அவ மூக்கு மேல வேர்வையாகணும்
இல்ல நாக்கு மேல வார்த்தையாகணும்
அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகணும்
இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகணும்..
மெல்ல கண்களை மூடியபடி சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயிலில் நிலக்கீழ் பாதைவழி வீடு நோக்கிய பயணம் ஒன்றில்தான் எனக்கு அறிமுகமாகியது இந்தப் பாடல். காதுகளுக்குள் தணிந்த குரலில் ஐபோனில் ஒலித்துக் கொண்டிருந்த இலங்கையின் வெற்றி வானொலிதான் எனக்கு அறிமுகப்படுத்தியது. பல்லவியிலேயே என் மனதினை ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டது பாடல். பாடல் தொடரத் தொடர என்னை முழுமையாக கட்டிக்கொண்டது இந்த சேவற்கொடி திரைப்படப்பாடல். என்ன ஒரு வித்தியாசமான வரிகள்.. மெல்ல கிறங்கித் தாளம் போடவைக்கும் இசை. கற்பனைகளை கட்டி ஒன்று சேர்த்து கண்முன்னே பல விம்பங்களை கொண்டு வந்து சேர்க்கும் கவித்துவம். அழுத்தமா காதலி மேல் கொண்ட காதலை சொல்லிச் செல்லும் எளிமையான வரிகள். காதலையும் குழந்தைத் தனத்தையும் அப்படியே ஒன்றாகக் குழைத்து தந்திருக்கும் பாடகனின் குரல். எல்லாமே அருமையாக இருக்கின்றது.
“கம்பி மத்தாப்பு கண்ணு கண்ணு.. வண்ண மத்தாப்பு பொண்ணு பொண்ணு..” பாடலின் பல்லவியிலேயே மெல்ல கால்கள் தாளம் போட ஆரம்பித்து விடுகின்றன. அத்தோடு மெல்ல உதட்டில் புன்னகைப் பூவினையும் மலரவைத்து விடுகின்றன பாடல் வரிகள். யாரடா இந்தக் கவிஞர் என்று தேடினால்.. ஆறு முறை தேசிய விருது வாங்கி கவிப்பேரரசர் முன்னே வந்து நிற்கின்றார். காதலியினை பல்லவியிலேயே வித்தியாசமாக வர்ணித்து எழுதியிருக்கின்றார் வைரமுத்து. படபடவென இமைகளை வெட்டி வெட்டி சிரிக்கும் பெண்களின் கண்கள் எத்தனை அழகு என்பதனை பார்த்து இரசித்தவர்களுக்கு புரியும். அந்த அழகினை கம்பி மத்தாப்பின் சிரிப்பினால் ஞாபகப்படுத்திவுடனேயே என்னையும் அறியாமல் உதடுகள் சிரித்து விட்டன. வீட்டு வாசலில் ஒலிக்கும் அவளி வளையல்களின் ஓசை அழகு அவள் நடந்த வீதிகளில் ஒலிக்கும் கொலுசுச் சத்தம் கூட அழகு.. அவளின் அவஸ்தைகூட அழகு.. வைரமுத்து சின்னச் சின்ன வசனங்களில் இத்தனை அழகையும் கண்முன்னே கொண்டு வந்ததுதான் இன்னும் அழகு.
அவ வளைவி ஒலிக்கும் வாசல் அழகு
அவ கொலுசு ஒலிக்கும் வீதி அழகு
ஒரு விக்கல் எடுக்கிற போதும்
தும்மி முடிக்கிற போதும்
அவஸ்தையிலும் அவள் அழகு
குத்தம் குறையிலும் மொத்த அழகு…
எளிமையான தமிழில் இவ்வளவு அழகாக வர்ணித்து எழுத யாரால் முடியும் வைரமுத்துவைத் தவிர.
இசையால் ஆர்ப்பாட்டமே இல்லாமல் M.L.R.கார்த்திகேயனின் குரலுக்கு பின்னணி சேர்த்திருக்கின்றார் சத்யா.
இதமான தாளம் ஒன்றினை, ஒவ்வொரு சொற்களுக்கும் இணைத்து கார்த்திகேயனின் குரலுக்கு இணையாக விட்டிருக்கின்றார் சத்யா. இரண்டு மெல்லிய கம்பிகளும் ஒரு அகப்பையும் கொண்டு அதில் சின்னதாக தம்புரா போன்று செய்து பாலர் வகுப்புக் காலங்களில் கைவேலையாக செய்து விளையாடிய ஞாபகம். அந்த சின்னத் தம்புராவில் ஒரு கம்பியினை மெல்ல கிள்ளி விடும்போது அது டிங்ங்ங்… என்று ஒலிக்கும். இரண்டு கம்பிகளையும் மாறிமாறி கிள்ளிவிட்டால் அவை வெவ்வேறு சுருதியில் டிங்டி.. டிங்டி.. டிங்ங்ங்…. என்று மாறி மாறி சுருதி சேர்ந்து ஒலிக்கும். அதுபோல உடைந்த பலூன் துண்டினால் ஒரு தகர டப்பாவின் வாய்ப்பகுதியை இறுக மூடிக் கட்டி அந்த பலூனினைக் கிள்ளிவிட்டால் ஒரு சத்தம் வரும்… இந்த இரண்டு சத்தங்களையும் ஒத்த ஒலியினை சுருதி சேர்த்தது போன்று ஆரம்பிக்கின்றது இந்தப் பாடலின் இசை. அந்த இசை அப்படியே பாடல் முழுவதும் பின்னணித் தாளமா கையாண்டிருக்கின்றார் சத்யா. பாடலின் இடையே வருகின்ற ஸக்ஸபோனின் இசையும் அதைத் தொடர்ந்து வருகின்ற ஆங்கில வரிகளும் வேறு ஒரு பரிமாணத்திற்கு இரசனையை மாற்றினாலும் உடனடியாகத் தொடங்கும் கார்திகேயனின் குரல் மீண்டும் பாடல்வரிகளில் கவனத்தை ஈர்க்கச் சொல்லுகின்றது.
