கிட்டத்தட்ட பத்து வருடங்கள் இருக்கும், அந்த மாயாவி வீரனை நான் பிரிந்து. கடைசியா ராணிக் கமிக்ஸில் மாயாவியினை சந்தித்தது ஈராயிரத்து-மூன்றில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவர் முதல்வர் அறையினுள்ளே. ஆண்டு எட்டு படிக்கும் மாணவன் ஒருவன் பாடசாலை நிறைவடையும் போது இசைக்கப்படும் பாடசாலைக் கீதத்திற்கு மரியாதை தருவதற்காக எழுந்து நின்று, தனது மேசையின் கீழ் உள்ள சிறிய தட்டில் ஒரு ராணிக்கமிக்ஸினை திறந்து ஒளித்து வைத்து களவாகப் படித்துக்கொண்டு நின்றான். அந்த நேரத்தில் அங்கு மாணவர்களைக் ஒழுங்கமைக்க