஞ்சத்தில் ஒரு இடத்தில் இருந்து இன்னும் ஓர் இடத்திற்கு தொடர்புகளை ஏற்படுத்தி அதனுடாக தகவல்களை காலங்களுக்கு அப்பாலும் பால்வீதிகளுக்கு அப்பாலும் பரிமாற்றக் கூடிய அமைப்புதான் Einstein-Rosen bridges. எமது மரபணுக்களில் உள்ள இந்த magnetized wormholes களினை பயன்படுத்துவதன் மூலம் நாம் பிரபஞ்சத்தில் இருந்த தகவல்களையும் பிரபஞ்சத்திற்கு தகவல்களையும் பரிமாற்ற முடியும். அத்தோடு மற்றைய உயிரினங்களையும் இதற்கூடாக தொடர்புகொள்ள முடியும்[14] . மேலும் வானில் எங்கோ அசையும் நட்சத்திரங்களின் இயக்கத்திற்கும் மனிதனின் வாழ்வியல் இயக்கதிற்கும் இருக்கும் ஒரு நீண்ட தொடுப்பு இந்தக் கண்டுபிடிப்பினால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.
மரபணுக்கள் என்பது தலைமுறைகளுக்கு இடையில் தகவல்களைப் பரிமாற்றும் ஒரு பரிமாற்ற அலகு மட்டுமல்ல; இந்த மரபணுக்களின் ஊடாக நாம் பிரபஞ்சத்தின் கொஸ்மிக் கதிர்களையும் அகத்துறிஞ்ச முடியும் வேற்று உயிரிகளின் இயல்பினையும் நடத்தையையும் எமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். ஆனால் அதற்கு எமது மரபணுக்களில் காணப்படும் magnetized wormholes இனைக் கட்டுக்குள் கொண்டு வருவது மிகவும் கடினமான ஒன்றாகும். அமைதியான மனமும் படபடப்புக்கள் குறைந்த வாழ்க்கை முறையும் இதற்கு அவசியமாகும். ஒரு உயிரி தன் ஆத்ம சக்தியினை(inna power) அதிகரிப்பதன் மூலமாகவே இந்த magnetized wormholes இனை கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்கின்றது விஞ்ஞானம். விஞ்ஞானமும் மெஞ்ஞானமும் எங்கோ ஒரு புள்ளியில் சந்திக்கும் போது நம்மை சூழ்ந்திருக்கும் பல விடுவிக்கப்படாத ரகசியங்கள் வெளிச்சத்திற்கு வரக்கூடும் எனபதற்கான சான்று இது. மீதியினையும் எதிர்பார்த்திருப்போம் எதிர்காலத்தில்..
மேற்கோள்கள்
1 – ‘Heredity‘ http://medical-dictionary.thefreedictionary.com/Genetic+lines
2 – ‘DNA‘ http://en.wikipedia.org/wiki/DNA
3 – ‘Nucleotide‘ http://en.wikipedia.org/wiki/Nucleotide
4 – ‘How DNA is Packaged‘ http://www.youtube.com/watch?v=gbSIBhFwQ4s&feature=relmfu
5 – ‘Mechanism of DNA Replication‘ http://www.youtube.com/watch?v=I9ArIJWYZHI&feature=relmfu
6 – ‘DNA replication‘ http://www.youtube.com/watch?v=zdDkiRw1PdU&feature=related
7 – ‘DNA is influneced by Words and Frequencies’ http://www.mayanmajix.com/art2016.html
8 – ‘Human DNA is a biological Internet and superior in many aspects to the artificial one http://www.bibliotecapleyades.net/ciencia/ciencia_genetica02.htm
9 – ‘Information, DNA, and Hypercommunication‘ http://betweenbothworlds.blogspot.com/2007/11/information-dna-and-hypercommunication.html
10 – ‘Hyper-Communication – The Era of DNA‘ http://www.tokenrock.com/harmonic_nature/natural_hyper_communication.php
11 – ‘DNA can cause disturbing patterns in the vacuum, thus producing magnetized wormholes! Wormholes are the microscopic equivalents of the so-called Einstein-Rosen bridges in the vicinity of black holes (left by burned-out stars). These are tunnel connections between entirely different areas in the universe through which information can be transmitted outside of space and time‘ http://www.bibliotecapleyades.net/ciencia/ciencia_genetica02.htm
12 – ‘Wormhole‘ http://en.wikipedia.org/wiki/Wormhole
13 – ‘The Einstein-Rosen Bridge‘ http://www.krioma.net/articles/Bridge%20Theory/Einstein%20Rosen%20Bridge.htm
14 – ‘The findings of Russian DNA science & research are so groundbreaking that they do truly sound incredible. Yet, we already have isolated examples of individuals who have mastered the necessary techniques, at least on some level.‘ http://undergroundhealthreporter.com/dna-science-and-reprograming-your-dna
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
நண்பரே.. மிக அருமையான பதிவு. மரபணுக்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி
நன்றாக புரியும் வகையில் கூறியுள்ளீர்கள். அறிவியல் கட்டுரைகள் தமிழில்
எழுதுபவர்கள் மிக மிக குறைவு. மேன்மேலும் நிறைய அறிவியல் கட்டுரைகளை தமிழில்
படைக்க வாழ்த்துக்கள். நேரமிருந்தால் என்னுடைய வலைப்பூ பக்கம் சென்று பாருங்கள். http://ashokkumarkn.blogspot.com/
பதிவு அருமை. நீங்க சொன்ன தகவல்கள் வாசித்திருந்தேன். ஆனால் இது அனைவரிடமும் சென்றடைவது இல்லை
உங்கள் எழுத்தும் பதிவும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மிகச் சிறந்த விஞ்ஞான மெய்ஞான உண்மையை பகிர்ந்துள்ளீர்கள். மனமார்ந்த நன்றி.
உங்கள் பதிவை என் வலைச்சரத்தில் இணைத்துள்ளேன்.
கீழிருக்கும் link வலைச்சரத்தில் உங்கள் கட்டுரையை
நான் பகிர்ந்த இடுகை.
http://blogintamil.blogspot.com/2011/12/gigo-theory.html
very nice
very nice
thank you for information