அவ மூக்கு மேல வேர்வையாகணும் இல்ல நாக்கு மேல வார்த்தையாகணும் அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகணும் இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகணும்.. மெல்ல கண்களை மூடியபடி சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயிலில் நிலக்கீழ் பாதைவழி வீடு நோக்கிய பயணம் ஒன்றில்தான் எனக்கு அறிமுகமாகியது இந்தப் பாடல். காதுகளுக்குள் தணிந்த குரலில் ஐபோனில் ஒலித்துக் கொண்டிருந்த இலங்கையின் வெற்றி வானொலிதான் எனக்கு அறிமுகப்படுத்தியது. பல்லவியிலேயே என் மனதினை ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டது பாடல். பாடல் தொடரத் தொடர என்னை