ஒரு கையில் சின்ன மரப் பொச்சுக்களாலான கூட்டினைத் தாங்கிய படியும் மறு கையில் சொட்டச் சொட்ட இரத்தம் வழிந்த படியும் அவசரமாக வீட்டினை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தாள் வாசுகி. “ஒரு கெல்ப் பண்னேண்டா சுதா..” வீட்டுக்குள் தன் ஒரு வயதுக் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த சுதாகரை அழைந்தாள். என்ன வாசு எனத் திரும்பிப் பார்த்த சுதாகர் ஏங்கிப்போனான். “என்னடி இது.. வாசு..” அவள் கைகளில் சொட்டிக் கொண்டிருந்த இரத்தத் துளிகளைப் பார்த்து பதறிப் போய் அவள் கைகளைப் பிடித்தான் சுதாகர்..
“எனக்கு ஒன்றும் இல்லடா.. பாவம் இந்த அணில் குஞ்சுடா.. மரத்தில இருந்து தவறி கூட்டோட நிலத்தில விழுந்திட்டுதடா.. இந்தக் குஞ்சின்ர தாய் மரத்துக்கு மேல இருந்து கீச்சு கீச்சு என்று கத்திக் கொண்டே இருந்துதடா.. அதன் குரலக் கேட்கவே… பா…வமா இருந்துதடா.. அதுதான் போய் மரத்தில திருப்பி எடுத்து வைக்கலாம் என்று விழுந்த மரக்கூட்டை எடுத்தனான்டா.. உடனே இந்தக் குஞ்சு என் கைவிரலைக் கடிச்சிட்டுதடா..” என்றாள் வாசுகி.
அவள் கையினைப் பிடித்து இரத்தம் வழிந்த இடத்தினை மெல்லத் துடைத்துவிட்டு கொண்டிருந்த சுதாகர், ஒருகணம் அவளை உற்றுப் பார்த்தான். மறுகணம் அவன் பார்வையை மாற்றி “உனக்கு என்னடி வேற வேலையே இல்லையா.. நான் இங்க நம்மட குழந்தை வைச்சுக் கொண்டிருக்கிறன். ஆனா நீ போய் அந்த அணிற் குஞ்சுக்கு இரக்கப்பட்டு கையில கடி வாங்கிக் கொண்டு வந்திருக்கிறாய்..” என்று கடுமையாக அவளை கடிந்து கொண்டான் சுதாகர். அப்படியே எழுந்துபோய் டெற்றோளினை சற்று இளம் சூட்டான தண்ணீருக்குள் கலந்து கொண்டு வந்து காயம் பட்ட அவள் விரலினை மெல்லக் கழுவிவிட்டான் சுதாகர்.
“காயம் வலிக்குதாடா.. நீயும் பேசாதடா… அங்க பாருடா.. அந்த அணில் எவ்வளவு கஷ்டப்பட்டு கத்திக்கொண்டே இருக்குது.. கேட்கவே பரிதாவமா இருக்குதடா.. சப்போஸ்.. கீழ விழுந்த இந்த அணில் குஞ்சினை ஏதாவது பூனையோ நாயோ கடிச்சா.. பாவம்தானடா.. இந்தக் குட்டியின்ற தாய நினைச்சுப்பாரு.. அதுதான்டா.. எடுத்து மேலவிட்டு விடுவம் என்று போனான்டா..” என்றாள் இரு கண்களிலும் கனிவும் இரக்கமும் தவழ.
“அதுக்கு.. இப்படியா.. ” அவள் கைவிரலில் சின்ன பன்டேஸ்ட்டினைச் சுற்றிக்கொண்டே கேட்டான்.
சின்னப் புன்னகை மட்டும் அவள் உதடுகளில் மலர்ந்தது அப்போது.
“ஒருக்கா இந்தக் கூட்டினையும் அணிற் குஞ்சினையும் மரத்தில வைச்சுவிடன்டா சுதா.. அச்சாப் பிள்ளையல்லா..” என்று கனிந்தாள் வாசுகி.
“அதுசரி.. நாங்களும் கையில கடிவாங்க உங்களுக்கு அவ்வளவு விருப்பமா??” என்று சிரித்துக் கொண்டே அந்த கூட்டினை தன் கையிலெடுத்தான் சுதாகர். அணிற்குஞ்சு தன் சக்தி எல்லாவற்றையும் திரட்டி கஸ்டப்பட்டுக் கீச் கீச் என்று கத்திக் கொண்டே இருந்தது. அப்படியே அதனை ஆட்டாமல் அசைக்காமல் பக்குமாக எடுத்து சென்று மரத்தின் கீழ் வைத்திருந்த ஏணியில் ஏறி கிளைகளுக்கு இடையே அந்தக் கூட்டினை வைத்தான் சுதாகர். வாசுகி அந்த ஏணியினை கீழ் இருந்து இறுக்கமாகப் பிடித்து கொண்டாள். இனிமேல் விழாது அந்தக் கூடு என்பதனை உறுதிப்படுத்திய பின்னர் மெல்ல மரத்திலிருந்து கீழே இறங்கினான் சுதாகர்.
“தாங்ஸ்டா சுதா…”
“என்னத்திற்கு.. ”
“தன் குஞ்சினை காப்பாற்றியதற்கு அந்தத் தாய் சொல்லியது உனக்குக் கேட்கவில்லையா..” என்று சிரித்தாள் வாசு.. சுதாகர் மேலே திரும்பிப் பார்த்தான்.. குட்டியும் தாயும் ஒன்றாக சேர்ந்து மெல்லமாக கத்திக்கொண்டிருந்தன. ஆனால் அந்தக் கீச் சத்தத்தில் ஒரு சந்தோசம் இருப்பது அவனுக்குள் புரிந்தது.
