கிட்டத்தட்ட பத்து வருடங்கள் இருக்கும், அந்த மாயாவி வீரனை நான் பிரிந்து. கடைசியா ராணிக் கமிக்ஸில் மாயாவியினை சந்தித்தது ஈராயிரத்து-மூன்றில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவர் முதல்வர் அறையினுள்ளே. ஆண்டு எட்டு படிக்கும் மாணவன் ஒருவன் பாடசாலை நிறைவடையும் போது இசைக்கப்படும் பாடசாலைக் கீதத்திற்கு மரியாதை தருவதற்காக எழுந்து நின்று, தனது மேசையின் கீழ் உள்ள சிறிய தட்டில் ஒரு ராணிக்கமிக்ஸினை திறந்து ஒளித்து வைத்து களவாகப் படித்துக்கொண்டு நின்றான். அந்த நேரத்தில் அங்கு மாணவர்களைக் ஒழுங்கமைக்க நின்றிருந்த நான் அதனைக் கவனித்து, பாடசாலைக் கீதம் நிறைவடைந்ததும் நேராக அந்த மாணவனிடம் சென்று அவனை வெருட்டி அந்தப் புத்தகத்தினைப் பறித்து அவனை வீட்டுக்கு அனுப்பி விட்டு புத்தத்தினை மாணவர் முதல்வர்கள் அறைக்கு கொண்டு வந்தேன். புத்தகத்தின் அட்டையினை பார்த்ததும் இனம் புரியாத ஆர்வம். மாயாவியின் சாகசங்களுக்குள் சங்கமிக்க மனம் துடித்தது. அந்த மாணவர் முதல்வர் அறையினிலேயே ஒரு கதிரையினைப் போட்டு புத்தக்தினை வாசிக்கத் தொடங்கிவிட்டேன். அங்கு நின்ற என் நண்பர்கள் சிலரும் என்னோடு சேர்ந்து கொண்டார்கள். யாரோ ஒரு சின்னப் பையன் பாடசாலைக்குக் கொண்டு வந்த புத்தகத்தினை, அதுவும் மாணவர் முதல்வன் என்றும் அதிகாரத்தினை பிரயோகித்துப் பறித்து, நாங்கள் வாசிக்கும் அளவிற்கு மாயாவியும் ராணிக்கமிஸ்சும் எங்களைக் கவர்ந்திருந்தார்கள். மறுநாள் காலை அந்த சின்னப்பையன் மாணவர் முதல்வர் அறைவாசலில் நின்று புத்தகத்தினை கேட்டு கெஞ்சியதும், மனம் இரங்கி இனிமேல் பாடசாலையில் இப்படி வாசிக்க வேண்டாம் என அறிவுறுத்தி புத்தகத்தினை திருப்பிக் கொடுத்தது வேறுகதை.
பாடசாலைக் காலங்களில் மனம்கவர்ந்த வீரன் என்றால் அது முகமூடி மாயாவிதான். ஊதா நிறத்தில் முகமூடியுடன் உடம்புடன் ஒட்டிய உடையணிந்து, இடுப்பில் மண்டையோட்டு முத்திரையியுடன் கூடிய இடுப்புப் பட்டியும், அதில் இரண்டு பக்கங்களும் இரண்டு கைத்துப்பாக்கி கொங்கவிட்டபடியும், மண்டையோட்டு முத்திரையுடன் கூடிய மோதிரத்துடன், வெண்ணிறக் குதிரையில் மாயாவி தோன்றும் மனத்தில் ஒரு இனம்புரியாத திழைப்பு ஏற்பட்டதுண்டு. மண்டையோட்டுக் குகை, மண்டையோட்டு முத்திரை, மாயாவின் அழகான காதலி டயானா, துணிச்சலான நாய் டெவில் என மாயாவிக் கதைகளில் வரும் அனைத்து பாத்திரங்களும் கவரந்திருந்தது அன்று. பாடசாலைகளுக்கு கதைப் புத்தங்கள் கொண்டு வந்து வாசிக்கக்கூடாது என்னும் ஒரு வழக்கு இருக்கின்றது. அதையும் மீறி துணிச்சலாக கொண்டு வரும் நண்பர்களிடம் இருந்து பகிர்ந்து கொள்ளும் ராணிக்கமிக்ஸ் புத்தகங்களை வகுப்பில் பாடங்கள் நடைபெறும் போது மேசையின் கீழோ அல்லது புத்தகங்களின் நடுவினிலோ வைத்து திருட்டுத்தனாக மாயாவியின் கதைகளை வாசிப்பதில் அவாதிப்பிரியம் இருந்தது. அன்று கட்டுக்கட்டாக நண்பர்களிடம் கைமாறும் புத்தகங்கள் ஏராளம். பாடசாலைக் காலங்களில் மனதில் ஆழமாகப் பதிந்த விடயங்கள் என்றால் அவற்றில் மாயாவிக்கும் முக்கிய இடம் உண்டு. அன்று வாசித்த கதைகள் மறந்துவிட்டாலும் மாயாவியின் பாத்திரமும் அவரது சாகசங்களும் இன்றும் பசுமையாக இருக்கின்றது.
