கண்ணாடிக்குள் பிம்பம் அதை இவள் காட்டினாள்..
கேட்காத ஓர் பாடல் அதில் இசை மீட்டினாள்..
தெய்வத் திருமகளினைப் பார்த்துவிட்டு திரையரங்கினை விட்டு வெளியே வரும் விழிகளினோரம் ஈரம் வந்து குடை ஒன்று கேட்டதே.. விழிகளின் மீதிலே சிலதுளியும், உதட்டினில் மெலிதாய் ஒரு புன்னகையுமென திரையரங்கிலிருந்த வெளியே வருகின்ற அனைத்து முகங்களையும் அலங்கரிக்கச் செய்திருந்தது தெயவத்திருமகள். மீண்டும் ஒர் அழகான ஓவியம் தமிழ் சினிமாவில் தீட்டப்பட்டுள்ளது. முழுமையான படைப்பு ஒன்று. அத்தனை அம்சங்களும் நிறைந்திருந்து மனதினையும் நிறைத்திருந்தது இந்தப் படம்.
இதமான தென்றல் போன்று தெய்வத்திருமகள் தொடங்கும் போது திரையரங்கு அதிரும் அளவிற்கு நிறைந்திருந்த விசில் சத்தங்கள் ஐந்தே நிமிங்களில் எங்கே எனக் காணாமல் போய்விடுகின்றது. மனதினை முழுமையாக இலயிக்க வைத்து நகைச்சுவை, காதல், பாசம், தவிப்பு, ஏமாற்றம், கோபம், கனிவு என அத்தனை உணர்வுகளையும் கட்டித்தோய்தது எந்தவிமாக தொய்வும் இன்றி இருந்த இடத்தில் இருந்து அசையாமல் இரசிக்க வைத்தது இந்த தெய்வத்திருமகள். யாரும் எதிர்பார்க்காத முடிவுகளையும் அத்தோடு தமிழ் சினிமாவின் சராசரிப் பார்வையில் இருந்து விலகி ஒரு உண்மையான ரசிகனின் எதிர்பார்ப்புகளை உணர்வுகளோடு தந்திருந்தது இந்த தெய்வத்திருமகள். கதையோடு இணைந்த நகைச்சுவை, கதையோடு பயணிக்கும் பாடலும் இசையும் என இந்த ஓவியத்திற்கு அழகு சேர்த்திருக்கின்ற வண்ணங்கள் ஏராளம்.
இவற்றை எல்லாம் கடந்து..
தெய்வத்திருமகளில் வருகின்ற அனைத்து கதாபாத்தரங்களினது நடிப்பும் அவை படத்தில் பயன்படுத்தப்பட்ட அளவும் நேர்த்தியாகவும் மனதினில் ஏதோ ஒரு விதத்தில் பாதிப்பினை ஏற்படுத்தத் தக்கதாகவும் இருந்தது. ஆனாலும் திரைப்படம் தொடங்கியதில் இருந்து இரண்டு கதாபாத்தரங்கள் மனதினை ஆழமாக ஊடுருவியிருந்தது. ஒன்று Dr. சியான் விக்ரம்; மற்றயவர் பேபி சாரா(Baby Sara). Dr. சியான் விக்ரமின் நடிப்பினைப் பற்றி சொல்லவே தேவையில்லை. மனவளர்ச்சி குறைவான, குழந்தை மனமுடைய பாசமான அப்பாவாக (அம்மாவாகவும்) தனது கதாநாயகத் தன்மையினை சிறிதும் காண்பிக்காமல் கதாபாபத்திரமாகவே மாறி மீண்டும் ஒருமுறை தன்னை நிறந்த நடிகனாக நிரூபித்துள்ளார். ஆனால் அவரின் நடிப்பினையே விஞ்சி எல்லோர் மனங்களிலும் சிம்மாசனம் இட்டுள்ளது சாரா என்றும் ஒரு குட்டி ஏஞ்சல். அழகு, நளினம், நடிப்பு அத்தனையும் இந்த குட்டி ஏஞ்சலிடம் அடங்கும்.
இரண்டு புருவங்களுக்கு இடையில் மெல்லியதாக திருநீறும் செந்தூரமும் இரண்டு கோடுகளாக வைத்துக்கொண்டு சாரா தோன்றும் போதேல்லாம் ஏஞ்சலோ எனத் தோன்றவைக்கும் அழகு. தன் தந்தையோடு மழலைத் தமிழில் பேசும் போது G.V பிரகாசின் இசையினையும் மௌனிக்க வைக்கும் ஒர் இனிமை திரையரங்கு எங்கும் எதிரொலிக்கும். ( டப்பிங் சப்தம்தான், ஆனாலும் அந்த ஏஞ்யலுக்கு பொருத்தமான டப்பிங்). இத்தனையையும் விஞ்சி இறுதியாக நீதிமன்றக் கூண்டில் நிக்கும் விக்ரமோடு கண்களினாலும் சைகையினாலும் சுகம் விசாரித்து எங்கே போனாய் எனக் கேட்கும் போது.. திரையரங்கினுள் தங்கள்கண்களில் கண்ணீர்த்துளி எட்டிப் பார்க்காதவர்கள் இருந்திருக்கவே மாட்டார்கள். சில நிமிட நடிப்பில் அத்தனை பாசத்தினையும் ஏக்கத்தினையும் கண்களினூடாக திரைக்கு கொண்டு வந்திருந்தது அந்தக் குட்டி ஏஞ்சல். அந்த இடத்தில் விக்ரமா சாராவா நன்றாக நடித்தார்கள் என எவரிடம் கேட்டாலும் முதலாவதாக சுட்டும் விரல் சாராவினை நோக்கியதாகவே இருக்கும். நடிப்பினாலும் அழகினாலும் எல்லோரையும் கட்டிப் போட்டது அந்தக் குட்டி ஏஞ்சல்.
ஐந்து வயதான இந்த ஏஞ்சல் உண்மையில் ஒரு விளம்பரப் படங்களில் படிக்கும் மும்பை குழந்தை. ஒன்றரை வயதில் இருந்து இன்றுவரை (ஐந்து வயது வரை) இதுவரை 60 இற்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் நடித்துள்ளது இந்தக் குழந்தை. அத்தோடு மூன்று திரைப்படங்களுக்கும் ஒப்பந்தபம் செய்யப்பட்டுள்ளார் இந்தக் குட்டி ஏஞ்சல்.
அடடா தெய்வம் இங்கே வரமானதே
அழகாய் வீட்டில் விளையாடுதே..
முன்னர் தெய்வத்திருமகன் என்றுதான் பெயரிடப்பட்டிருந்தது இந்தத் திரைப்படம். ஆனால் வெளிவரும் போது தெய்வத்திருமகள் என்றுதான் வெளியிட்டிருந்தார்கள். அழகான குழந்தை ஒன்று வரமாக வந்து வீட்டில் விளையாடினால் அது தெய்வதின் குழந்தை தானே.. தெய்வத்திருமகள் அந்தக் குட்டி ஏஞ்சல் சாரா!!! இந்த ஏஞ்சலுக்கு விருது நிட்சயம்.
Categories: எனது பார்வையில், பாதித்தவை
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
of course…! vickram and sarah made it exceptionally good.. although the movie is kind of remake of i am sam!