“அதுசரி.. இப்ப எல்லாம் உங்களுக்கு அணிலின்ர பாசையெல்லாம் புரியுது போல..” என்று நக்கலாக வாசுகியைப் பார்த்துக் கேட்டான் சுதாகர்..
சிரித்தாள் வாசுகி. வீட்டை நோக்கித் திரும்பி போகப் போனவளின் கையைப் பிடித்து மெல்ல நிறுத்தினான் சுதாகர்.
“என்னடா…”
“ஒன்றும் இல்லையே..” என அவள் கண்களை உற்றுப் பார்த்து கண்களுக்குள் சிரித்தான் சுதாகர்.
“என்னடா நடந்தது உனக்கு…”
“ஒன்றும் நடக்கவில்லையே..”
“அப்ப ஏன்னடா இப்படிப் பார்க்கிறாய் புதுசா..”
“இல்லாடா.. ஒன்றும் இல்லடா.. ஒன்று தெரியுமா.. உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்டா வாசு.. ஆனா.. அதுக்கு ஏன்ன காரணம் ஏன் பிடிச்சிருக்கு என்று காரணம் கேட்டால் எனக்கு தெரியாதுடா..” என்று அவள் கண்களைப் பார்த்துச் சொன்னான் சுதாகர்.
“கண்ணா… ஒருத்தருடம் நாம பழகும் போது அவர்களிடம் ஏதோ ஒன்று பிடிச்சிருக்கும்.. அந்தப் பிடிப்பு நம்பளை அவங்களை நோக்கி ஈர்க்கும்டா.. அது ஈர்ப்புடா.. சில பேருக்கு அழகா இருக்கிற அல்லது கெட்டித்தனமா நடக்குறவங்களைப் பார்த்தால் இந்த ஈர்ப்பு வருவதுண்டு. ஆனால் அவற்றை எல்லாம் காதல் ஏன்று அங்க நினைச்சிடுவதும் உண்டு. காதல்.. அது எந்த எதிரப் பார்ப்பும் இல்லாமல் இந்த ஈர்ப்புக்களை எல்லாம் தாண்டி மனதுக்கு எல்லையற்ற சந்தோசத்தைக் கொடுக்கும் பாரு.. அதுதாண்டா காதல்.. காதல் இதுதான்.. இப்படிதான் இருக்கும் என்று யாரும் விளங்கப்படுத்தவோ அல்லது வரைவிலக்கணப்படுத்தவோ முடியாதுடா.. அவங்களே அவங்களுக்குள்ள உணரணும்டா.. உன்னை நான் காரணமே தெரியாமல் விரும்ப ஆரப்பிச்சனே.. அந்தக் கணமே இதுதான் காதலா என்று உணர்ந்தனான்டா.. காரணத்தினைக் தேடி ஒருத்தரை கணக்குப் போட்டு விரும்புறத்திற்கு காதல் ஒரு மனக்கணக்கு இல்லடா.. அது மனசும் மனசும் பேசும் ஒரு பாசையடா.. ஒருத்தரை நமக்கு ஒரு விசயத்திற்காக பிடிச்சுப் போகுதென்று சைச்சுக் கொள்ளு.. அவங்களிடம் அந்த எதிர்பார்த்த விடயம் இல்லாமல் போகும் போது அல்லது அது குறையும் போது அந்த விருப்புக் கூட வெறுப்பாக மாறக்கூடும்டா.. எதிப்பார்பும் காரணமும் தெரியாமல் வாற காதல்தான்டா உண்மையா நினைச்சு நிக்கும்டா.. அதுதான் உண்மையும் கூட.. இப்ப கூடப் பாரேன்.. எனக்கு கையில இரத்தம் வடியுது என்று தெரிஞ்ச உடனமே உன் கண் மெல்லக் கலங்கியதுதானே.. அதை மறைக்க நீ கஸ்டப்பட்டு என்னைப் பேசினாயே.. அது என்னடா.. எதனாலடா உன் கண்கள் கலங்கியது?? அதுதான்டா சொன்னான்டா.. மனசும் மனசும் பேசும் பாசையடா காதல்.. காதலைக் காதலிப்பவர்களடா நாங்கள்.. ஐ லவ்யுடா கண்ணா..” என அவனை அணைத்தாள் வாசுகி.
“ஐ லவ்யு டூ டா” என வாசுவை மெல்ல அணைத்து நெற்றியில் ஒரு முத்தம் தந்தான் சுதாகர். மரக்கிளையில் இருந்து அணில்கள் இரண்டும் இந்தக் காதலர்களை பார்த்து மனதார நன்றி சொல்லிக் கீச்சிட்டன… வீட்டுக்குள் இருந்து அவர்களின் காதல் குழந்தையும் மெல்லச் சிரித்தது. அந்தச் சிரிப்பு அவர்கள் காதுகளுக்கும் கேட்கவே சுதாகர் சொன்னான்.. “do you know one thing..?”
“என்னடா..?
“Having a child is surely the most beautifully irrational act that two people in love can commit இல்லையா வாசு….”
“சத்தியமாடா…”
காதலைக் காதலிப்பவர்களுக்கு காதல் என்றுமே புதுப் புது சந்தோச வர்ணங்களை வாழ்க்கைப் பாதையில் தெளித்துக் கொண்டே செல்லும்…
Categories: எனது பார்வையில், கதை, சிறுகதை
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
Leave a Reply