உயிரினப் பரம்பலில் ஒரு தலைமுறையினது அறிவும் இயல்பும் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகின்ற செயன்முறையானது (Genetics Transmission) மரபணுக் கொள்கைகளில் ஆணிவேராகத் திகழ்கின்றது[1]. உயிரினங்களின் வளர்ச்சிப்படியினில் இந்தப் பரிமாற்றச் செயன்முறையே முக்கியமான பங்கு வகிக்கின்றது. ஒரு உயிரியின் தனித்துவமான தன்மையும் அந்த உயிரியின் இயல்புகளும் அவற்றின் உடலினுள்ளேயே சேமிக்கப்பட்டுள்ளது. இந்த பரம்பரை இயல்புகள் சார்த்த தகவல்கள் அனைத்து உயிரிகளிலும் அவற்றின் ஒவ்வொரு கலத்தினுள்ளும் உள்ள கருவினுள் DNA (Deoxyribonucleic Acid) என்னும் ஓர் இரட்டை சுருளி(Double Helix) இழையினுள்