கடைசியா ஈராயிரத்து-மூன்றாம் ஆண்டில் வாசித்த புத்தகத்தின் பின்னர் ஒருதடவை கூட கண்ணில் தட்டுப்படவில்லை இந்த மாயாவியின் கதைகள். ஈராயிரத்து-மூன்றில் தொடங்கிய வாழ்க்கைப்பயண மாற்றங்களும், அந்தப் பாதையில் வேகமாகப் பயணிக்க வேண்டிய காரணங்களும் மாயாவியினை பிரிவதற்கு காரணமாக இருந்தாலும் தனது 500ஆவது இதழுடன் ராணிக்கமிக்ஸ் தனது பதிப்புக்களை நிறுத்திக் கொண்டதும் முக்கியமான காரணமாக அமைந்தது. 1984 ல் தொடங்கி, 2005 ம் ஆண்டு வரை, சுமார் 21 ஆண்டுகள், தடையின்றி வெளி வந்த சித்திரக்கதை பொக்கிஷம் ராணிக்கமிக்ஸ். ராணிக்கமிக்ஸ் பெரும்பாலான இதழ்கள் அமெரிக்க ஐரோப்பிய வரைகதைளில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டவை. இவற்றில் மாயாவியின் கதைகள் அனைத்தும் இளையோர் வட்டத்தினை அன்று கட்டிப்போட்டிருந்தது. 1939 ஆம் ஆண்டு லீ பாக் என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனைக் சித்திரக்கதையே இந்த மாயாவி கதைகளின் மூலம். இவை பெப்ரவரி 17, 1936 முதல் நாளாந்த செய்தித்தாளில் கருப்பு வெள்ளை சித்திரக் கீற்றாக வெளியாகியிருந்து. பின்னர் ராணிக்கமிக்ஸில் தமிழாக்கப்பட்டு வண்ணப்படங்களுடன் வெளியிடப்பட்டு இந்தக் கதைகள்.
பாடசாலைகளில் யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்து வாசிக்கும் போது மாணவர் முதல்வர்களிடம் மாட்டிக்கொண்டு சிலவேளை தண்டனைகளும் சிலவேளை எச்சரிப்புக்களும் வாங்கியது உண்டு. ஆனால் நானே மாணவ முதல்வனானபோது முறைகளை மீறும் சின்ன வகுப்பு மாணவர்கள் என்னிம் மாட்டும் போது மனதுக்கள் சிரிப்பும் பழைய அனுபவங்களின் மலர்ச்சியும் மனதினை மீண்டும் குளிர்விப்பதனை உணர்ந்ததும் உண்டு. அதுபோல அந்த நாட்களில் வாசித்த ராணிக்கமிக்ஸ் அம்புலிமாமா போன்ற கதைப்புத்தகங்கள் மீண்டும் எப்போதாவது கண்களில்படும் போது அன்று வகுப்புக்களில் திருட்டுத்தமாக வாசித்த அனுபங்கள் மெல்ல மனதினைத் தீண்டி நிச்சயமாக குளிர்விக்கும். எப்போதாவது பாடசாலைக்கு மீண்டும் சென்றுவர சந்தர்பம் கிடைத்தால் ஆண்டு எட்டு ஒன்பது படிக்கும் மாணவர்களிடம் சென்று கேட்கவேண்டும். இன்றும் அவர்களிடம் ராணிக்கமிக்ஸ் வாசிக்கும் பழக்கம் இருக்கின்றதா என்று. இன்றைய தொலைக்காட்சி, தொலைத்தொடர்பு வளர்ச்சிகள் பெரும்பாலும் மாயாவியினையும் ராணிக்கமிக்ஸினையும் மாணவர்களிடம் இருந்து அன்னியப்படுத்தி வைத்திருக்கக்கூடும். பார்ப்போம்…
Categories: பாடசாலை நாட்கள், பாதித்தவை
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
I am also a addict fan of maayavi comixes..but now i am very
I am also a reader of Maayavi raani comixes on once upon a time…but now i am not get that anywhere….is was very interested and imagination knowledges