இதனை விடவும் கார்த்திகேயனின் குரலில் சேர்ந்தொலிக்கும் ஒரு மழலைத் தனமும் காதலனின் சந்தோச உணர்வுகளும் பாடலின் உயிர்நாடியாக பாடல் மூழுதும் இயங்குகின்றது. “அவ மூக்கு மேல வேர்வையாகணும்..” என்னும் போது கார்த்திகேயனின் குரலில் எதிரொலிக்கும் மழலைத் தனம் அடுத்த சில வரிகளில் அப்படியே காதலனின் சந்தோச உணர்வுகளை பரப்புகின்றது.
தூங்கி எழுந்த பிள்ளை அழகு
அவள் சோம்பல் முறிச்சா கொள்ளை அழகு
அவள் சொல்லுக்கடங்கா முடியும்
சூடிக் கசங்கிய மலரும்
என்னை இழுக்கும் கண்ண மயக்கும்
தெத்து பல்லு கண்டு பித்து பிடிக்கும்..
இந்த வைரமுத்துவின் இந்த வரிகளை ஒருதரம் கார்த்திகேயனின் குரலில் கேட்டுப்பாருங்கள்.. அப்படியே மயக்கும் தன்மை புரியும். அனுபவிச்சு பாடியிருப்பார் போல. மனதினை எங்கோ கொண்டு சென்றுவிட்டார்…
அப்படியே பாடலில் உறைந்திருந்துவிட்டு பாடல் முடியும் போது மெல்லக் கண்ணைத் திறந்து பார்த்தேன்.. என் முன்னால் இரயிலில் இருந்த சீனத்து அழகி என்னையே பார்த்து மெல்ல உதடுகளை மூடி சிரித்துக் கொண்டிருந்தாள். (வேறு ஒன்றும் இல்லை கண்களை மூடி மெல்லத் தலையினை ஆட்டி கால்களால் தாளம் போட்டுக்கொண்டிருந்தால் யார்தான் பார்த்து சிரிக்க மாட்டார்கள்). அவளுக்கும் சிரிப்பு வந்திருக்கும் போல.. சிரித்துக்கொண்டே மெல்லக் கண்களை வெட்டினாள்.. என் காதுகளுக்குள் மீண்டும் வைரமுத்துவின் வசனங்களை கார்த்திகேயன் பாடிக்கொண்டிருந்தார்..
கம்பி மத்தாப்பு கண்ணு கண்ணு
வண்ண மத்தாப்பு பொண்ணு பொண்ணு
தூரத்தில பார்த்தா காதல் வாராது
பக்கத்துல பார்த்தா காமம் வாராது
மானும் இல்ல மயிலும் இல்ல
தூணும் இல்ல குயிலும் இல்ல
இருந்தும் மனது விழுந்து போச்சுது
அவ மூக்கு மேல வேர்வையாகணும்
இல்ல நாக்கு மேல வார்த்தையாகணும்
அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகணும்
இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகணும்
அழுக்கு துணிய உடுத்தி
அவ தலுக்கி நடக்கும் போது
சுழுக்கு பிடிச்ச மனசு
அட சொக்குது சொக்குதடா
சுத்தமான தெருவில்
அவ துப்பி செல்லும் போதும்
எச்சில் விழுந்த இடத்தில்
மனம் நிக்குது நிக்குதடா
தூங்கி எழுந்த பிள்ளை அழகு
அவள் சோம்பல் முறிச்சா கொள்ளை அழகு
அவள் சொல்லுக்கடங்கா முடியும்
சூடிக் கசங்கிய மலரும்
என்னை இழுக்கும் கண்ண மயக்கும்
தெத்து பல்லு கண்டு பித்து பிடிக்கும்
மூக்கு மேல வேர்வையாகணும்
இல்ல நாக்கு மேல வார்த்தையாகணும்
அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகணும்
இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகணும்
விளக்குமாரு பிடிச்சி
அவ வீதி பெருக்கும் போது
வளைவு நெளிவு பாத்து
மனம் வழுக்க பாக்குதடா
குளிச்சி முடிச்சி வெளியில்
அவ கூந்தல் துவட்டும் போது
தெறிச்சு விழுந்த துளியில்
நெஞ்சு தெறிச்சு போகுதடா
அவ வளைவி ஒலிக்கும் வாசல் அழகு
அவ கொலுசு ஒலிக்கும் வீதி அழகு
ஒரு விக்கல் எடுக்கிற போதும்
தும்மி முடிக்கிற போதும்
அவஸ்தையிலும் அவள் அழகு
குத்தம் குறையிலும் மொத்த அழகு
மூக்கு மேல வேர்வையாகணும்
இல்ல நாக்கு மேல வார்த்தையாகணும்
அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகணும்
இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகணும்
Categories: இசை, எனது பார்வையில், பார்வை
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
nice