கண்ணாடிக்குள் பிம்பம் அதை இவள் காட்டினாள்.. கேட்காத ஓர் பாடல் அதில் இசை மீட்டினாள்.. தெய்வத் திருமகளினைப் பார்த்துவிட்டு திரையரங்கினை விட்டு வெளியே வரும் விழிகளினோரம் ஈரம் வந்து குடை ஒன்று கேட்டதே.. விழிகளின் மீதிலே சிலதுளியும், உதட்டினில் மெலிதாய் ஒரு புன்னகையுமென திரையரங்கிலிருந்த வெளியே வருகின்ற அனைத்து முகங்களையும் அலங்கரிக்கச் செய்திருந்தது தெயவத்திருமகள். மீண்டும் ஒர் அழகான ஓவியம் தமிழ் சினிமாவில் தீட்டப்பட்டுள்ளது. முழுமையான படைப்பு ஒன்று. அத்தனை அம்சங்களும் நிறைந்திருந்து மனதினையும் நிறைத்திருந்தது இந்தப்
இரண்டு நாட்களுக்கு முன்னர் முகப்புத்தகத்தில் பரபரப்பாக ஒரு செய்தி; யாழ்பாணத்து இளம் பெண் ஒருவர் பல இலட்சங்கள் முகப்புத்தகத்தின் ஊடாக, புலம்பெயர்ந்த தமிழ் வாலிபர்களை ஏமாற்றி சம்பாதித்தாக இரண்டு இணையத்தளங்களில் வெளிவந்த தகவல் முகப்புத்தகத்தில் பரவியிருந்தது. முகப்புத்தகத்தின் ஊடாக “பல இளம் வாலிபர்களை” “ஏமாற்றினாராம்” என அந்த இளம் பெண்ணின் மீது கடுமையான விமர்சனங்களினையும் அந்த பெண்ணின் பல வித்தியாசமான கோணங்களில் எடுக்கப்பட்ட “அந்தரங்கமான (snapshots) படங்களையும்” தாங்கி வந்திருந்தன அந்த இரண்டு இணையத்தளங்களும். மறுநாள் இன்னும்